மைசூர் ஹிரியண்ணா

இந்திய மெய்யியலாளர்

மைசூர் ஹிரியண்ணா (Mysore Hiriyanna) (1871-1950)[1] ஓர் சிறந்த இந்திய மெய்யியலாளரும், சமசுகிருத அறிஞரும், இந்திய அழகியல் மீதான அதிகாரமும் ஆவார்.[2] மைசூர் பல்கலைக்கழகத்தில் சமசுகிருத பேராசிரியராகவும், சர்வ்பள்ளி ராதாகிருஷ்ணனின் சமகாலத்தவராகவும் இருந்தார். இந்திய மெய்யியல் குறித்த இவரது வகுப்புகள் விரிவானவை.

மைசூர் ஹிரியண்ணா
பிறப்பு(1871-05-07)7 மே 1871
மைசூர்
இறப்பு19 செப்டம்பர் 1950(1950-09-19) (அகவை 79)
மைசூர்
தேசியம் இந்தியா
கல்விசென்னை கிறித்துவக் கல்லூரி
காலம்20ஆம்-நூற்றாண்டின் மெய்யியல்
பகுதிஇந்திய மெய்யியல்
பள்ளிஅத்வைதம்
கல்விக்கழகங்கள்மைசூர் பல்கலைக்கழகம்
ஆலோசகர்கள்பெரியசாமி திர்மலாசாரியா, காசி சேசராமசாத்திரி, ஆஸ்தான வித்வான் கவிரத்ன மண்டிகல்லு ராமசாத்திரி, கஸ்தூரி ரங்க ஐயங்கார், ஏ. ஆர். வாடியா
குறிப்பிடத்தக்க மாணவர்கள்எம். வி. சீத்தாராமையா, பு. தி. நரசிம்மாச்சார், வி. சீத்தாராமையா
முக்கிய ஆர்வங்கள்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
மைசூர் பல்கலைக்கழகத்தில் இராதாகிருஷ்ணனின் பிரியாவிடையில் இராதாகிருஷ்ணன் & ஏ. ஆர். வாடியாவுடன் ஹிரியண்ணா

படைப்புகள் தொகு

ஆலன் & அன்வின் ஆகியோரால் "இந்திய தத்துவத்தின் அறிமுகம்"[3] என புத்தக வடிவத்தில் வெளியிடப்பட்ட இவரது வகுப்பறை பாடங்கள் இவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொடுத்தன. இது இந்திய மெய்யியலின் ஒரு ஆரம்பப் பணியாகும். இவரது மற்ற முக்கிய படைப்புகளில் "மதிப்புகளின் இந்திய கருத்து",[4] "இந்திய தத்துவத்தின் முக்கியத்துவம்", "பரிபூரணத்திற்குப் பிறகு நீண்ட தேடல்" , "கலை அனுபவம்" ஆகியவை அடங்கும். இவர் வேத காலம் பற்றி, முக்கியமாக உபநிடதங்கள் குறித்து விரிவாக எழுதினார். அதைத் தொடர்ந்து வேதத்திற்கு பிந்தைய காலத்தில் இந்திய தத்துவ சிந்தனையின் பரிணாமம், முக்கியமாக பகவத் கீதை பௌத்தம், சமண மதத்தின் ஆரம்ப ஆண்டுகள் குறித்து விவாதித்தார்.[5] அழகியல் குறித்த இவரது பணி அதிகாரப்பூர்வமானது. முக்கியமாக அலங்காரங்கள், அழகியல் , நெறிமுறைகள், கலை முறை, இந்திய அழகியல் மதிப்புகள் , ஒழுக்கநெறி ஆகியவற்றைக் கையாண்டது [6]

குறிப்புகள் தொகு

  1. WorldCat Identities
  2. Hanumantha Rao, G., Mysore Hiriyanna, and N. Sivarama Sastry. Prof[Essor] M[Ysore] Hiriyanna Commemoration Volume. Mysore: Prof. M. Hiriyanna Commemoration Vol. Committee, 1952.
  3. Schrader, F. Otto (10 October 1932). "Outlines of Indian Philosophy. By M. Hiriyanna, M.A., formerly Professor of Sanskrit, Maharaja's College, Mysore. (London: George Allen & Unwin Ltd.1932. Pp. 419. Price 15s.)" (in en). Philosophy 8 (32): 505–506. doi:10.1017/S0031819100045915. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-817X. https://www.cambridge.org/core/journals/philosophy/article/outlines-of-indian-philosophy-by-m-hiriyanna-ma-formerly-professor-of-sanskrit-maharajas-college-mysore-london-george-allen-unwin-ltd1932-pp-419-price-15s/00F139D412CF203C4DC6895D6C9E4FCC. 
  4. Hiriyanna, M. (1938). "THE INDIAN CONCEPTION OF VALUES". Annals of the Bhandarkar Oriental Research Institute 19 (1): 10–24. 
  5. Mysore, Hiriyanna (24 July 2018). "Outlines of Indian Philosophy". archive.org. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  6. http://www.hindupedia.com/en/Ala%E1%B9%85k%C4%81ra-%C5%9B%C4%81stra .

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_ஹிரியண்ணா&oldid=3391023" இலிருந்து மீள்விக்கப்பட்டது