புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

கங்காதீசுவரர் கோயில் (Purasawalkam Gangadeeswarar Temple) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் புரசைவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். கோயிலின் மூலவர் கங்காதீசுவரர் ஆவார். தாயார்: ஸ்ரீ பங்கசாம்பாள்.[1] உற்சவர்கள்: நடராசர் மற்றும் சிவகாமி. இத்திருக்கோயில் காசிக்கு நிகரான பெருமை கொண்டது ஏனக் கூறப்படுகிறது.[2] இரகுகுல வம்சத்தைச் சேர்ந்த சகரன் என்பவரது வம்சத்தில் தோன்றிய பகீரதன் என்பவர் பிரதிசுட்டை செய்த 108-ஆவது சிவலிங்கத்தின் திருத்தலம் இதுவாகும். இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன.

கங்காதீசுவரர் கோயில்
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் is located in சென்னை
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோயில் (சென்னை)
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் is located in தமிழ் நாடு
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில்
புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவில் (தமிழ் நாடு)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவு:புரசைவாக்கம்
ஏற்றம்:53 m (174 அடி)
ஆள்கூறுகள்:13°05′05″N 80°15′16″E / 13.084645°N 80.254325°E / 13.084645; 80.254325
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=232

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இந்த கோயில் குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது.[3]

கோயிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரை கோயில் குளத்தில் சேமிக்க மழைநீர் இணைப்புகள் அமைக்கவும், அவற்றில் வடிகட்டிகள் அமைத்து சுத்தமான நீரை சேமிக்கவும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.[4]

அமைவிடம்

தொகு

கடல்மட்டத்திலிருந்து சுமார் 36 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில் அமைவிட புவியியல் ஆள்கூறுகள்: 13.084932°N, 80.254294°E (13°05'05.8"N, 80°15'15.5"E) ஆகும்.

போக்குவரத்து

தொகு

சாலைப் போக்குவரத்து

தொகு

சென்னை நகரின் முக்கிய வியாபாரத் தலமான புரசைவாக்கத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. முக்கிய சாலைகளால் எளிதில் வந்து செல்லும் வகையில் மாநகரப் பேருந்து வசதிகளால் கோயில் இணைக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கங்காதீசுவரர் கோயில் தெரு, அழகப்பா சாலை, ஈ. வெ. இரா. நெடுஞ்சாலை ஆகிய முக்கிய சாலைகள் இக்கோயிலின் அருகாமையில் அமைந்துள்ளன.

தொடருந்து போக்குவரத்து

தொகு

சென்னை மத்திய தொடருந்து நிலையம், சென்னை மத்திய மெட்ரோ இரயில் நிலையம், சென்னை பூங்கா தொடருந்து நிலையம், நேரு பூங்கா மெட்ரோ நிலையம், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் ஆகிய முக்கிய இரயில் நிலையங்கள் கோவிலுக்கு அருகாமையில் எளிதில் அணுகும் தூரத்தில் உள்ளன.

கோயிலின் மற்ற தெய்வங்கள்

தொகு

சிறீ சத்ய நாராயணப் பெருமாள், சிறீ பிரம்மா, பாணலிங்கம், சோமாசுகந்தர், தட்சிணாமூர்த்தி, ஊன்றீசுவரர், வைத்தீசுவரர், குருந்த மல்லீசுவரர், காசி விசுவநாதர், துர்க்கை, மகா கணபதி, சண்முகர், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சித்தி சமேத உச்சிசுட்ட கணபதி, சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதி, நால்வர், நாகராசர், பாகீரதன், சேக்கிழார், குலச்சிறை நாயனார், பைரவர் என்று பல தெய்வங்கள் வெவ்வேறு சந்நிதிகளில் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். 63 நாயன்மார்களின் வெண்கலச் சிலைகள் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு சன்னதியும் உள்ளது. நந்தி தேவரும் வீற்றிருக்கிறார்.

பூசைகள்

தொகு

கால சந்தி பூசை, உச்சிகால பூசை, சாயரட்சை பூசை, அர்த்தசாம பூசை, பள்ளியறை பூசை போன்ற பல பூசைகள் இங்கு நடைபெறுகின்றன. காலையில் 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பயன் பெறும் ஊர்கள்

தொகு

புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், அயனாவரம், கெல்லிசு, பெரம்பூர், ஜமாலியா, புளியந்தோப்பு, சூளை, கண்ணப்பர் திடல், தவ்டன், யானைகவுனி மற்றும் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  2. "காசிக்கு நிகரான கங்காதீஸ்வரர் திருத்தலம்!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/spiritual/temples/100101-#:~:text=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!,-ADVERTISEMENT&text=spiritual-,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D!,%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.. பார்த்த நாள்: 6 September 2022. 
  3. "புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குளம் 6 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தெப்ப திருவிழா நடைபெறவில்லை: பக்தர்கள் அதிருப்தி". www.dinakaran.com. Archived from the original on 2022-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  4. "புரசை கங்காதீஸ்வரர் கோயில் குளம் சீரமைப்பு பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.