புரோமோயிருபுளோரோமீத்தேன்

வேதிச் சேர்மம்

புரோமோயிருபுளோரோமீத்தேன் (Bromodifluoromethane) என்பது CHBrF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆலோன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் வாயு நிலையில் உள்ளது. டிரை ஆலோமெத்தேன் அல்லது ஐதரோபுரோமோபுளோரோகார்பன் என்று வகைப்படுத்தப்படுகிறது.

புரோமோயிருபுளோரோமீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ(இருபுளோரோ)மீத்தேன்
வேறு பெயர்கள்
  • புரோமோயிருபுளோரோமீத்தேன்
  • இருபுளோரோபுரோமோமீத்தேன்
  • ஆலோன் 1201
  • எச்பிஎப்சி-22B1
  • எப்சி-22B1
  • ஆர்-22B1
  • எப் எம்-100
இனங்காட்டிகள்
1511-62-2 Y
ChemSpider 56193 Y
EC number 216-149-1
InChI
  • InChI=1S/CHBrF2/c2-1(3)4/h1H Y
    Key: GRCDJFHYVYUNHM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHBrF2/c2-1(3)4/h1H
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 62407
  • C(F)(F)Br
  • BrC(F)F
UNII L1F4C2FIBR Y
பண்புகள்
CHBrF2
வாய்ப்பாட்டு எடை 130.92 கி/மோல்
தோற்றம் வாயு
அடர்த்தி 1.55 கி/செ.மீ3 16 °செல்சியசு வெப்பநிலையில்
உருகுநிலை −145 °C (−229 °F; 128 K)
கொதிநிலை −14.6 °C (5.7 °F; 258.5 K)
கரையாது
கரைதிறன் ஆல்ககால், டை எத்தில் ஈதர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இருபுரோமோயிருபுளோரோமீத்தேன் சேர்மத்துடன் ஐதரசனைச் சேர்த்து 400-600 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் புரோமோயிருபுளோரோமீத்தேன் உருவாகிறது.[1]

மாறுநிலைப்புள்ளி தரவு: Tc = 138.83 °செல்சியசு (411.98 கெல்வின்); pc = 5.2 மெகாபாசுக்கல் (51.32 பார்); Vc = 0.275 டெசிமீட்டர்3·மோல்−1.

பயன்பாடுகள்

தொகு

புரோமோயிருபுளோரோமீத்தேன் ஒரு குளிரூட்டியாகவும் தீயை அணைக்கும் கருவிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இது ஓசோன் சிதைவு சாத்தியமுள்ள ODP = 0.74 மதிப்பு கொண்ட ஒரு வகை ஓசோனை குறைக்கும் பொருளாகும். எனவே 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாண்ட்ரீல் நெறிமுறை இச்சேர்மத்தை தடை செய்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Method for the production of bromodifluoromethane". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2007-05-24.

வெளி இணைப்புகள்

தொகு