புத்தர் தங்கியிருந்த இடங்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கௌதம புத்தர் பிறந்த, வளர்ந்த, ஞானம் அடையத் தவமிருந்த, அடைந்த ஞானத்தை பிக்குகள், பிக்குணிகள் மற்றும் பொது மக்களிடம் உபதேசம் செய்த இடங்கள், இறுதியில் பரிநிர்வாணம் அடைந்த இடங்களின் பட்டியல்:
- லும்பினி தோட்டம்: புத்தர் பிறந்த இடம், கபிலவஸ்து, நேபாளம்
- கபிலவஸ்து: புத்தர் வளர்ந்த இடம்
- புத்தகயா: புத்தர் ஞானம் அடைந்த இடம், பிகார், இந்தியா
- வாரணாசி :
- சாரநாத்: முதன் முதலில் புத்தர் தனது உபதேசத்தைத் துவக்கிய இடம்.
- சிராவஸ்தி நகரத்தில் அனாதபிண்டிகன் அமைத்த ஜேடவனத்தில் புத்தர் அடிக்கடி தனது சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்யும் இடம். இவ்விடத்தில் புத்தர் தாம் இறப்பதற்கு முன் இருபது ஆண்டுகள் தங்கியிருந்த்தார்.[1]
- ராஜகிரகம்: தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம். ராஜகிரகத்தில் சங்கம் அமைத்து நெடுங்காலம் தங்கினார்.
- சங்காசியா:சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாயாருக்கு அருளி பின்னர் பூமியில் இறங்கிய இடம்.
- வைசாலி நகரம்: புத்தர் ஒரு குரங்கிடமிருந்து தேன் பெற்ற இடம்.
- பவா நகரம்: கௌதம புத்தர் சுந்தன் அளித்த உணவை உண்ட இடம்
- குசிநகர்: புத்தர் பரிநிர்வாணம் அடைந்த இடம்.[2]