பெண்கூந்தல் பெரணி
பெண் கூந்தல் பெரணி (Adiantum) [1] அல்லது (maidenhair fern) என்பது நடைபாதை பெரணி, முதுகெலும்புகள் பெரணி எனவும் அழைக்கப்படும். இது டெரிடேசி குடும்பத்தைச் சேர்ந்தது.[2] இது 250 வகை பெரணிகளில் ஒரு வகை ஆகும். சில ஆராய்ச்சியாளர்கள் இதன் சொந்த குடும்பம் அடியாண்டேசி என கூறுகின்றனர். இந்த மரபணு பெயர் கிரேக்கத்திலிருந்து வருகிறது. இதற்கு "ஈரமாக்குதல்" என்று பொருள். இது ஈரமின்றி நீரை உறிஞ்சிவிடும் திறனைக் குறிக்கிறது. இவை தோற்றத்தில் தனித்தன்மை வாய்ந்தவையாகும்.
பெண்கூந்தல் பெரணி | |
---|---|
Western five-fingered fern (Adiantum aleuticum) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Adiantum |
மாதிரி இனம் | |
Adiantum capillus-veneris L. |
விளக்கம்
தொகுபெண் கூந்தல் பெரணியின் தோற்றம் இருண்ட, பெரும்பாலும் கருப்பு நிறமாகவும், பொலிவான பச்சை நிறமாகவும் இருக்கும். இதன் வேர் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. மேலும் இவை தண்டினை ஒத்திருக்கும் இலை திசுக்களின் மடிப்புகளால் மூடப்பட்டிருக்கும். மலட்டு, வளமான இலைகளின் இடையே சிதைவு பொதுவாக நுட்பமாக உள்ளது.
இவை பொதுவாக மட்கிய, ஈரமான, நன்கு வடிகட்டிய தளங்களில், கீழ்நோக்கி மண்ணிலிருந்து செங்குத்து பாறைச் சுவர்களில் வளர்கின்றன. இவற்றின் பல இனங்கள் குறிப்பாக நீர்வீழ்ச்சிகளிலும், நீர் பாய்ச்சல் பகுதிகளிலும் பாறைச் சுவர்களிலும் வளர்ந்து வருகின்றன.
ஆண்டிசு மலைத்தொடர் பகுதிகளில் இவ்வகை தாவரம் அதிக அளவில் உள்ளது. சீனாவில் கிட்டத்தட்ட 40 இனங்கள் கொண்ட பெரணி வகைகள் உள்ளன. கிழக்கு ஆசியாவிலேயே சீனாவில் தான் மிக அதிக இனங்கள் உள்ளன.
வட அமெரிக்காவில் உள்ள இனங்களில் பெரும்பாலும், அ.பெடியம் (ஐந்து விரல்கள் போன்ற இலைகள்) மற்றும் அ.அலுலிக்கம் ஆகியவை அடங்கும். இவை பிஞ்சை ஒரு பக்கத்திற்கு மட்டுமே உட்செலுத்துகின்றன. கேபிலசு-வெனெரிசு (வீனசு-பெரணி) கிழக்கு கண்டத்தில் அதிகளவில் உள்ளன.அ.ஜார்டனி (கலிஃபோர்னியா மைண்டன்ஹெய்ர்) வகை மேற்கு கடற்கரை பகுதியில் உள்ளது.
படத்தொகுப்பு
தொகு-
கரட்டு பெண்கூந்தல் பெரணி (அதியாந்தம் இசுபிடுலம்)
-
அதியாந்தம் குன்னிங்காமி சோரியுள்ள உள்வளை இலைச் சுருள்விளிம்பைக் காட்டுகிறது
-
முக்கோணப் பெண்கூந்தல் (அதியாந்தம் இராடியானம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Sunset Western Garden Book, 1995:606–607
- ↑ Christenhusz, Maarten J. M.; Zhang, Xian-Chun; Schneider, Harald (18 February 2011). "A linear sequence of extant families and genera of lycophytes and ferns". Phytotaxa 19: 7–54. பன்னாட்டுத் தர தொடர் எண்:1179-3163. http://www.mapress.com/phytotaxa/content/2011/f/pt00019p054.pdf.
உசாத்துணை
தொகு- Germplasm Resources Information Network: Adiantum பரணிடப்பட்டது 2009-01-15 at the வந்தவழி இயந்திரம்
- Flora of North America: Adiantum
- Flora of China: Adiantum species list