ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
தலைமையகம்சிங்கப்பூர்
வகை பொருளாதார மன்றம்
உறுப்பு நாடுகள்
Leaders
 •  APEC Host Economy 2014 சீனா
 •  Executive Director Dr. Alan Bollard
உருவாக்கம் 1989
Website
www.apec.org
2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா
2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்
2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா

ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.

வரலாறுதொகு

ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள்தொகு

தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சேர்ந்த ஆண்டு
  ஆத்திரேலியா 1989
  புரூணை 1989
  கனடா 1989
  இந்தோனேசியா 1989
  சப்பான் 1989
  மலேசியா 1989
  பிலிப்பீன்சு 1989
  நியூசிலாந்து 1989
  சிங்கப்பூர் 1989
  தென் கொரியாவட கொரியா 1989
  தாய்லாந்து 1989
  ஐக்கிய அமெரிக்கா 1989
  சீனக் குடியரசு[2] 1991
  ஆங்காங்[3] 1991
  சீனா 1991
  மெக்சிக்கோ 1993
  பப்புவா நியூ கினி 1993
  சிலி 1994
  பெரு 1998
  உருசியா 1998
  வியட்நாம் 1998
தெற்கு டராவா
Haricharan

Vijay Yesudas

Karthik

Ranjith Vijay Prakash Tippu Krish Benny Dayal

Rahul Nambiar

Devan Ekambaram
நாசர்

விக்ரம்

ஆர்யா

T M Karthik Balaji Venugopal DQ GV Buma Wilders
ஏ. எல். விஜய் x x x x x x

  இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]

அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8],   எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.

சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்தொகு

வருடம் # திகதிகள் நாடு நகரம் இணையத்தளம்
1989 1st நவம்பர் 6–7   ஆஸ்திரேலியா கான்பரா
1990 2nd ஜூலை 29–31   சிங்கப்பூர் சிங்கப்பூர்
1991 3rd நவம்பர் 12–14   தென்கொரியா சியோல்
1992 4th செப்டெம்பர் 10–11   தாய்லாந்து Bangkok
1993 5th நவம்பர் 19–20   ஐக்கிய அமெரிக்கா சியாட்டில்
1994 6th நவம்பர் 15   இந்தோனேசியா Bogor
1995 7th நவம்பர் 19   ஜப்பான் ஒசாகா
1996 8th நவம்பர் 25   பிலிப்பீன்சு Manila and Subic
1997 9th நவம்பர் 24–25   கனடா வான்கூவர்
1998 10th நவம்பர் 17–18   மலேசியா Kuala Lumpur
1999 11th செப்டெம்பர் 12–13   நியூசிலாந்து ஓக்லாந்து
2000 12th நவம்பர் 15–16   புருணை Bandar Seri Begawan [2] பரணிடப்பட்டது 2003-03-14 at the Library of Congress Web Archives
2001 13th அக்டோபர் 20–21   சீனா சங்காய்
2002 14th அக்டோபர் 26–27   மெக்சிக்கோ Los Cabos
2003 15th அக்டோபர் 20–21   தாய்லாந்து Bangkok
2004 16th நவம்பர் 20–21   சிலி சாந்தியாகோ [3]
2005 17th நவம்பர் 18–19   தென்கொரியா Busan
2006 18th நவம்பர் 18–19   வியட்நாம் ஹனோய் [4] பரணிடப்பட்டது 2006-02-25 at the வந்தவழி இயந்திரம்
2007 19th செப்டெம்பர் 8–9   ஆஸ்திரேலியா சிட்னி [5] பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம்
2008 20th நவம்பர் 22–23   பெரு Lima [6] பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம்
2009 21st நவம்பர் 14–15   சிங்கப்பூர் சிங்கப்பூர் [7]
2010 22nd நவம்பர் 13–14   ஜப்பான் Yokohama [8]
2011 23rd நவம்பர் 12–13   ஐக்கிய அமெரிக்கா Honolulu [9] பரணிடப்பட்டது 2011-03-26 at the வந்தவழி இயந்திரம்
2012 24th செப்டெம்பர் 9–10   ரஷ்யா Vladivostok [10] பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம்
2013 25th அக்டோபர் 5–7   இந்தோனேசியா பாலி [11]
2014 26th நவம்பர் 2014   சீனா பீஜிங்
2015 27th நவம்பர் 2015   பிலிப்பீன்சு Davao City
2016 28th நவம்பர் 2016   பெரு Lima
2017 29th 2017   வியட்நாம் ஹனோய்

மேற்கோள்கள்தொகு

  1. (உலக வங்கி)
  2. சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
  3. ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
  4. APEC 'too busy' for free trade deal, says Canberra
  5. இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
  6. "Extend a hand to an absent friend". 2007-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-09 அன்று பார்க்கப்பட்டது.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-11-14 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-11-14 அன்று பார்க்கப்பட்டது.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-10-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-09 அன்று பார்க்கப்பட்டது.
  9. [1]

வெளி இணைப்புகள்தொகு