புனித காளை வழிபாடு பண்டைய பண்டைய அண்மை கிழக்கு நாடுகளில் புகழ் பெற்று விளங்கியது. மேற்குலகின் விவிலியம் நூலில், யூதர்கள் தங்கத்தால் வடித்த புனிதக் காளைச் சிலையைப் போற்றி வழிபட்ட செய்திகள் குறித்துள்ளது. சினாய் தீபகற்பத்தில் பெரிய அளவில் யூத மக்கள் தங்கத்திலான புனிதக் காளைச் சிலையை வழிபட்டனர். யூதர்களின் இச்செயலை இறைத்தூதர் மோசே மறுத்ததுடன், புனிதக் காளைச் சிலையை உடைத்துப் போட்டார்.

சிந்து வெளி தொல்லியல் களத்தின் காளை, யானை மற்றும் காண்டாமிருகம் உருவம் பொறித்த முத்திரைகள், கிமு 2500 - 1900
17ஆம் நூற்றாண்டின் காளை சிற்பம், மைசூர்
காளை வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும்
காளை முகத்துடன் நந்தி தேவர்
காளையின் தலை, அனதோலியன் பண்பாட்டு அருங்காட்சியகம், அங்காரா
ஐக்கிய இராச்சியத்தில் கிபி 18 அல்லது 19ம் நூற்றாண்டில் காளையின் திமிளை கட்டிப்பிடித்து அடக்கி, இளைஞர்கள் தங்கள் வெற்றியைப் பறைச்சாற்றுவர்

இந்தியத் துணைகண்டத்தின், சிந்து சமவெளி நாகரீக காலத்தில் மக்கள் காளையை வழிப்பட்ட செய்தி, அங்கு அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த காளை முத்திரைகள் மூலம் தெரியவருகிறது.

இந்து சமயத்தில்

தொகு

இந்து சமயத்தில் புனித காளையானது நந்தி தேவராகப் போற்றப்படுகிறது. மேலும் காளை சிவ பெருமானின் வாகனமாகவும், கயிலையின் காவல் தெய்வாகவும் உள்ளது. அனைத்து சிவன் கோயில்களில் புனித காளை அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறது. சைவ சமயத்தில் காளையானது சிவகணங்களின் தலைவராக அறியப்படுகிறார்.

சிவபெருமானுக்கு நடைபெறும் பிரதோச பூஜையின் போது காளைக்கும் சேர்த்து பூஜை நடத்தப்படுகிறது.

ராசி மண்டலத்தில் ரிசபம் எனும் காளை விண்மீன் கூட்டம், இரண்டாமிடத்தில் உள்ளது.

பண்டைய காலத்தில்

தொகு

பண்டைய சுமேரியா நாகரீகத்தில் வளைந்த கொம்புகள் கொண்ட காளையைச் சந்திரனாக மக்கள் வழிபட்டனர்.[1]

எகிப்தில் காளையை அப்பீஸ் தேவனுடனும், பின்னர் ஒசைரிஸ் தேவனுடனும் ஒப்பிட்டு வணங்கப்பட்டது. காளை எகிப்திய பூசாரிகளின் தெய்வமாக குறிக்கப்பட்டது.

கிரீட் தீவுகளின் மின்னோனியன் நாகரீக காலத்தில் காளைகள் மையப் பங்கு வகித்தது. புனித காளைகளின் தலைகள் மற்றும் கொம்புகள் அரன்மனை முகப்புகளில் பொருத்தப்பட்டிருந்தது.

தற்கால ஈரான் எனப்படும் பாரசீகத்தின் சமயமான சரத்துஸ்திர சாத்திரங்களில் பசு மற்றும் காளை வழிபாடுகள் குறித்துள்ளது.

தெற்காசியா

தொகு

சிந்து சமவெளி பண்பாட்டுக் காலத்தில் காளை முத்திரைகள் கிடைத்துள்ளது.

இந்து தொன்மவியலில் நந்தி எனும் காளை சிவ கனங்களின் தலைவராக அறியப்படுகிறார்.

சைப்பரஸ்

தொகு

சைப்பிரஸ் தீவுகளில் சமயச் சடங்களின் போது பூசாரிகள் சுடுமண்னால் செய்யப்பட்ட காளையின் தலையை முகமுடியாக அணிந்தனர்.[2] புதிய கற்காலத்திய காளைக் கொம்புகளின் கற்சிற்பங்கள் சைப்ரஸ் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கி பி 2 முதல் 4ஆம் நூற்றாண்டு வரை உரோமைப் பேரரசில் குடிமக்கள், பேரரசின் நன்மைக்காக புனிதக் காளைகளை வணங்கி பலியிடப்பட்டனர். காளை, நேத்தோ எனும் கடவுளருக்கு புனிதமாக இருந்தது என்றும், அக்கடவுளரைக் கவரும் வகையில் காளை பலியிடப்பட்டது என மாக்ரோபியஸ் எனும் தொல்லியல் அறிஞர் பட்டியலிட்டுள்ளார்.[3]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Jules Cashford, The Moon: Myth and Image 2003, begins the section "Bull and cow" pp 102ff with the simple observation, "Other animals become epiphanies of the Moon because they look like the moon.... the sharp horns of a bull or cow were seen to match the pointed curve of the waxing and waning crescents so exactly that the powers of the one were attributed to the other, each gaining the other's potency as well as their own."
  2. Burkert 1985
  3. Macrobius, Saturnalia, Book I, XIX

உசாத்துணை

தொகு
  • Burkert, Walter, Greek Religion, 1985
  • Campbell, Joseph Occidental Mythology "2.The Consort of the Bull", 1964.
  • Hawkes, Jacquetta; Woolley, Leonard: Prehistory and the Beginnings of Civilization, v. 1 (NY, Harper & Row, 1963)
  • Vieyra, Maurice: Hittite Art, 2300-750 B.C. (London, A. Tiranti, 1955)
  • Jeremy B. Rutter, The Three Phases of the Taurobolium, Phoenix (1968).
  • Heinrich Schliemann, "Troy and its Remains" (NY, Arno Press, 1976) pp. 113–114.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_காளை&oldid=4041157" இலிருந்து மீள்விக்கப்பட்டது