பூஜா கெலாட்டு

பூஜா கெலாட்டு (Pooja Gehlot) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார். 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி புதுதில்லியில் இவர் பிறந்தார். 50கிலோ மற்றும் 53 கிலோ எடை பிரிவுகளில் கட்டற்ற முறை மல்யுத்தப் போட்டிகளில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். பல்கேரியாவின் புடாபெசுட்டு நகரில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன் பட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[1][2] தோள்பட்டை காயம் காரணமாக இரண்டு ஆண்டுகள் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]

பூஜா கெலாட்டு
Pooja Gehlot
தனிநபர் தகவல்
பிறப்பு15 மார்ச்சு 1997 (1997-03-15) (அகவை 27)
இலம்பூர் ஊரகம், தில்லி
வசிப்பிடம்தில்லி
உயரம்5 அடி 3 அங்குலம்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்ற வகை மல்யுத்தம்
நிகழ்வு(கள்)50 கி.கி/53 கிலோ கிராம்
பதக்கத் தகவல்கள்
பெண்கள் கட்டற்ற வகை மல்யுத்தம்
நாடு  இந்தியா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
23 வயதுக்குட்பட்டோர் உலக மல்யுத்தப் போட்டி - 1 -
World U23 Wrestling Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 World U23 Wrestling Championship

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பூஜா கெலாட்டு ஒரு கைப்பந்து வீரராக இருந்தார். உயரம் காரணமாக வேறு விளையாட்டுக்கு செல்லும்படி பணிக்கப்பட்டார். மாமா ஒரு மல்யுத்த வீரர் என்பதால் மல்யுத்தப் போட்டிக்காக இவரை ஊக்குவித்தார். 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் அணி பெற்ற வெற்றியால் ஈர்க்கப்பட்டதால் பூஜாவும் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.

சாதனைகள்

தொகு
  1. ராஞ்சி நகரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் தேசியப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.
  1. 2017 ஆம் ஆண்டு தைவானில் நடந்த இளையோர் ஆசிய சாம்பியன் பட்டப் போட்டியில் முதலிடத்தை பிடித்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Scroll Staff. "Wrestling U-23 World C'ships: Pooja Gehlot wins India's second silver, Sajan to compete for bronze". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  2. Nov 2, PTI /; 2019; Ist, 10:02. "Pooja Gehlot wins silver at Under-23 World Wrestling Championships | More sports News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. 3.0 3.1 "Gehlot no match for Japanese Okuno, settles for silver". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  4. "Pooja Gehlot wrestles past hurdles to claim World silver". The Indian Express (in ஆங்கிலம்). 2019-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_கெலாட்டு&oldid=3601844" இலிருந்து மீள்விக்கப்பட்டது