புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோயில்
புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
அருள்மிகு அண்ணாமலையார் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவிடம்: | புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பவானிசாகர் |
மக்களவைத் தொகுதி: | நீலகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | அண்ணாமலையார் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] மூன்று நிலைக்கோபுரம் நன்னீராட்டுப்பெருவிழா 20 சனவரி 1997 திங்கட்கிழமையன்று நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2] மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டஇக்கோயிலின் கருவறையில் மூலவர் இலிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறை முன்பாக வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் செங்கோட்டு வேலவரும் உள்ளனர். முன் மண்டபத்தில் மாணிக்கவாசகர், ஆடல்வல்லான், சிவகாமியம்மை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், நான்முகன் உள்ளனர். திருச்சுற்றில் நவக்கிரகங்கள் மற்றும் சண்டிகேசுவரர் சன்னதிகள் உள்ளன.
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)