புரோடாக்டினியம்(V) புரோமைடு
புரோடாக்டினியம்(V) புரோமைடு (Protactinium(V) bromide) என்பது PaBr5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் புரோமினும் சேர்ந்து இந்த ஆலைடு உருவாகிறது. ஒற்றைசரிவச்சுப் படிக வடிவத்தில் சிவப்பு நிற படிகமாக புரோடாக்டினியம்(V) புரோமைடு காணப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
புரோடாக்டினியம்(V) புரோமைடு
Protactinium(V) bromide | |
இனங்காட்டிகள் | |
15608-38-5 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PaBr5 | |
வாய்ப்பாட்டு எடை | 630.556 கி மோல்−1 |
தோற்றம் | சிவப்பு திண்மம் |
அடர்த்தி | 4.98 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு[1][2] |
புறவெளித் தொகுதி | P21/c , No. 14 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோடாக்டினியம்(V) புளோரைடு புரோடாக்டினியம்(V) குளோரைடு புரோடாக்டினியம்(V) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பிரசியோடைமியம்(III) புரோமைடு தோரியம்(IV) புரோமைடு யுரேனியம் டெட்ராபுரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு500 முதல் 550 பகை செல்சியசு வெப்பநிலையில் போரான் ட்ரைப்ரோமைடுடன் புரோடாக்டினியம்(V) குளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோடாக்டினியம்(V) புரோமைடை தயாரிக்கலாம்.[3]
- 3PaCl5 + 5BBr3 → 3PaBr5 + 5BCl3
400 பாகை செல்சியசு வெப்பநிலையில் அலுமினியம் புரோமைடுடன் புரோடடாக்டினியம்(V) ஆக்சைடை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்க முடியும்.[4]
இயற்பியல் பண்புகள்
தொகுபுரோடாக்டினியம்(V) புரோமைடு ஆரஞ்சு-சிவப்பு நிறப் படிகமாகக் காணப்படுகிறது. அதிக ஈரப்பதம் உணர்திறன் கொண்ட திண்மப் பொருளாக அறியப்படுகிறது. நீர் மற்றும் அம்மோனியாவுடன் தீவிரமாக வினைபுரிகிறது. ஆனால் முற்றிலும் வறண்ட காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுடிருக்கும். ஐசோபெண்டேன், இருகுளோரோமீத்தேன் மற்றும் பென்சீன் போன்ற கரைப்பான்களில் கரையாது. மேலும் நீரற்ற அசிட்டோ நைட்ரைலில் கரைந்து கரைந்து PaBr5•4CH3CN சேர்மத்தை உருவாக்குகிறது. 400 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் α-வடிவிலும் 400 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் β-வடிவத்திலும் இரண்டு நிலைகளை வெளீப்படுத்துகிறது. P21/c (எண். 14) என்ற இடக்குழுவில் a = 1296 பைக்கோ மீட்டர், b = 1282 பைக்கோ மீட்டர், c = 992 பைக்கோ மீட்டர், β = 108° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச் சாய்வு படிகாமைப்பில் α-வடிவ புரோடாக்டினியம்(V) புரோமைடும், P21/n (No. 14, நிலை 2) என்ற இடக்குழுவில் a = 838.5 பைக்கோ மீட்டர், b = 91.1 பைக்கோ மீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச் சாய்வு படிகாமைப்பில் β-வடிவ புரோடாக்டினியம்(V) புரோமைடும் படிக வடிவம் கொண்டுள்ளன.[3] β வடிவ புரோடாக்டினியம்(V) புரோமைடு ஓர் இருபடிச் சேர்மமாகக் காணப்படுஜ்கிறது. 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியம்(V) புரோமைடு பதங்கமாகிறது.[5] β-யுரேனியம்(V) குளோரைடு-வகை படிக அமைப்பைக் கொண்ட ஒரு γ-வடிவ புரோடாக்டினியம்(V) புரோமைடும் கண்டறியப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Brown, D.; Petcher, T. J.; Smith, A. J. (1968). "Crystal Structures of some Protactinium Bromides". Nature 217 (5130): 737. doi:10.1038/217737a0. Bibcode: 1968Natur.217..737B.
- ↑ 2.0 2.1 Brown, D.; Petcher, T. J.; Smith, A. J. (1969). "The crystal structure of β-protactinium pentabromide". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 25 (2): 178. doi:10.1107/S0567740869007357.
- ↑ 3.0 3.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1177.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in German), Academic Press, 1970, p. 31
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ D. Brown, T. J. Petcher, A. J. Smith: The crystal structure of β-protactinium pentabromide. In: Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry. 25, S. 178–182, எஆசு:10.1107/S0567740869007357.
- ↑ D. Brown: The polymorphism of protactinium pentabromide. In: Inorganic and Nuclear Chemistry Letters. 15, 1979, S. 219–223, எஆசு:10.1016/0020-1650(79)80132-4.