பூஞ்சு ஆறு

இந்தியாவிலும் பாக்கித்தானிலும் பாயும் ஆறு

பூஞ்சு ஆறு (Poonch River) இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீர் மற்றும் பாக்கித்தானின் சம்மு மற்றும் காசுமீர் நகரங்கள் வழியாக பாய்கிறது. பஞ்சு ஆறு, பஞ்சு தோகி, பஞ்சின் தோகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படும்.[1][a]) இது ஜீலம் ஆற்றின் துணை ஆறாகும்.

பூஞ்சு ஆறு
Poonch River
பூஞ்சு ஆறு
பூஞ்சு ஆறு is located in Kashmir
பூஞ்சு ஆறு
அமைவு
நாடுகள்இந்தியா, பாக்கித்தான்
மாகாணங்கள்சம்மு மற்றும் காசுமீர், பாக்கித்தான் ஆக்கிரமிப்பு சம்மு காசுமீர்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபூஞ்சு மாவட்டம், சம்மு மற்றும் காசுமீர், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்33°38′42″N 74°26′07″E / 33.64511°N 74.43532°E / 33.64511; 74.43532
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மங்களா அணை, கோட்லி மாவட்டம், சம்மு மற்றும் காசுமீர், பாக்கித்தான்
 ⁃ ஆள்கூறுகள்
33°17′23″N 73°44′29″E / 33.2896°N 73.7414°E / 33.2896; 73.7414

பெயர்

தொகு

ஜார்ஜ் புஃலரின்[2] கூற்றுப்படி, தோகி என்ற வார்த்தையின் பண்டைய வடிவம், இராஜதரங்கிணி மற்றும் நிலமாதா புராணத்தில் குறிப்பிடப்பட்ட தௌசி என்பதாகும். பிந்தைய படைப்பில், ஆபகா (சியால்கோட்டின் ஐக் நாலா), தௌசி மற்றும் சந்திரபாகா ஆகியவை ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. அநேகமாக இந்தச் சொல், 'குளிர்', அதாவது 'பனி' என்ற பொருள்படும் சமசுகிருதச் சொல்லான "துசரா" உடன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

ஆற்றின் போக்கு

தொகு

பூஞ்சு ஆறு பிர் பாஞ்சல் மலைத்தொடரின் தெற்கு நோக்கிய மலையடிவாரத்தில் நீல்-காந்த் கலி மற்றும் இயாமியன் கலி ஆகிய பகுதிகளில் உருவாகிறது. இந்தப் பகுதியில் இது 'சீரன்' (சூரன்) என்று அழைக்கப்படுகிறது. பூஞ்சு நகரத்தை அடையும் வரை தெற்கேயும் பின்னர் மேற்கிலும் இது பாய்கிறது. அதன் பிறகு இது தென்மேற்கே வளைந்து, இறுதியாக சோமுக்கிற்கு அருகிலுள்ள மங்களா நீர்த்தேக்கத்தில் வடிகிறது. பூஞ்சு, செக்ரா, தட்டா பானி, கோட்லி மற்றும் மிர்பூர் ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.[3]

துணை ஆறுகள்

தொகு

"மலை நாட்டின் பெரிய பகுதியில் பூஞ்சு ஆறு வடிகிறது. உயரமான பஞ்சால் மலைத்தொடரில் எழும் இந்த ஆறு நீரோடைகள் பலவற்றை சேகரித்துக் கொள்கிறது. உண்மையில் பூஞ்சு ஆறு இரத்தன் மலைத்தொடரின் கிளைப்பகுதியின் வடக்கு அல்லது வடமேற்கு பகுதியிலிருந்து வரும் அனைத்து நீரோடைகளையும் ஒருங்கிணைக்கிறது. இடைநிலை உயரமுள்ள மலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கணிசமான பகுதியிலும் வடிகிகிறது" என 1875 ஆம் ஆண்டில் ஆங்கிலேய நிலவியலாளர் பிரடெரிக்கு திரியூ குறிப்பிடுகிறார்.[4]

ஆற்றின் முக்கிய துணை ஆறுகள்:

ஆசாத் காசுமீரின் அவேலி மாவட்டத்தில் தோன்றி தென்மேற்கே பாய்ந்து பூஞ்சு நகருக்கு அருகில் பூஞ்சு ஆற்றில் கலக்கும் பீடார் நாலா சில சமயங்களில் 'பஞ்சு நதி' என்று அழைக்கப்படுகிறது. (பூஞ்சு ஆற்றின் மேல்நிலைப் பகுதி சூரன் நதி என்று அழைக்கப்படுகிறது.)

சுற்றுப்புறம்

தொகு

சோபியானிலிருந்து முகலாய சாலை, பூஞ்சு ஆற்றின் தோன்றுமிடத்தைச் சுற்றி அதன் கரையில் செல்கிறது.

இந்தியாவின் பூஞ்சு மாவட்டத்தில் உள்ள பாஃப்லியாசு அருகே கட்டப்பட்டு வரும் பர்னாய் நீர்மின் திட்டம், 37.5 மெகா வாட் மின் உற்பத்தி மற்றும் மாவட்டத்தில் உள்ள பரந்த விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2017-18 இல் முடிக்க திட்டமிடப்பட்டது.[5][6][7]

100 மெகாவாட் திறன் கொண்ட குல்பூர் நீர்மின் திட்டம் ஆசாத் சம்மு காசுமீரில் உள்ள பூஞ்சு ஆற்றின் மீது அமைந்துள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. The older forms of "Punch" include "Prunts", "Pulast" and "Parnotsa".

மேற்கோள்கள்

தொகு
  1. Hasan, Mohibbul (1959), Kashmir under the Sultans, Aakar Books, pp. 23–24, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-49-7
  2. 2.0 2.1 Georg Bühler (1877), Detailed Report of a Tour in Search of Sanskrit Mss. made in Kasmir, Rajputana, and Central India, Bombay: Society's Library, Town Hall. London: Trübner & Co., p. 3
  3. Negi, Sharad Singh (1991), Himalayan Rivers, Lakes, and Glaciers, Indus Publishing, p. 111, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85182-61-2
  4. Drew, Frederic (1875), The Jummoo and Kashmir Territories: A Geographical Account, E. Stanford, p. 38
  5. Parnai HEP project set for completion by 2017: JK govt, Business Standard, 17 August 2015.
  6. Fate of power projects, Daily Excelsior, 10 April 2018.
  7. "PDD for Parnai hydropower project". பார்க்கப்பட்ட நாள் 28 January 2019.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஞ்சு_ஆறு&oldid=3923474" இலிருந்து மீள்விக்கப்பட்டது