முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்
புரோசுட்டேட் புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (Prostate cancer) ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு சுரப்பியான முன்னிற்கும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோய் ஆகும். பெரும்பாலான புரோசுட்டேட் புற்றுநோய்கள் மிக மெதுவாக வளரக்கூடியவை;[1] இருப்பினும், மிக விரைவாகப் பெருகும் புரோசுட்டேட் புற்றுநோயும் கண்டறியப்பட்டுள்ளது.[2] இந்தப் புற்று உயிரணுக்கள் முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக எலும்புகளுக்கும் நிணநீர்க்கணுக்களுக்கும், மாற்றிடம் புகும் (பரவும்) தன்மை உடையது. இப்புற்றுநோயால் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், பாலுறவின்போது சிக்கல்கள், விறைக்க முடியாமை போன்ற அறிகுறிகள் உருவாகின்றன.
முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் | |
---|---|
முன்னிற்குஞ்சுரப்பியின் புறவணியிழைய புற்றுநோய் மிகப் பெரும்பாலான ஒன்றாகும்; அதன் நுண்ணோக்கி ஒளிப்படம். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | புற்றுநோயியல், சிறுநீரியல் |
ஐ.சி.டி.-10 | C61. |
ஐ.சி.டி.-9 | 185 |
ம.இ.மெ.ம | 176807 |
நோய்களின் தரவுத்தளம் | 10780 |
மெரிசின்பிளசு | 000380 |
ஈமெடிசின் | radio/574 |
பேசியண்ட் ஐ.இ | முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் |
ம.பா.த | D011471 |
இந்தப் புற்றுநோய் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், கதிர் மருத்துவம், அல்லது இயக்குநீர் சிகிச்சை மூலம் மேலாளப்படுகிறது.[3]
விரைவாக வளரும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதாகவும் அத்தகைய புற்றுநோய் மிக விரைவாக வளரும் எனவும் அறியப்பட்டுள்ளது.[4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ Sam Lister (February 11, 2009). "Urine test could speed treatment of prostate cancer". London: The Sunday Times. http://www.timesonline.co.uk/tol/news/uk/health/article5710450.ece. பார்த்த நாள்: 9 August 2010.
- ↑ "ACS :: What Is Prostate Cancer?" American Cancer Society :: Information and Resources for Cancer: Breast, Colon, Prostate, Lung and Other Forms. Web. 15 June 2010. "?". Archived from the original on 17 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 9 August 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mayo Clinic. Prostate cancer: treatment and drugs
- ↑ Roberts, Michelle 2013. 'Aggressive' prostate cancer gene find. BBC News online: Health. [1]