பூம்புல்

தாவர இனம்

பூம்புல்[3] (Ageratum conyzoides ) என்பது வெப்பமண்டல அமெரிக்காவை, குறிப்பாக பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தாவரமாகும். இது பல பகுதிகளில் ஒரு ஆக்கிரமிப்பு உயிரனமாக உள்ளது. இது 0.5-1 மீ உயரம்வரை வளரும் செடி ஆகும் இதன் இலைகள் 2-6 செ.மீ நீளத்தில் முட்டை வடிவமானதாக இருக்கும். இதன் பூக்கள் வெள்ளை முதல் மெல் ஊதா வரை இருக்கும். [4]

பூம்புல்

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
சூரியகாந்தி வரிசை
குடும்பம்:
சூரியகாந்திக் குடும்பம்
பேரினம்:
இனம்:
A. conyzoides
இருசொற் பெயரீடு
Ageratum conyzoides
L. 1753 not Hieron. 1895 nor Sieber ex Steud. 1840[2]
வேறு பெயர்கள்
Synonymy
  • Ageratum album Hort.Berol. ex Hornem.
  • Ageratum arsenei B.L.Rob.
  • Ageratum brachystephanum Regel
  • Ageratum ciliare L.
  • Ageratum ciliare Lour.
  • Ageratum coeruleum Desf. 1804, rejected name not Sieber ex Baker 1876
  • Ageratum cordifolium Roxb.
  • Ageratum hirsutum Lam.
  • Ageratum hirsutum Poir.
  • Ageratum humile Larran.
  • Ageratum humile Salisb.
  • Ageratum humile Larrañaga
  • Ageratum iltisii R.M.King & H.Rob.
  • Ageratum latifolium Cav.
  • Ageratum microcarpum (Benth. ex Benth.) Hemsl.
  • Ageratum muticum Griseb.
  • Ageratum obtusifolium Lam.
  • Ageratum odoratum Vilm.
  • Ageratum odoratum Bailly
  • Ageratum suffruticosum Regel
  • Cacalia mentrasto Vell. Conc.
  • Caelestina latifolia (Cav.) Benth. ex Oerst.
  • Caelestina microcarpa Benth. ex Oerst.
  • Caelestina suffruticosa Sweet
  • Carelia brachystephana (Regel) Kuntze
  • Carelia conyzoides (L.) Kuntze
  • Carelia mutica (Griseb.) Kuntze
  • Eupatorium conyzoides (L.) E. H. Krause
  • Eupatorium paleaceum Sessé & Moc.
  • Sparganophorus obtusifolius Lag.

அசுத்தமான பகுதிகளில் இதன் வளர்ச்சி காரணமாக வியட்நாமிய மொழியில், இந்த தாவரம் cứt lợn ("பன்றி மலம்" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறது. [5]

பயன்கள்

தொகு

இது ஒரு மருத்துவ தாவரமாக பல பாரம்பரிய கலாச்சாரங்களால், இரத்தக்கழிசல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு எதிராக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[6] இது ஒரு பூச்சிக்கொல்லி மற்றும் நூற்புழுக்கொல்லியும் கூட.[7][6]

நச்சுத்தன்மை

தொகு

பூம்புல்லை உட்கொள்வது கல்லீரல் புண்கள் மற்றும் கட்டிகளை ஏற்படுத்தும். [8] [9] எத்தியோப்பியாவில் பூம்புல்லின் பொருட்கள் கலந்த தானியங்களை பயன்படுத்தியதால் ஒரு வெகுசன நச்சு சம்பவம் நடந்தது. [10] இந்த தாவரத்தில் பைரோலிசிடின் ஆல்கலாய்டுகள் லைகோப்சமைன், எச்சினாடைன் உள்ளன.

களை ஆபத்து

தொகு

பூம்புல் அதன் இயற்கை வாழிடத்திற்கு வெளியே வளரும் போது பரவலான சூழல் சிக்கலை ஏற்படுத்தும் களையாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, ஹவாய், அமெரிக்காவில் ஒரு ஆக்கிரமிப்பு களையாக உள்ளது. [11] [12] இது ஆசியாவில் நெல் சாகுபடியின் மிதமான களையாகக் கருதப்படுகிறது.

காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "NatureServe Explorer".
  2. Tropicos search for Ageratum conyzoides
  3. தமிழ்க் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியில் அஜராட்டம் கட்டுரை
  4. "Ageratum conyzoides". NSW Flora Online.
  5. vi:Cứt lợn
  6. 6.0 6.1 Panda, Sujogya Kumar; Luyten, Walter (2018). "Antiparasitic activity in Asteraceae with special attention to ethnobotanical use by the tribes of Odisha, India". Parasite 25: 10. doi:10.1051/parasite/2018008. பன்னாட்டுத் தர தொடர் எண்:1776-1042. பப்மெட்:29528842.   
  7. Ming, L.C. (1999). "Ageratum conyzoides: A tropical source of medicinal and agricultural products". In Janick, J. (ed.). Perspectives on new crops and new uses. Alexandria VA: ASHS Press. pp. 469–473. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0961502706.
  8. Sani, Y.; Bahri, S. (1994). "Pathological changes in liver due to the toxicity of Ageratum conyzoides". Penyakit Hewan 26 (48): 64–70. பன்னாட்டுத் தர தொடர் எண்:0216-7662. http://agris.fao.org/agris-search/search/display.do?f=1997/ID/ID97008.xml;ID9600846. 
  9. Fu, P.P.; Yang, Y.C.; Xia, Q.; Chou, M.C.; Cui, Y.Y.; Lin G. (2002). "Pyrrolizidine alkaloids-tumorigenic components in Chinese herbal medicines and dietary supplements". Journal of Food and Drug Analysis 10 (4): 198–211. http://www.fda.gov.tw/files/publish_periodical/10-4-1.pdf. 
  10. Wiedenfeld, H. (2011). "Plants containing pyrrolizidine alkaloids: toxicity and problems.". Food Additives & Contaminants: Part A 28 (3): 282–292. doi:10.1080/19440049.2010.541288. பப்மெட்:21360374. https://hal.archives-ouvertes.fr/hal-00673672. 
  11. Global Compendium of Weeds, Ageratum conyzoides (Asteraceae)
  12. Alan S. Weakley (April 2008). "Flora of the Carolinas, Virginia, and Georgia, and Surrounding Areas".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்புல்&oldid=3886405" இலிருந்து மீள்விக்கப்பட்டது