புரோப்பேனமைடு
புரோப்பேனமைடு (Propanamide) என்பது C3H7NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். CH3CH2C=O(NH2).[1] என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. புரோப்பேனாயிக்கு அமிலத்தினுடைய அமைடு சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Propanamide | |||
வேறு பெயர்கள்
என்-புரோப்பைலமைடு
புரோப்பியோனமைடு புரோப்பைலமைடு புரோப்பியானிக்கு அமைடு | |||
இனங்காட்டிகள் | |||
79-05-0 | |||
ChEBI | CHEBI:45422 | ||
ChemSpider | 6330 | ||
EC number | 201-182-6 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | C034666 | ||
பப்கெம் | 6578 | ||
| |||
UNII | QK07G0HP47 | ||
பண்புகள் | |||
C3H7NO | |||
வாய்ப்பாட்டு எடை | 73.10 g·mol−1 | ||
தோற்றம் | நீர்மம் , மஞ்சள் | ||
அடர்த்தி | 1.042 கி/மில்லி லிட்டர் | ||
உருகுநிலை | 80 °C (176 °F; 353 K) | ||
கொதிநிலை | 213 °C (415 °F; 486 K) | ||
நன்றாகக் கரையும் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இந்த கரிமச் சேர்மம் ஓர் ஒற்றைப்-பதிலீடு செய்யப்பட்ட அமைடு ஆகும்.[2] அமைடு குழுவின் கரிமச் சேர்மங்கள் பல்வேறு கரிம செயல்முறைகளில் வினைபுரிந்து பிற பயனுள்ள சேர்மங்களை உருவாக்குகின்றன.
தயாரிப்பு
தொகுயூரியா மற்றும் புரோப்பேனாயிக்கு அமிலம் ஆகியவற்றுக்கு இடையே நிகழும் ஒடுக்க வினையின் மூலம் புரோப்பேனமைடு சேர்மத்தைத் தயாரிக்கலாம்:
அல்லது அமோனியம் புரோப்பியோனேட்டை நீர் நீக்க வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.
வினைகள்
தொகுபுரோப்பேனமைடு ஓர் அமைடாக இருப்பதால் எத்திலமீன் வாயுவை உருவாக்கப் பயன்படும் ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையில் இது பங்கேற்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramazani, Ali; Rouhani, Morteza; Joo, Sang Woo (2016-01-01). "Catalyst-free sonosynthesis of highly substituted propanamide derivatives in water" (in en). Ultrasonics Sonochemistry 28: 393–399. doi:10.1016/j.ultsonch.2015.08.019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1350-4177. பப்மெட்:26384923. https://www.sciencedirect.com/science/article/pii/S1350417715300171.
- ↑ Ye, Xuewei; Chai, Weiyun; Lian, Xiao-Yuan; Zhang, Zhizhen (2017-06-18). "Novel propanamide analogue and antiproliferative diketopiperazines from mangrove Streptomyces sp. Q24". Natural Product Research 31 (12): 1390–1396. doi:10.1080/14786419.2016.1253079. பன்னாட்டுத் தர தொடர் எண்:1478-6419. பப்மெட்:27806640. https://doi.org/10.1080/14786419.2016.1253079.