புளுட்டோனியம் நைட்ரைடு

புளுட்டோனியம் நைட்ரைடு (Plutonium nitride) என்பது PuN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

புளுட்டோனியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்புளுட்டோனியம், புளுட்டோனியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
12033-54-4 Y
InChI
  • InChI=1S/N.Pu
    Key: DPJMGCIEQAVKAI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [N].[Pu]
பண்புகள்
NPu
வாய்ப்பாட்டு எடை 258.01 g·mol−1
தோற்றம் Grey crystalline solid
அடர்த்தி 14.2 கி/செ.மீ3
உருகுநிலை 2,589 °C (4,692 °F; 2,862 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

650 °செல்சியசு வெப்பநிலையிலும் 0.3 கிலோபாசுக்கல் அழுத்தத்திலும் நைட்ரசன் அல்லது அம்மோனியாவுடன் புளுட்டோனியம் ஐதரைடு வினை புரிவதால் புளுட்டோனியம் நைட்ரைடு உருவாகிறது.[3]

புளுட்டோனியம்(III) அயோடைடை திரவ அம்மோனியாவில் உள்ள சோடியத்துடன் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவது புளுட்டோனியம் நைட்ரைடு தயாரிப்பதற்கான மற்றொரு முறையாகும்.

PuI3 + NH3 + 3Na -> PuN + 3NaI

வேறு சில வினைகளும் புளுட்டோனியம் நைட்ரைடை உருவாக்குகின்றன.[4]

Pu + 1/2N2 +3/2H2 -> PuN + 3/2H2 (1000°செல்சியசு வெப்பநிலையில்)
PuCl3 + 1/2N2 +3/2H2 -> PuN + 3HCl (800–900°செல்சியசு வெப்பநிலையில்)

இயற்பியல் பண்புகள்

தொகு

புளுட்டோனியம் நைட்ரைடு கனசதுரப் படிக அமைப்பில் Fm3m என்ற இடக்குழுவில் சாம்பல் நிறப் படிகங்களாக உருவாக்குகிறது.[5][6] மின் வேதியியல் முறையில் இதை கரைக்க முடியும்.[7]

பயன்கள்

தொகு

புளுட்டோனியம் நைட்ரைடை அணு உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.[8][9]

மேற்கோள்கள்

தொகு
  1. Kotel'nikov, R.B.; Bashlykov, S.N.; Kashtanov, A.I.; Men'shikova, T.S. (1978). Plutonium nitride and plutonium nitride base fuel materials. Nitrid plutoniya i toplivnye materialy na osnove nitrida plutoniya. Atomizdat. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  2. Lai, Chao; Hu, Yin; Qiu, Ruizhi (2020). "Exploring the sub-stoichiometric behavior of plutonium mononitride" (in en). RSC Advances 10 (42): 24877–24881. doi:10.1039/D0RA00477D. பப்மெட்:35517460. Bibcode: 2020RSCAd..1024877L. 
  3. Ahrland, S.; Bagnall, K. W.; Brown, D. (7 June 2016). The Chemistry of the Actinides: Comprehensive Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5934-8. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  4. Thomas, Charles Allen (1944). The Chemistry, Purification and Metallurgy of Plutonium (in ஆங்கிலம்). Office of Technical Information. p. 128. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  5. "mp-1719: PuN (cubic, Fm-3m, 225)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  6. "WebElements Periodic Table » Plutonium » plutonium nitride". winter.group.shef.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
  7. Shirai, O; Iwai, T; Shiozawa, K; Suzuki, Y; Sakamura, Y; Inoue, T (1 February 2000). "Electrolysis of plutonium nitride in LiCl–KCl eutectic melts". Journal of Nuclear Materials 277 (2): 226–230. doi:10.1016/S0022-3115(99)00194-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. Bibcode: 2000JNuM..277..226S. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311599001944. பார்த்த நாள்: 3 February 2024. 
  8. Li, Ru-song; Tong, Ning-hua; Wang, Jin-tao; Xin, Du-qiang; Huang, Shi-qi (1 December 2018). "A first principle calculation on electronic properties of plutonium mononitride: Insights from dynamical mean field theory". Journal of Nuclear Materials 511: 277–283. doi:10.1016/j.jnucmat.2018.09.023. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3115. Bibcode: 2018JNuM..511..277L. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311517315441. பார்த்த நாள்: 3 February 2024. 
  9. Hettwer, Ursula (29 June 2013). Np, Pu... Transuranium Elements: INDEX. Alphabetical Index of Subjects and Substances (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-05674-5. பார்க்கப்பட்ட நாள் 3 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்_நைட்ரைடு&oldid=3910512" இலிருந்து மீள்விக்கப்பட்டது