புரூணையின் வெளிநாட்டு உறவுகள்
புரூணையின் வெளிநாட்டு உறவுகள் (Foreign relations of Brunei) புரூணை முழுச்சுதந்திரம் பெற்ற ஒரு வாரத்தில் இருந்தே தொடங்குகிறது. 1984 ஆம் ஆண்டு சனவரி 7 இல் புரூணை தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பில், வெளிநாட்டு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆசியாவின் உறுப்பினராக இணைந்தது. ஐக்கிய நாடுகள் அவையில் அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் இணைந்தது. இவை தவிர இசுலாமிய ஒருங்கிணைப்பு நிறுவனம், ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு மற்றும் நாடுகளின் பொதுநலவாயம் போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இணைந்து செயலாற்றியது. 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தை நடத்தியது. 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்று மாநாட்டிற்குச் சிறப்பு சேர்த்தது
புரூணை நாடானது, தூதாண்மை நோக்குடன் வெளிநாடுகளில் தனக்காக தூதரங்களை நிறுவியுள்ளது. சிங்கப்பூர் நாட்டுடன் நெருங்கிய நட்புறவை கொண்டு நாணயப் பரிமாற்றம் மற்றும் இராணுவ உறவுகளைப் பேணி வருகிறது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்து அமைப்பில் இருக்கும் நாடுகளுடன் நட்பு கொண்டிருப்பதையும் தாண்டி இசுலாமிய நாடுகள் மற்றும் அராபிய நாடுகளுடன் மிகநெருங்கிய நட்புறவையும் புரூணை நட்புறவு கொண்டிருந்தது.
அனைத்துலக அமைப்புகள்
தொகுஐக்கிய இராச்சியத்தின் நாடுகளின் பொதுநலவாயம்[1]அமைப்பில் உறுப்பினர் மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு உறுப்பினர், ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினர் மற்றும் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நான்கு நாடுகள் கூட்டணியான இசுலாமிய ஒருங்கிணைப்பு நிறுவனம்[2] ஆகியனவற்றில் இணைந்து முக்கியமான உறுப்பு நாடாக [3] செயலாற்றியது. 1995[4] ஆம் ஆண்டில் உலக வர்த்தக நிறுவனம்[5] அமைப்பிலும் உறுப்பினரானது. 2009 ஆம் ஆண்டு முதல் பிலிப்பீன்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் திட்டத்தில் கையெழுத்திட்டு விவசாயம், வர்த்தகம், முதலீடு போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி வருகிறது[6]
புரூணை மற்றும் பொதுநலவாய அமைப்புகள்
தொகுபுரூணை முழுச்சுதந்திரம் அடைந்த பின்னர் 1984 ஆம் ஆண்டு சனவர் 1 முதல் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறது. தவிர 1988 முதல் பிரித்தாணியாவின் பாதுகாப்பு அமைப்பில் ஒரு நாடாகவும் அங்கம் வகிக்கிறது.
லெசோத்தோ, மலேசியா, சுவாசிலாந்து மற்றும் தொங்கா நாடுகளுடன் சேர்ந்து தன் சொந்த மன்னரை புரூணை சுல்தான் என்றாகியுள்ளது.
இருதரப்பு உறவுகள்
தொகுஆத்திரேலியா
தொகுஆத்திரேலியாவும் புரூணையும் தங்களுக்குள் நல்லிணக்க உறவுகளைப் பேணி வருகின்றன. 1945 இல் சப்பானிய ஆக்ரமிப்பில் இருந்த ஆத்திரேலியர்களை புரூணை விடுவித்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் ஒரு நினைவுச் சின்னத்தை மௌரா கடற்கரையில் காணலாம். இரு நாடுகளும் பசிபிக் கடந்த வர்த்தகம் என்ற உடன்படிக்கையிலும் கூட்டாகக் கையெழுத்திட்டு 2010 முதல் இயங்குகின்றன. ஆசிய பசிபிக் பொருளாதார ஒருங்கிணைப்பு இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
புரூணைக்கு கான்பரா நகரில் ஒரு தூதரகமும், ஆத்திரேலியாவுக்கு பண்டர் செரி பெகாவான் நகரில் ஒரு தூதரகமும் இருக்கிறது. பொதுவாலய நாடுகள் அமைப்பில் இருநாடுகளும் முழு உறுப்பினர்களாக இருக்கின்றன[7]. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் 1984 ஆம் ஆண்டு முதல் வலுவடைந்து வருகின்றன. புரூனையில் முதன் முதலில் தூதரகம் அமைத்ததது ஆத்திரேளியா என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[7][8][9]
வங்காள தேசம்
தொகுபெரும்பான்மை இசுலாமியர்களைக் கொண்ட இவ்விரு நாடுகளும் இரு தரப்பு உறவுகளில் மிகச்சிறந்து விளங்குகின்றன. கூட்டுசேரா இயக்கம் , இசுலாமிய ஒருங்கிணைப்பு நிறுவனம், பொதுநலவாயம் ஆகியனவற்றில் இரண்டு நாடுகளும் உறுப்பினராக இருக்கின்றன. மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வங்காள தேசத்தையும் ஒரு நாடாக புரூணை அங்கீகரித்தது. 1985 இல் வங்காள தேசம் புரூணையில் தனக்கான தூதரகத்தை நிறுவியது. 1988 முதல் 1997 வரை நிதிச்சுமை காரணமாக இத்தூதரகம் மூடப்பட்டு இருந்தது. புரூணை தனக்கான தூதரகத்தை டாக்காவில் நிறுவியுள்ளது. பிராந்திய மற்றும் அனைத்துலக அமைப்புகளில் வங்காள தேசத்தின் பங்கேற்புக்கு புருணை ஆதரவளிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "MOFAT, Commonwealth". Ministry of Foreign Affairs and Trade of Brunei Darussalam. 30 March 2010. Archived from the original on 28 January 2010.
- ↑ "US DOS" (30 March 2010). "MOFAT, UN". Ministry of Foreign Affairs and Trade of Brunei Darussalam. Archived from the original on 18 February 2008.
- ↑ "MOFAT, OIC". Ministry of Foreign Affairs and Trade of Brunei Darussalam. 30 March 2010. Archived from the original on 18 June 2008.
- ↑ "MOFAT, WTO". Ministry of Foreign Affairs and Trade. 30 March 2010. Archived from the original on 25 June 2008.
- ↑ "MOFAT, BIMP-EAGA". Ministry of Foreign Affairs and Trade. 30 March 2010. Archived from the original on 21 June 2008.
- ↑ Marvyn N. Benaning (29 April 2009) RP, "Brunei seal agri cooperation deal"[தொடர்பிழந்த இணைப்பு], Manila Bulletin
- ↑ 7.0 7.1 "Australia-Brunei Relations". Ministry of Foreign Affairs and Trade (Brunei). Archived from the original on 24 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Jatswan S. Sidhu (22 December 2009). Historical Dictionary of Brunei Darussalam. Scarecrow Press. pp. 29–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7078-9.
- ↑ "Sultan of Brunei heading to Australia". The Australian. 29 April 2013. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.