புசான் (Busan, 부산 or 釜山, அலுவல்முறையாக புசான் பெருநகரம்) தலைநகரம் சியோலுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரும் பெருநகரமாகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 3.6 மில்லியன் ஆகும்.[1] பெருநகரப் பகுதியில் அண்மித்த ஊர்களையும் சேர்த்து, மக்கள்தொகை ஏறத்தாழ 4.6 மில்லியனாக உள்ளது. இது தென்கொரியாவின் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக விளங்குகிறது; சரக்குப் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது மிகுந்த போக்குவரத்துமிக்க துறைமுகமாக விளங்குகிறது.[3] கொரிய நாவலந்தீவின் தென்கிழக்குக் கோடியில் இந்த நகரம் அமைந்துள்ளது. நக்டோங் ஆற்றுக்கும் சுயோங் ஆற்றுக்கும் இடையேயுள்ள குறுகிய பள்ளத்தாக்குகளில் நகரத்தின் நெரிசலானப் பகுதிகள் அமைந்துள்ளன. நிர்வாகத்திற்காக இது ஓர் சிறப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புசான் பெருநகரப் பகுதி 15 மாவட்டங்களாகவும் ஒரே கவுன்டியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

புசான்
부산시
புசான் பெருநகரம்
  transcription(s)
 • அங்குல்부산
 • Hanja
 • Revised RomanizationBusan Gwangyeoksi
 • McCune-ReischauerPusan Kwangyŏksi
Official logo of புசான்
புசான் சின்னம்
தென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது
தென்கொரியாவின் நிலப்படத்தில் புசான் அழுந்தக் காட்டப்பட்டுள்ளது
நாடுதென் கொரியா தென் கொரியா
மண்டலம்இயோங்னம்
மாவட்டங்கள்15
அரசு
 • வகைமேயர்-நகரமன்றம்
 • மேயர்சு பியங்-சூ (சேனுரி கட்சி)
 • மன்றம்புசான் பெருநகர மன்றம்
 • தேசிய பிரதிநிதி
 - தேசிய சட்டமன்றம்
18 / 299
6.0% (மொத்த இடங்கள்)
18 / 245
7.3% (தொகுதி இடங்கள்)
பட்டியல்
பரப்பளவு
 • பெருநகர் பகுதி767.35 km2 (296.28 sq mi)
மக்கள்தொகை
 (2012)[2]
 • பெருநகர் பகுதி35,90,101
 • அடர்த்தி4,700/km2 (12,000/sq mi)
 • பெருநகர்
81,74,702
 • Dialect
Gyeongsang
அஞ்சல் குறியீடு
600-010, 619-963
Area code(+82) 051
மலர்ஆக்கத்திசு மலர்
மரம்ஆக்கத்திசு
பறவைநீள் சிறகு கடற்பறவை
இணையதளம்busan.go.kr (ஆங்கிலம்)

புசானில் 2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏபிஈசி 2005 கொரியா போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. 2002 உலகக்கோப்பை காற்பந்து நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏலத்தில் பங்கேற்றது.[4]

ஏயுண்டே கடற்கரை
குவாங்கன் பாலம்

புசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.[5]

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Busan: Population and area of Administrative units". Dynamic Busan: Busan Metropolitan City. பார்க்கப்பட்ட நாள் 2010-03-24.
  2. [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Retrieved 2013-07-01.
  3. http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=ah2Znx0vQ580 Empty Containers Clog Busan Port as Trade Slumps, bloomberg.com – March 3, 2009 02:12 EST
  4. People's Daily Online (2005-11-14). "Pusan to declare bid to host 2020 Olympic Games". பார்க்கப்பட்ட நாள் December 8, 2006.
  5. "Largest Department Store - Guinness World Records Blog post - Home of the Longest, Shortest, Fastest, Tallest facts and feats". Community.guinnessworldrecords.com. 2009-06-29. Archived from the original on 2011-09-23. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புசான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புசான்&oldid=3563966" இலிருந்து மீள்விக்கப்பட்டது