பெகாசசு (விண்மீன் குழு)
பெகாசசு (Pegasus, பெகாசஸ்) என்பது வடக்கு வானில் உள்ள ஒரு விண்மீன் குழாம் ஆகும். கிரேக்கத் தொன்மவியலில் பெகாசசு என்ற இறக்கைகளுடன் கூடிய குதிரையின் பெயர் இவ்விண்மீன் குழுவிற்கு சூட்டப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியலாளர் தொலெமி வகைப்படுத்திய 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 88 விண்மீன் குழுக்களில் இதுவும் ஒன்று.
பெகாசசு | |
விண்மீன் கூட்டம் | |
பெகாசசு இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Peg |
---|---|
Genitive | Pegasi |
ஒலிப்பு | /ˈpɛɡəsəs/, genitive /ˈpɛɡəsaɪ/ |
அடையாளக் குறியீடு | இறக்கையுடன் குதிரை |
வல எழுச்சி கோணம் | 23 [1] h |
நடுவரை விலக்கம் | +20[1]° |
பரப்பளவு | 1121 sq. deg. (7வது) |
முக்கிய விண்மீன்கள் | 9, 17 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 88 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 12 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 5 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 3 |
ஒளிமிகுந்த விண்மீன் | ε பெக் (2.38m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | EQ பெகாசி (20.38 ly, 6.25 pc) |
Messier objects | 1 |
எரிகல் பொழிவு | யூலை பெகாசிடுகள்
bordering = அந்திரொமேடா லாசெர்ட்டா சிக்னசு வுல்பேகுலா டெல்பினசு எக்கூலியசு கும்பம் மீனம் |
Visible at latitudes between +90° and −60°. அக்டோபர் மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
விண்மீன்கள்
தொகுஇவ்விண்மீன் குழுவில் α பெகாசி, β பெகாசி, γ பெகாசி, ஆகியவற்றுடன் α அந்திரொமேடா ஆகியன இணைந்து பெரும் பெகாசசு சதுக்கம்' என்ற பெயரில் அழைக்கப்படும் பெரும் விண்மீன் கூட்டம் ஒன்றை அமைக்கின்றன.
பெகாசசு விண்மீன் குழாமில் உள்ள 51 பெகாசி என்பதே புறக்கோள் ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய சூரியனைப் போன்ற விண்மீன்களில் முதற்தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டடாகும்.
ஐகே பெகாசி என்பது மிகக்கிட்டவான மீயொளிர் விண்மீன் வெடிப்புள்ள விண்மீன் ஆகும்.
இவ்விண்மீன் குழுவில் உள்ள எச்டி 209458 பி என்ற புறக்கோளில் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள நீராவி இருக்கக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட முதலாவது கோள் என அறியப்பட்டுள்ளது.
பெகாசசில் உள்ள எச்ஆர் 8799 என்ற விண்மீனைச் சுற்றிவரும் புறக்கோள்களே முதற் தடவையாகப் படம் பிடிக்கப்பட்ட புறக்கோள்கள் ஆகும்.
விண்மீன்கள்ன் பெயர்கள்
தொகுபெயர் | பேயர் குறியீடு | ஆரம்பம் | அர்த்தம் |
---|---|---|---|
மார்க்காபு | α | அரபு | குதிரைச் சேணம் |
சியாட் | β | அரபு | கால் |
ஆல்ஜெனிப் | γ | அரபு | விலா |
எனிப் | ε | அரபு | மூக்கு |
ஓமம் | ζ | அரபு | உயர் ஆன்மா |
மாட்டார் | η | அரபு | |
பாகம் | θ | அரபு | கால்நடைகள் |
சடல்பாரி | μ | அரபு |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Pegasus, Constellation Boundary". The Constellations (International Astronomical Union). http://www.iau.org/public/constellations/#peg. பார்த்த நாள்: 13 February 2014.
வெளி இணைப்புகள்
தொகு- The Deep Photographic Guide to the Constellations: Pegasus
- Star Tales – Pegasus
- Pegasus Constellation at Constellation Guide