புவாது துறைமுகம்
புவாது துறைமுகம் (Port Fuad) என்பது எகிப்தின் சயீது துறைமுக நகரத்தில் நிவாகத்தின் கீழுள்ள உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் வடகிழக்கு எகிப்தில் சினாய் தீபகற்பத்தின் வடமேற்கு முனையில் சுயஸ் கால்வாயின் ஆசிய பக்கத்தில் சயீது துறைமுக நகரத்தின் குறுக்கே அமைந்துள்ளது. இந்நகரம் சயீது துறைமுக நகரத்தின் புறநகராகக் கருதப்படுகிறது. மேலும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு பெருநகரப் பகுதியை உருவாக்குகின்றன. இஸ்தான்புல், துருக்கி ( ஆசியா / ஐரோப்பா ) மற்றும் கோலோன், பனாமா ( வடக்கு / தென் அமெரிக்கா ) போன்றவற்றுடன், உலகின் இரண்டு கண்டங்களில் பரவியிருக்கும் சில கண்டம் தாண்டிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
புவாது துறைமுகம் | |
---|---|
ஆள்கூறுகள்: 31°15′N 32°19′E / 31.250°N 32.317°E | |
நாடு | எகிப்து |
நிர்வாகம் | சயீது துறைமுகம் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 81,591 |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்திய சீர் நேரம்) |
இந்நகரம் 81,591 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது (2015 நிலவரப்படி). [1]
வரலாறு
தொகுசயீத் துறைமுக நகரத்தில் அதிக அளவில் இருக்கும் மக்கள்தொகையை கட்டுபடுத்துவதற்காக இந்த நகரம் 1926 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும், அபோதைய ஆட்சியாளாராக இருந்த முதலாம் புவாதுவின் பெயரிடப்பட்டது. நவீன சகாப்தத்தில் எகிப்தின் மன்னன் என்ற பட்டத்தை முதலில் வைத்திருந்தவர் (முன்னர் எகிப்தின் சுல்தான் என்ற பட்டத்தை வைத்திருந்தார்)..
1967 போருக்குப் பிறகு எகிப்தியர்கள் தங்கள் வசம் வைத்திருந்த சினாயின் ஒரே ஒரு பகுதி இந்த நகரம் மட்டுமே. இசுரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1967 முதல் 1970 வரை இடம்பெற்ற ஒரு வரையறுக்கப்பட்ட ஓர் போரான தேய்வழிவுப் போரின் போது இசுரேலிய இராணுவம் இந்நகரத்தைக் கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அக்டோபர் போருக்குப் பிறகு, 1978 ஆம் ஆண்டில் முகாம் டேவிட் உடன்படிக்கை இசுரேல் சினாயை எகிப்துக்கு சமாதானமாக திருப்பித் தர ஒப்புக்கொண்டது. பின்னர் இரு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்று இந்நகரம் எகிப்துக்கான ஒரு முக்கிய வான் பாதுகாப்பு நிலையாக இருக்கிறது. இது முக்கியமான இடமாக இருந்தபோதிலும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரம் இன்னும் ஒரு குடியிருப்பு மண்டலமாகவே கருதப்பட்டது. மிகக் குறைந்த வசதிகளையும், பெரிய நகர அல்லது நகர மையங்களோ எதுவும் இங்கு இல்லை.
நிலவியல்
தொகுஇந்த நகரம் புவாது துறைமுகத் தீவில் அமைந்துள்ளது. ஒரு முக்கோண தீவான இது, வடக்கே மத்திய தரைக்கடலையும், மேற்கில் சுயஸ் கால்வாயையும் கொண்டுள்ளது. சுயஸ் கால்வாய் முதல் மத்தியதரைக் கடல் வரை கிழக்கு நோக்கி ஒப்பீட்டளவில் புதிய கிழக்கு கால்வாய். [1] பிரதான கால்வாயின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு ஆசியாவின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. [2]
சுயஸ் கால்வாய் ஆணையம் நகரத்தின் முக்கிய வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மேலும் அதன் ஊழியர்கள் பெரும்பாலான மக்களைக் கொண்டுள்ளனர். இங்கு ஒரு பொது மருத்துவமனையும் உள்ளது. [3]
போக்குவரத்து
தொகு2016 வரை இந்த நகரத்தை படகினால் மட்டுமே அணுக முடியும். [4] 2016 ஆம் ஆண்டில் நகரத்தை அடைய மிதக்கும் பாலம் திறக்கப்பட்டது. [5] [6]
சயீது துறைமுகத்தின் கிழக்குப் பகுதி
தொகுகால்வாயின் சினாய் பக்கத்தில், [7] சயீது துறைமுகத்தின் கிழக்குப் பகுதி என்பது சமீபத்தில் தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணியாகும். இது சுயஸ் கால்வாய் கொள்கலன் முனையத்தைக் கொண்டுள்ளது. இது 2004 இல் திறக்கப்பட்டது. [8] சயீது துறைமுகத்தின் கிழக்குப் பகுதி ஒரு பக்க கால்வாய் 2016 இல் திறக்கப்பட்டது. [9]
நவம்பர் 2015 இல், எகிப்தின் குடியரசுத் தலைவர் அல்-சிசி கிழக்கு துறைமுகத்தில் ஒரு புதிய துறைமுக மேம்பாட்டு திட்டத்தை பொதுமக்களுக்காகத் தொடங்கினார். [10]
மே 2018 இல், உருசிய தொழில்துறை மண்டலத்தின் வளர்ச்சிக்கு உருசியாவிற்கும் எகிப்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. [11] [12] [13]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 El-Bastawisy, Magdy M. (1 January 2016). "Incorporating Local Urban Environmental Conservation and Regional Development: Port Fouad, Egypt" (in en). Procedia Environmental Sciences (எல்செவியர்) 34: 271–284. doi:10.1016/j.proenv.2016.04.025.
- ↑ (in en) The Near East. 22. s.n.. 1922. https://books.google.com/books?id=CUEZAAAAYAAJ. "The Suez Canal Co. is ... at Port Fouad, opposite Port Said, on the Asiatic side of the canal ...".
- ↑ Cavendish, Cavendish (September 1, 2006). World and Its Peoples, Volumen 1. Marshall Cavendish. p. 1130. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761475712. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.
- ↑ Boulos, Jacqueline (6 January 2016). "Sustainable Development of Coastal Cities-Proposal of a Modelling Framework to Achieve Sustainable City-Port Connectivity" (in en). Procedia - Social and Behavioral Sciences 216: 981. doi:10.1016/j.sbspro.2015.12.094.
- ↑ "Egypt's local news digest Sept. 16: Floating bridge in north-eastern of Egypt to be inaugurate in December- official". September 16, 2016 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 1, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170101232918/http://thecairopost.youm7.com/news/216590/newsletter/egypts-local-news-digest-sept-16-floating-bridge-in-north-eastern-of-egypt-to-be-inaugurate-in-december-official.
- ↑ "Sisi arrives in Port Said to inaugurate Nasr Floating Bridge". www.arabstodayen (in ஐரோப்பிய ஸ்பானிஷ்). 29 December 2016.
- ↑ "Location". ep-egypt.com.
- ↑ "Industrial Area Port Said East". SCCT. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018.
- ↑ "East Port Said Canal Inauguarted". World Maritime News. 25 February 2016.
- ↑ "Suez Canal Axis Development project becomes economic zone". www.tradearabia.com. 29 November 2015.
- ↑ "Russia gets the go ahead: New industrial zone to bring investment, jobs and technology to Egypt". 3 June 2018. http://english.ahram.org.eg/NewsContent/3/12/301606/Business/Economy/Russia-gets-the-go-ahead-New-industrial-zone-to-br.aspx.
- ↑ "Egypt and Russia sign the largest contract in the history of Egyptian railways". 18 October 2018. https://www.almasryalyoum.com/news/details/1334414.
- ↑ "Egypt, Russia to sign MoU to establish industrial zone in Suez Gulf area". 25 January 2016. http://english.ahram.org.eg/NewsContent/3/12/185886/Business/Economy/Egypt,-Russia-to-sign-MoU-to-establish-industrial-.aspx.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Port Fouad தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.