பூமிபுத்ரா கட்சி
மலேசிய வலிமைமிகு பூமிபுத்ரா கட்சி அல்லது பூமிபுத்ரா கட்சி (ஆங்கிலம்: Malaysian Mighty Bumiputera Party; மலாய்: Parti Bumiputera Perkasa Malaysia) என்பது மலேசியாவின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தேசியவாத கட்சியான இந்தக் கட்சியை இப்ராகிம் அலி என்பவரால் நிறுவப்பட்டு வழிநடத்தப்படுகிறது.[3]
மலேசிய வலிமைமிகு பூமிபுத்ரா கட்சி Parti Bumiputera Perkasa Malaysia Malaysian Mighty Bumiputera Party | |
---|---|
சுருக்கக்குறி | புத்ரா PUTRA |
தலைவர் | இப்ராகீம் அலி (Ibrahim Ali) |
நிறுவனர் | இப்ராகீம் அலி |
துணைத்தலைவர் | முகமட் காலிட் முகமட் யூனோஸ் (Mohd Khalid Mohd Yunus) |
தொடக்கம் | 17 ஆகஸ்டு 2018 |
சட்ட அனுமதி | 8 மே 2019 |
பிரிவு | அம்னோ |
முன்னர் | பெர்காசா |
கொள்கை | இசுலாமிய அரசியல்[1] |
அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி |
நிறங்கள் | மஞ்சள், சிகப்பு |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 0 / 222 |
சட்டமன்றங்கள்: | 0 / 592 |
தேர்தல் சின்னம் | |
கிளாந்தான் தவிர்த்து[2] கிளாந்தான் மட்டும்[2] | |
கட்சிக்கொடி | |
File:Bendera Parti Putra.png | |
இணையதளம் | |
www | |
முகநூலில் பூமிபுத்ரா கட்சி |
மலாய் மேலாதிக்க அரசு சாரா அமைப்பான பிரிபூமி பெர்காசா அமைப்பின் (Pertubuhan Pribumi Perkasa) (PERKASA) இன் தலைவரான இப்ராகீம் அலி, மலாய்க்காரர்களுக்கு ஆதரவாகவும், மலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்; ஒரு புதிய கட்சி தொடங்கப்படும் என்று 2018 மலேசியப் பொதுத் தேர்தலுக்குப் பின் அறிவித்தார்.
அந்தத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியும்; அம்னோ கட்சியும் மோசமாகத் தோல்வி அடைந்தன.
பொது
தொகுஆகஸ்டு 17, 2018-இல், புத்ரா கட்சியின் தற்காலிகத் தலைவராக இப்ராகிம் அலி அறிவிக்கப்பட்டார். 25 பிப்ரவரி 2023-இல், மகாதீர் பின் முகமது 12 தம்முடைய முன்னாள் உள்நாட்டு போராளிகள் கட்சி உறுப்பினர்கள் 12 பேருடன் புத்ராவில் சேர்ந்தார்.[4][5]
இந்தக் கட்சி இதுரையில், 5 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. எந்த மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Perkasa: Group has failed to defend race". The Straits Times. December 14, 2014. https://www.nst.com.my/news/2015/09/perkasa-group-has-failed-defend-race.
- ↑ 2.0 2.1 "Dr Mahathir says will defend Langkawi in GE15". 11 October 2022.
- ↑ Hanis Zainal (9 May 2019). "Ibrahim Ali unveils new party, Putra, to fight for race and religion". The Star (Malaysia. https://www.thestar.com.my/news/nation/2019/05/09/ibrahim-ali-unveils-new-party-putra-to-fight-for-race-and-religion/.
- ↑ "Former Malaysian PM Mahathir joins little-known party Putra | the Straits Times". The Straits Times. 25 February 2023. https://www.straitstimes.com/asia/se-asia/former-malaysian-pm-mahathir-joins-little-known-party-putra.
- ↑ Syed Jaymal Zahiid (22 December 2013). "We can replace you as Malay champions Perkasa warns UMNO". The Malay Mail. http://www.themalaymailonline.com/malaysia/article/we-can-replace-you-as-malay-champions-perkasa-warns-umno.