புனித வேலண்டைன்

உரோமை நகரின் புனிதர்

புனித வேலண்டைன் (இலத்தீன், Valentinus) என்பவர் பலராலும் அறியப்படும் மூன்றாம் நூற்றாண்டின் உரோமை நகரின் புனிதர் ஆவார். உலகின் பல நாடுகளில் இவரின் விழா நாளான பிப்ரவரி 14 வேலன்டைன் நாள் என இவரின் பெயரால் அழக்கப்பட்டு, காதலர்கள் மற்றும் காதலுக்கான நாளாக கொண்டாடப்படும் வழக்கம் நடுக் காலம் முதலே உண்டு. இவரின் பெயர் மற்றும் இவர் உரோமை நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஃபிலாமினியாவில் பிப்ரவரி 14 அன்று கொல்லப்பட்டார் என்பதையும் தவிர இவரைப்பற்றிய வேறெந்த தகவலக்ளுக்கும் நம்பத்தகுந்த சான்றுகள் இல்லை. புனித வேலண்டைன் என்று ஒரு புனிதரா அல்லது அதே பெயரில் இரு புனிதர்கள் உள்ளனரா என்பதும் உறுதியற்றதாக உள்ளது. இவரின் வரலாற்றை எழுதிய பலர் தரும் தகவல்கள் நம்பமுடியாததாகவும் என்று பின்னர் சேர்க்கப்பட்டவைகளாகவும் இருக்கலாம். இந்த காரணங்களுக்காக இவரின் விழா நாள் 1969இல் திருத்தப்பட்ட உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம்பெறவில்லை.[2] ஆனாலும் "பிப்ரவரி 14 அன்று ஃபிலாமினியாவில் வழியாக மில்வியான் பாலத்திற்கு அருகில் கொல்லப்பட்ட மறைசாட்சி வாலெண்டினுஸ்" என்னும் பட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் தனித்திருச்சபைகளின் வணக்கத்திற்காய் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களில் பட்டியலில் இவரின் பெயர் உள்ளது.[3]

புனித வேலண்டைன்
புனித வேலண்டைன், கன்னி மரியிடமிருந்து செபமாலையினை பெருகின்றார்.
ஓவியர்: மூன்றாம் டோவிட் டெனிர்ஸ்
ஆயர் மற்றும் மறைசாட்சி
இறப்புபாரம்பரியப்படி சுமார் கி.பி 269[1]
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
திருவிழாபிப்ரவரி 14 (ஆங்கிலிக்கம் மற்றும் லூதரனியம்)
ஜூலை 30 (கிழக்கு மரபுவழி திருச்சபைகள்)
சித்தரிக்கப்படும் வகைபறவைகள்; உரோசாக்கள்; முடக்குவாதம் அல்லது வலிப்பு வந்த ஒரு குழந்தையோடு; ஆயரின் தலை வெட்டப்படுவது போல; வாள் ஏந்திய குருவாக; சூரியனோடு; குருடரை குணமாக்குவது போல[1]
பாதுகாவல்திருமண உறுதி, மயக்கம், தேனீ வளர்ப்பு, திருமணம், காதல், கொள்ளைநோய், வலிப்பு நோய், முடக்குவாதம்[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Jones, Terry. "Valentine of Rome". Patron Saints Tom. Archived from the original on 2010-04-01. பார்க்கப்பட்ட நாள் 2007-02-14.
  2. Calendarium Romanum Libreria Editrice Vaticana, 1969), p. 117
  3. "Die 14 februarii memoria Romae via Flaminia iuxta pontem Milvium, sancti Valentini, martyris". See Martyrologium Romanum, Libreria Editrice Vaticana, 2001, p. 141 (பிப்ரவரி 14).
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_வேலண்டைன்&oldid=3564473" இலிருந்து மீள்விக்கப்பட்டது