புயேயி மக்கள்
புயேயி மக்கள் (Bouyei people) என்பவர்கள் தெற்கு சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களின் சனத்தொகை 25 இலட்சமாகும். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் 11வது பெரிய இனக்குழுவினர் ஆவர்.
சீனாவில் ஒரு புயேயி பெண் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
சீனா 2,870,034 (2010)[1] வியட்நாம் 3,232 (2019)[2] | |
மொழி(கள்) | |
புயேயி பொழி • மாண்டரின் மொழி | |
சமயங்கள் | |
சிகோங்கிசம் • பௌத்தம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சுவாங் |
புயேயி மக்கள் பெரும்பாலும் தெற்கு குயிசூ, யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் வாழ்கின்றனர். வடக்கு வியட்நாமில் ஏறத்தாழ 3,000 புயேயி மக்கள் வாழ்கின்றனர். அங்கு அவர்கள் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 54 இனக்குழுக்களில் ஒன்றாவர். மேலும் புயேயி இனக்குழு பல்வேறு துணைக்குழுக்களைக் கொண்டுள்ளது.[3]
வசிப்பிடம்
தொகுபுயேயி மக்கள் பெரும்பாலும் தெற்கு குயிசூ, யுனான் மற்றும் சிச்சுவான் மாகாணங்களில் வாழ்கின்றனர். வடக்கு வியட்நாமில் ஏறத்தாழ 3,000 புயேயி மக்கள் வாழ்கின்றனர்.
மொழி
தொகுபுயேயி மக்கள் பெரும்பாலும் புயேயி மொழியை பேசுகின்றனர். புயேயி மொழி அதன் சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்டுள்ளது, இது 1950 களில் மொழியியலாளர்களால் இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டதுடன், மாண்டரின் சீனத்தை எழுத வடிவமைக்கப்பட்ட பின்யின் அமைப்பைப் போன்ற எழுத்துமுறை மரபுகளுடன் உருவாக்கப்பட்டது.
வரலாறு
தொகுபுயேயி மக்கள்குய்சோவின் சமவெளிகளின் பூர்வீக மக்கள் ஆவர். சீனாவின் பழமையான இனக்குழுக்களைச் சேர்ந்த இவர்கள் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வாழ்கின்றனர். டாங் வம்சத்தை நிறுவுவதற்கு முன்பு, புயேயி மற்றும் சுவாங் இனக்குழுக்கள் ஒன்றாக அறியப்பட்டது; இரு இனக்குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகமாகி, 900 ஆம் ஆண்டிலிருந்து அவை இரண்டு வெவ்வேறு குழுக்களாக இருந்தன. குயிங் வம்சம் உள்ளூர் தலைவர்களின் அதிகார முறையை ஒழித்து, அதன் இடத்தில் இராணுவ அதிகாரிகளுக்கு அதிகாரத்தை வழங்கியது. இது உள்ளூர் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது நிலம் ஒரு சில நில உரிமையாளர்களின் கைகளில் மட்டுமே இருந்தது, இதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. 1797 இல் வாங் நாங்சியன் தலைமையிலான நான்லாங் கிளர்ச்சியின் போது, புயேயி மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர், இதனால் அவர்களில் பலர் தொலைதூர வியட்நாமுக்கு குடிபெயர்ந்தனர்.
பண்பாடு
தொகுபல புயேயி மக்கள் விவசாயம் மேற்கொள்கின்றனர். விவசாயிகள் பொதுவாக அரிசி, தினை, கோதுமை, உருளைக்கிழங்கு, சோளம், தேயிலை, பட்டு போன்ற பல வகையான பயிர்களை பயிரிடுகின்றனர். புயேயி மக்கள் இப்பகுதியில் இடைநிலை வணிகர்களாகவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது மாறிவரும் பொருளாதாரங்கள் காரணமாக, புயேயி மக்கள் சிறிய, பெரிய அளவிலான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.[4] புயேயி கைவினைப்பொருட்களும், உடைகளும் இப்பகுதி முழுவதும் புகழ்பெற்றது. புயேயி மக்கள் பூர்வீகமாகவும் ஹான் பண்பாட்டிலிருந்தும் பெறப்பட்ட பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். ஏப்ரல் 8 அன்று கொண்டாடப்படும் ஒரு பூர்வீகத் திருவிழா, எருதுகளை கௌரவிக்கவும், விவசாய நடவடிக்கைகளில் அவற்றின் பங்களிப்பைக் குறிக்கவும் ஆண்டுதோறும் கொண்டாட்டப்படுகிறது. ஆண்டுதோறும் சூன் 6 அன்று மூதாதையர் வழிபாட்டிற்கான ஒரு முக்கியமான பாரம்பரிய நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-1 全国各民族分年龄、性别的人口" (XLS). Stats.gov.cn. பார்க்கப்பட்ட நாள் 31 August 2017.
- ↑ "Report on Results of the 2019 Census". General Statistics Office of Vietnam. பார்க்கப்பட்ட நாள் 1 May 2020.
- ↑ . Guiyang: 贵州民族出版社 [Guizhou Nationalities Press]. 2002.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ Olson, James Stuart (1998). An Ethnohistorical Dictionary of China (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. pp. 32–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-28853-1.