புளியடிதம்மம்

புளியடிதம்மம், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புலியடிதம்மம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் சிவகங்கைக்கு கிழக்கே 18 கிமீ தொலைவில், சிவகங்கை - தொண்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இவ்வூர் சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1] [2]

இதன் தொலைபேசி குறியீடு எண் 04575 ஆகும். அஞ்சல் சுட்டு எண் 630405. இதன் அஞ்சலகம் நெற்குப்பை எனும் சிற்றூரில் உள்ளது.

இதன் அருகமைந்த நகரங்கள் சிவகங்கை, பரமக்குடி, காரைக்குடி மற்றும் மதுரை ஆகும். அருகமைந்த சிற்றூர்கள், பள்ளித்தம்மம், சொக்கநாதபுரம், மரக்கத்தூர், மேலமருங்கூர் உசிலங்குளம் ஆகும்.

அருகமைந்த தொடருந்து நிலையங்கள் சிவகங்கை (23.5 கிமீ), காரைக்குடி (26 கிமீ), தேவக்கோட்டை ரஸ்தா 22 கிமீ ஆகும்.

புளியடிதம்மத்தின் மேற்கில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், தெற்கில் இளையாங்குடி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் கல்லல் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Puliyadithammam
  2. http://wikiedit.org/India/Puliyadithammam/231184/
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளியடிதம்மம்&oldid=2514576" இலிருந்து மீள்விக்கப்பட்டது