பூல்பசன் பாய் யாதவ்
பூல்பசன் பாய் யாதவ் (Phoolbasan Bai Yadav) (பிறப்பு:5 திசம்பர் 1969) ஓர் இந்திய சமூக சேவகரும், மா பம்லேஸ்வரி ஜான்ஹித் காரியா சமிதி என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனருமாவார். இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கிய பெண்களின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு பெயர் பெற்றவராவார். [1] [2] [3] இவர் 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ வழங்கி கௌரவிக்கப்பட்டார். [4] "விஷன் இந்தியா அறக்கட்டளை"யின் வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். [5] ரேணுகா சஹானேவுடன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியில் (பருவம் 12) கரம்வீர் சிறப்பு அத்தியாயத்தில் தோன்றினார்.
பூல்பாசன் பாய் யாதவ் | |
---|---|
பிறப்பு | 5 திசம்பர் 1969 சுகுல்தைஹான், தங்கான் , ராஜ்நந்தகாவுன், சத்தீசுகர், இந்தியா |
பணி | சமூக சேவகர் |
விருதுகள் | பத்மசிறீ மினிமாதா அலங்காரன் விருது ஜீ தொலைக்காட்சியின் ஆஸ்டித்வா விருது ஜம்னாலால் பஜாஜ் விருது கண்ணகி ஸ்திரீ சக்தி விருது ஞானானந்தா தேசிய விருது காட்பிரே பிலிப்ஸ் தேசிய துணிச்சல் விருது மகாவீர் அறக்கட்டளை விருது |
வலைத்தளம் | |
http://www.phoolbasanyadav.in/ |
சுயசரிதை
தொகுபூல்பாசன் பாய் யாதவ் சமூகத்தில் பின்தங்கிய ஓர் குடும்பத்தில் 1969 திசம்பர் 5 ஆம் தேதி இந்திய மாநிலமான சத்தீசுகரின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்திலுள்ள தொலைதூர குக்கிராமமான சுகுல்தைஹானில் பிறந்தார். இவர் 10 வயதில் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து கொண்டார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பெற்றார்.
சமூகப் பணிகள்
தொகுமாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களின் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தொடங்கியபோது இவரது சமூக வாழ்க்கை தொடங்கியது. விரைவில், இவர், சொந்தமாக பிரக்யா மஹிலா சமூக், கிராயா பந்தர், பஜார் தேகா போன்ற குழுக்களை உருவாக்கினார். மேலும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களிடையே உணவு விநியோகத்திற்காக பொது விநியோகக் கடைகளை நிறுவினார். பின்னர், மா பம்லேஸ்வரி ஜான்ஹித் காரியா சமிதி என்ற அரசு சாரா அமைப்பை அமைப்பதன் மூலம் ஒரே குடையின் கீழ் தனது அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தார். [6] இந்த அமைப்பு 12000 பெண்கள் சுய உதவிக்குழுக்களை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது. மொத்தம் 200,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. [7][8][9] ஒரு நபருக்கு ₹ 2 வசூலிக்கிறது. இந்த அமைப்பு ₹150 மில்லியனுக்கும் அதிகமான நிதியை குவித்துள்ளது, இது US$ 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம். பங்கேற்கும் குழுக்கள் சுகாதார திட்டங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இவர்கள் வழக்கமான இளம்பிள்ளை வாதம் தடுப்பூசி முகாம்களை நடத்துகிறார்கள். பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளைத் திறந்துள்ளனர், பால் போஜ் போன்ற உணவுத் திட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர். பெண்களுக்கு தையல் மையங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சம்பாதிக்கும் திட்டங்களை அமைக்கின்றனர்.[6] மேலும், குழந்தை திருமணங்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றனர். 54 குழந்தைகளை தத்தெடுத்துள்ள இந்த அமைப்பு, சத்தீசுகர் முழுவதும் ஒரு இருப்பைக் கொண்டுள்ளது. "ஷரப் பந்த்" (மதுபானத்தை நிறுத்துங்கள்) போன்ற சமூக பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளது.[9] இதன் மூலம் மாநிலத்தில் 250 மதுபானக் கடைகளை மூடுவதில் இவர்கள் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு ராஜஸ்தான் அரசாங்கத்தால் பெண் கருவறைக்கான விளம்பரத் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.
விடா முயற்சி
தொகுயாதவ் தனது முயற்சியில் பல தடைகளை சந்தித்துள்ளார். கணவரிடமிருந்து கூட, இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. எவ்வாறாயினும், இவர் தொடர்ந்து நீடித்திருப்பதாக அறியப்படுகிறது. மேலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில், கிராம சபைகளில் பெண்கள் பங்கேற்பைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு இவரது அமைப்பு பெருமை சேர்த்தது. அரசியல் வக்காலத்து மூலம், 250 க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை நிறுத்துவதிலும் இந்த குழு வெற்றி பெற்றுள்ளது. இவர் தனது செய்திகளை முன்னெடுக்க பல கருத்தரங்குகளில் பங்கேற்கிறார். அவற்றில் சிலவற்றில் முக்கிய உரைகளையும் வழங்கியுள்ளார்.[7]
குடும்பம்
தொகுபூல்பசன் பாய் யாதவின் கணவர் கால்நடை வளர்ப்பவராக இருக்கிறார். மேலும் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். [8]
விருதுகளும் அங்கீகாரமும்
தொகு2004 ஆம் ஆண்டில், மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான தனது முயற்சிகளுக்காக, இவர் சத்தீசுகர் மினிமாதா அலங்காரன் விருதைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜம்னாலால் பஜாஜ் விருதும், 2008இல் ஜீ டிவி ஆஸ்டித்வா விருது ஆகியவற்றை ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸிலிருந்து பெற்றார். [6] 2010ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து கண்ணகி ஸ்த்ரீ சக்தி விருதும் சத்குரு ஞானானந்தா தேசிய விருதும் கிடைத்தது. அடுத்த ஆண்டு, 2011இல், இவர் சமூக சேவை பிரிவில் (அமோடினி விருது) காட்ஃப்ரே பிலிப்ஸ் தேசிய துணிச்சல் விருதை வென்றார். [10] [11] இந்திய இந்திய அரசு இவருக்கு 2012இல் பத்மசிறீ விருது வழங்கியது. ஜனன சுரக்ஷா யோஜனா என்ற மகப்பேறு திட்டத்தின் விளம்பரத் தூதராக சத்தீசுகர் அரசு இவரை நியமித்துள்ளது. இவர் 2014 ஆம் ஆண்டிற்கான மகாவீர் அறக்கட்டளை விருதையும் பெற்றுள்ளார். [12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chhattisgarh Top News". Chhattisgarh Top News. 2012. Archived from the original on 10 December 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- ↑ "Jamnalal Bajaj Award". Jamnalal Bajaj Foundation. 2008. Archived from the original on 17 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- ↑ "TIE Nagpur". TIE Nagpur. 2012. Archived from the original on 20 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
- ↑ 6.0 6.1 6.2 "Daily Bhaskar". Daily Bhaskar. 4 March 2013. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- ↑ 7.0 7.1 "CHAI". CHAI. 2014. Archived from the original on 28 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 8.0 8.1 "Utkal Yadav Mahasabha". Utkal Yadav Mahasabha. 2014. Archived from the original on 26 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 9.0 9.1 "TOI". TOI. 23 November 2012. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- ↑ "Moovyshoovy". Moovyshoovy. 2011. Archived from the original on 11 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Godfrey Phillips". India Info Online. 2011. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- ↑ "BMF". BMF. 2014. Archived from the original on 8 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Civil Investiture Ceremony - Padma Shri". Video. YouTube. 4 April 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
- "Padma Shree Phoolbasan Bai Yadav". Video. YouTube. 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
- "Godfrey Phillips National Bravery Award - Investiture Ceremony". Moovyshoovy. 2011. Archived from the original on 11 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)