பூலா திருப்பதி ராஜு

இந்திய எழுத்தாளர்

பூல்லா திருப்பதி ராஜு (oola Tirupati Raju() 3 செப்டம்பர் 1904 - 1992) ஓர் இந்திய எழுத்தாளரும், மெய்யியலாளரும், கல்வியாளரும், சோத்பூரின் ஜஸ்வந்த் கல்லூரியின் (இன்றைய ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழகம் முன்னாள் பேராசிரியருமாவார். [1] இந்திய தத்துவம், இலக்கியம் குறித்து ஆங்கிலத்திலும் , தெலுங்கிலும் பல புத்தகங்களை எழுதியவர். [2] [3] இவரது வெளியீடுகளில் இந்திய சிந்தனையின் கட்டமைப்பு ஆழங்கள் தெலுங்கு இலக்கியம், இந்தியாவின் தத்துவ மரபுகள் ஒப்பீட்டு தத்துவ அறிமுகம் , இந்தியாவின் கருத்தியல் சிந்தனை ஆகியவை அடங்கும். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய தி கான்செப்ட் ஆஃப் மேன்: எ ஸ்டடி இன் ஆப்பேரேடிவ் பிலாசஃபி யின் ஆசிரியராக இருந்தார். இலக்கியத்திலும், கல்வியிலும் இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்திய அரசு மூன்றாவது மிக உயர்ந்த கெளரவமான பத்ம பூசண் விருதை வழங்கியது. [4]

பூலா திருப்பதி ராஜு
பிறப்பு3 செப்டம்பர் 1904
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1992
பணிஎழுத்தாளர்
மெய்யியலாளர்
கல்வியாளர்
அறியப்படுவதுஇந்திய மெய்யியல்
விருதுகள்பத்ம பூசண்

ஒப்பீட்டு தத்துவத்தின் நவீன வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். மேலும், இந்திய தத்துவத்தை அமெரிக்க அகாதமியின் கவனத்திற்கும் கொண்டு சென்றார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல் தொகு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Notification" (PDF). The Gazette of India. 1958. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  2. "Raju, P. T. (Poolla Tirupati)". WorldCat identities. 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  3. "P. T. Raju (1904–1992)". LibraryThing. 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலா_திருப்பதி_ராஜு&oldid=3661712" இலிருந்து மீள்விக்கப்பட்டது