பு. வெ. சஞ்சய் குமார்

புலிகோரு வெங்கட சஞ்சய் குமார் (P. V. Sanjay Kumar)(பிறப்பு 14 ஆகத்து 1963) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

பு. வெ. சஞ்சய் குமார்
P. V. Sanjay Kumar
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 பிப்ரவரி 2023
பரிந்துரைப்புதனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நியமிப்புதிரௌபதி முர்மு
தலைமை நீதிபதி-மணிப்பூர் உயர் நீதிமன்றம்
பதவியில்
14 பிப்ரவரி 2021 – 5 பிப்ரவரி 2023
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
14 அக்டோபர் 2019 – 13 பிப்ரவரி 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி தெலங்காணா உயர் நீதிமன்றம்
பதவியில்
8 ஆகத்து 2008 – 13 அக்டோபர் 2019
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதிபா பாட்டில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஆகத்து 1963 (1963-08-14) (அகவை 61)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பு. வெ. குமார் 1963 ஆகத்து 14 அன்று ஐதராபாத்தில் மறைந்த பி. ராமச்சந்திர ரெட்டி மற்றும் பி. பத்மாவதம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பி. ராமச்சந்திர ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் (1969 முதல் 1982 வரை) ஆவார். இவர் ஐதராபாத் நிசாம் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். 1988-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். ஆகத்து 1988-ல் ஆந்திரப் பிரதேசத்தின் வழக்கறிஞர் கழகத்தில் சேர்ந்தார்.

நீதிபதி பணி

தொகு

ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற இவர், 2000 முதல் 2003 வரை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். இவர் 8 ஆகத்து 2008 அன்று தெலங்காணா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். 20 சனவரி 2010 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 14 அக்டோபர் 2019 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார்.

பின்னர், 12 பிப்ரவரி 2021 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டு 14 பிப்ரவரி 2021 அன்று பதவியேற்றார்.[1]

சஞ்சய் குமார், 23 பிப்ரவரி 2023 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் இப்பதவியில் ஆகத்து 2028 வரை பணியாற்றுவார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Bar and Bench (12 February 2021). "Justice PV Sanjay Kumar appointed Chief Justice of Manipur High Court" (in en) இம் மூலத்தில் இருந்து 21 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211021172434/https://www.barandbench.com/news/justice-pv-sanjay-kumar-appointed-chief-justice-manipur-high-court. பார்த்த நாள்: 21 October 2021. 
  2. https://www.scobserver.in/judges/p-v-sanjay-kumar/. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._வெ._சஞ்சய்_குமார்&oldid=3811288" இலிருந்து மீள்விக்கப்பட்டது