புரோபார்கைட்டு
புரோபார்கைட்டு (Propargite) என்பது C19H26O4S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி முறையில் இச்சேர்மத்திற்கு 2-(4-டெர்ட்-பியூட்டைல்பீனாக்சி)சைக்ளோயெக்சைல்புரோப்-2-ஐன்-1- சல்போனேட்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. மைடெக்சு, ஓமைட்டு, கோமைட்டு என்ற வர்த்தகப் பெயர்களில் புரோபார்கைட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. பூச்சிகளைக் கொல்லும் அகாரிசைடு [2] எனப்படும் பூச்சிக் கொல்லியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். சூழலில் இது அதிகமாக வெளிப்பட்டால் கண்களிலும் தோலிலும் எரிச்சல் மற்றும் உணர்விழப்பு ஏற்படுதல் முதலியன நிகழ்கின்றன. நீர்நில வாழ்வன, மீன்கள் மற்றும் மிதக்கும் உயிரினங்கள் போன்றவற்றுக்கு இது அதிக நச்சுத்தன்மை கொண்ட பொருளாக இருக்கிறது. ஒரு புற்றுநோய் ஊக்கியாகவும் புரோபார்கைட்டு கருதப்படுகிறது[3][4].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(4-டெர்ட்-பியூட்டைல்பீனாக்சி)சைக்ளோயெக்சைல்புரோப்-2-ஐன்-1- சல்போனேட்டு
| |
வேறு பெயர்கள்
ஓமைட்டு, கோமைட்டு, யூனிராயல் D014
| |
இனங்காட்டிகள் | |
2312-35-8 | |
ChEMBL | ChEMBL1416084 |
ChemSpider | 4767 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C18602 |
பப்கெம் | 4936 |
| |
பண்புகள் | |
C19H26O4S | |
வாய்ப்பாட்டு எடை | 350.47 g·mol−1 |
தோற்றம் | அடர்த்தியான அம்பர் நிற நீர்மம் |
அடர்த்தி | 1.10 கிராம்/செ.மீ3 |
0.5 மி.ப | |
கரைதிறன் | கரிமக் கரைப்பானில் கலக்கும் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Cornell University |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–482, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ 2.0 2.1 "propargite (Omite, Comite) Chemical Fact Sheet 9/86". Cornell University. 1986-09-30. பார்க்கப்பட்ட நாள் 2009-12-02.
- ↑ http://www.pesticideinfo.org/Detail_Chemical.jsp?Rec_Id=PC34266
- ↑ http://www.epa.gov/iris/subst/0296.htm