புரோபார்கைல் குளோரைடு

3-குளோரோ-1-புரோப்பைன்

புரோபார்கைல் குளோரைடு (Propargyl chloride) என்பது C3H3Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-குளோரோ-1-புரோப்பைன் என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். தெளிவான பழுப்பு நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் உயர் நச்சுத்தன்மையுடன் தீப்பற்றும் பண்பைக் கொண்டதாக உள்ளது. இது தண்ணிரீரில் கரையாது. ஆனால் பென்சீன் மற்றும் எத்தனாலில் கலக்கும். புரோபார்கைல் குளோரைடின் ஒளிவிலகல் எண் 1.4350 ஆகும். பொதுவாக அரிப்புத் தடுப்பியாகவும் மண்புகையூட்டம் மூலம் தொற்றுயிரிகளைக் கட்டுப்படுத்தவும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கரிமத் தொகுப்பு வினைகளில் இடைநிலைச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது.

புரோபார்கைல் குளோரைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-குளோபுரோப்-1-ஐன்
வேறு பெயர்கள்
புரோபார்கைல் குளோரைடு, 3-குளோரோபுரோபைன், 1-குளோரோ-2-புரோபைன், 2-புரோபைல் குளோரைடு, காமா-குளோரோ அல்லைலீன், யூஎன் 2345
இனங்காட்டிகள்
624-65-7 Y
ChemSpider 21112738 Y
EC number 210-856-9
InChI
  • InChI=1S/C3H3Cl/c1-2-3-4/h1H,3H2 Y
    Key: LJZPPWWHKPGCHS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H3Cl/c1-2-3-4/h1H,3H2
    Key: LJZPPWWHKPGCHS-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12221
  • C#CCCl
பண்புகள்
C3H3Cl
வாய்ப்பாட்டு எடை 74.51 g·mol−1
தோற்றம் தெளிவான பழுப்பு
அடர்த்தி 1.0306 கி/செ.மீ3
உருகுநிலை −78 °C (−108 °F; 195 K)
கொதிநிலை 57 °C (135 °F; 330 K)
கரையாது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு எளிதில் தீப்பற்றும் (F+), உயர் நச்சு (T+)
R-சொற்றொடர்கள் R23/24/25 R34
S-சொற்றொடர்கள் S16 S23 S24/25 S36/37 S39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 18 °C (64 °F; 291 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

புரோபார்கைல் குளோரைடு ஆல்ககாலுடன் வினைபுரிந்து புரோபார்கைல் எசுத்தர்களைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. *Merck Index, 11th Edition, 7820

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோபார்கைல்_குளோரைடு&oldid=2578779" இலிருந்து மீள்விக்கப்பட்டது