புனித ஆன் மகளிர் கல்லூரி, மெகுதி பட்டினம்
புனித ஆன் மகளிர் கல்லூரி என்பது இந்தியாவின் ஹைதராபாத்தின் மெகதிப்பட்டினம், சந்தோஷ் நகர் காலனியில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும். நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கல்லூரி, தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ளது [1]
సెయింట్ ఆన్స్ కాలేజ్ ఫర్ వుమెన్ | |
வகை | தனியார் தன்னாட்சி மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1981 |
சார்பு | தெலங்காணா மகளிர் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | அந்தோனம்மா |
துணைத் தலைவர் | ஸ்ரீ.தயா குமாரி |
முதல்வர் | முனைவர் பி.அம்ருதா |
அமைவிடம் | 12-2-823, A/45, புனித ஆன் சாலை, சந்தோஷ் நகர்,மெகுதி பட்டினம் , , , 500028 , 17°23′33″N 78°26′13″E / 17.3925301°N 78.4369866°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம், தெலுங்கு |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
வரலாறு
தொகுஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கிபுரம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த தாதிபத்ரி ஞானம்மா[2] என்ற சாதாரண பெண்ணால் நிறுவப்பட்ட புனித ஆனின் சகோதரிகளின் சங்கம் என்ற தன்னார்வ சேவை நிறுவனத்தின் மூலம், ஏழை இளம் பெண்களை அறிவூட்டுவதற்கும் கல்வி கற்பதற்கும் வேண்டி ஆரம்பிக்கப்பட்டதே இக்கல்லூரியாகும்.
சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 2800 க்கும் மேற்பட்ட மாணவர்களும் 100 விரிவுரையாளர்களும் இருக்கின்றனர்.
அங்கீகாரம்
தொகுதெலங்காணா மகளிர் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு[3] தன்னாட்சி அந்தஸ்தும் வழங்கியுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் (NAAC) நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் பேரில், மூன்றாவது சுழற்சியில் 'ஏ+' தரம் வழங்கப்பட்டு மறுஅங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.[4]
விருதுகள்
தொகுதொடக்கம் முதலே உஸ்மானியா பல்கலைக்கழக தரவரிசைகளில் சிறப்பிடம் பெற்று வரும் இக்கல்லூரி, பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கங்களைத் தவிர, கல்லூரியும் மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.[5]
2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவினால் (இந்தியா) "திறன்மிக்க கல்லூரி" (CPE) என்று பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியானது கலை, சமூக அறிவியல், வணிகம், வணிக மேலாண்மை மற்றும் அறிவியல் ஆகியவற்றில் இடைநிலை முதல் முதுநிலை வரையிலான படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது [6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "St Anns Degree & PG College". Archived from the original on 8 September 2009. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "Stannes, Our Foundress". Archived from the original on 22 January 2011. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
- ↑ "யுஜிசி சட்டம் 1956 இன் பிரிவு 2 (எஃப்) & 12 (பி) இன் கீழ் கல்லூரிகள்".
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 12 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்பிரவரி 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "செயின்ட் ஆன்ஸ் மகளிர் கல்லூரி".
- ↑ "St Anns Degree & PG College". Archived from the original on 19 April 2009. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.