புளுட்டோனியம்(III) அயோடைடு
புளுட்டோனியம்(III) அயோடைடு (Plutonium(III) iodide) என்பது PuI3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
13813-46-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 145816492 |
| |
பண்புகள் | |
தோற்றம் | பச்சை நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 6.92 கி·செ.மீ−3[2] |
உருகுநிலை | 777 °செல்சியசு[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
புறவெளித் தொகுதி | Ccmm (எண். 63) |
Lattice constant | a = 433 பைக்கோமீட்டர்[2], b = 1395 பைக்கோமீட்டர்[2], c = 996 பைக்கோமீட்டர்[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புளுட்டோனியம்(III) ஐதரைடு புளுட்டோனியம்(III) புளோரைடு புளுட்டோனியம் (III) குளோரைடு புளுட்டோனியம்(III) புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நெப்டியூனியம்(III) அயோடைடு அமெரிசியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபுளுட்டோனியத்துடன் பாதரச(II) அயோடைடு வினைபுரிவதால் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது:[3]
- 2 Pu + 3 HgI2 → 2 PuI3 + 3 Hg
புளுட்டோனியமும் ஐதரசன் அயோடைடும் 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்தாலும் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது. இவ்வினையில் சிறிதளவு ஆக்சஜன் மற்றும் நீர் மட்டுமே பங்கேற்றாலும் உருவாக்கப்படும் புளுட்டோனியம்(III) அயோடைடு உடனடியாக புளுட்டோனியம் அயோடைடு ஆக்சைடு ஆக நீராற்பகுப்பு அடைகிறது.[3]
- 2 Pu + 6 HI → 2 PuI3 + 3 H2
பண்புகள்
தொகுபுளுட்டோனியம்(III) அயோடைடு 777 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். பச்சை நிற திடப்பொருளாக இது காணப்படுகிறது. a = 433 பைக்கோமீட்டர், b = 1395 பைக்கோமீட்டர் மற்றும் c = 996 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்டதாக Ccmm (எண். 63) என்ற இடக்குழுவுடன் புளுட்டோனியம்(III) புரோமைடு போல நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் புளுட்டோனியம்(III) அயோடைடு படிகமாகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1969, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 71, Transurane, Teil C, S. 154–155.
- ↑ 3.0 3.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 1304.
புற இணைப்புகள்
தொகு- Clark, David L.; Hecker, Siegfried S.; Jarvinen, Gordon D.; Neu, Mary P. (2006), Morss, Lester R.; Edelstein, Norman M.; Fuger, Jean (eds.), "Plutonium", The Chemistry of the Actinide and Transactinide Elements (in ஆங்கிலம்), Dordrecht: Springer Netherlands, pp. 813–1264, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/1-4020-3598-5_7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3555-5, பார்க்கப்பட்ட நாள் 2023-09-15