புரோடாக்டினியம்(V) அயோடைடு
புரோடாக்டினியம்(V) அயோடைடு (Protactinium(V) iodide) என்பது PaI5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் அயோடினும் சேர்ந்து இந்த ஆலைடு உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
17497-66-4 | |
பண்புகள் | |
I5Pa | |
வாய்ப்பாட்டு எடை | 865.56 g·mol−1 |
தோற்றம் | கருப்பு ஊசி போன்ற படிகங்கள்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோடாக்டினியம்(V) புளோரைடு புரோடாக்டினியம்(V) குளோரைடு புரோடாக்டினியம்(V) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | புரோடாக்டினியம்(III) அயோடைடு தோரியம்(IV) அயோடைடு யுரேனியம்(IV) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுரோடாக்டினியமும் அயோடினும் அல்லது புரோடாக்டினியம்(V) குளோரைடு, புரோடாக்டினியம்(V) புரோமைடு, புரோடாக்டினியம்(V) ஆக்சைடுடன் சிலிக்கான் நான்கையோடைடு வினைபுரிந்தால் புரோடாக்டினியம்(V) அயோடைடு உருவாகிறது.[2]
வினைகள்
தொகு150 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் ஆண்டிமனி மூவாக்சைடு சேர்மத்துடன் வினைபுரிந்து PaOI3 மற்றும் PaO2I போன்ற அயோடைடு ஆக்சைடுகளைக் கொடுக்கிறது.[2] இது கலப்பு ஹாலைடுகளை PaBr3I2 பெற 350 °செல்சியசு வெப்பநிலையில் புரோட்டாக்டினியம்(V) புரோமைடுடன் வினைபுரிந்து PaBr3I2 போன்ற கலப்பு ஆலைடுகளைக் கொடுக்கிறது. 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் மோனோகார்பைடுடன் வினைபுரிந்து நான்கையோடைடை அளிக்கிறது.[3]
புரோடாக்டினியம்(V) அயோடைடை சிதைவு வினைக்கு உட்படுத்தி தூய புரோடாக்டினியம் தனிமத்தை அரிசுடிட்டு வான் கிராசு என்ற செருமனிய வேதியியலாளர் உருவாக்கினார்.[4][5]
300 °செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம்(V) அயோடைடை நீண்ட நேரத்திற்கு சூடுபடுத்தினால் அயோடின் வாயு வெளியேறுகிறது.[1]
- PaI5 → PaI3 + I2
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 V. Scherer, F. Weigel, M. Van Ghemen (December 1967). "Evidence for the existence of protactinium(III) in solid state" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (12): 589–595. doi:10.1016/0020-1650(67)80033-3. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0020165067800333. பார்த்த நாள்: 2021-09-25.
- ↑ 2.0 2.1 D. Brown, J. F. Easey, P. J. Jones (1967). "Protactinium(V) iodides" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical: 1698–1702. doi:10.1039/j19670001698. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4944. http://xlink.rsc.org/?DOI=j19670001698. பார்த்த நாள்: 2021-09-25.
- ↑ Brown, David; De Paoli, Giovanni; Whittaker, Brian. Conversion of protactinium monocarbide to the penta- and tetrahalides. Journal of the Chemical Society, Dalton Transactions: Inorganic Chemistry (1972-1999), 1976. 14: 1336-1338.
- ↑ von Grosse, Aristid (1934). "Element 91". Science 80 (2084): 512–516. doi:10.1126/science.80.2084.512. பப்மெட்:17734249. Bibcode: 1934Sci....80..512G.
- ↑ von Grosse, Aristid (1935). "Zur Herstellung von Protactinium" (in German). Berichte der deutschen chemischen Gesellschaft (A and B Series) 68 (2): 307–309. doi:10.1002/cber.19350680218.