பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம்

இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, பூண்டி என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

பூண்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட ஊர். இங்குள்ள பூண்டி மாதா கோயில் பரவலாக அறியப்படும் கிறித்தவக் கோயில்.

பூண்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ், இ. ஆ . ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பூண்டியில் புகழ் மிக்க பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இது தஞ்சை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்களின் புனிதத் தலம். இது தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு பூண்டி புஷ்பம் கல்லூரியும் அமைந்துள்ளது. பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் மே 6 அன்று கொடியேற்றி விழா தொடங்கும். பின்னர், தேர்ப்பவனியும் திருப்பலியும் நிறைவேற்றப்படுகின்றன.

அரசியல்தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4]

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்