பெண்ணியமும் ஊடகமும்

பெண்ணியம் என்பது "சமூக, அரசியல் மற்றும் பெண்களின் மற்ற அனைத்து உரிமைகளையும் ஆண்களுக்கு சமமாக ஆதரிக்கும் கோட்பாடு" என வரையறுக்கப்படுகிறது. பெண்ணியவாதிகள் பல்வேறு பாலினங்கள், இனங்கள், இனப் பின்னணிகள் மற்றும் மதங்கள் ஆகியவற்றில் உள்ளனர். பல ஆண்டுகளாக, பெண்ணியவாதிகள் தங்கள் செய்திகளை பரப்புவதற்கு பல்வேறு வகையான ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் செய்தித்தாள், இலக்கியம், வானொலி ஒளிபரப்பு, தொலைக்காட்சி, சமூக ஊடகம் மற்றும் இணையதளம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தாலும் அதோடு மட்டுப்படுத்தப்படவில்லை. ஊடகங்கள் பெண்ணிய கருத்துக்களை பரப்பாமல் இருந்தால், பெண்ணிய இயக்கங்கள் உருவாகியிருக்க வாய்ப்புகள் அமைந்திருக்காது.

வரலாறு தொகு

பெண்ணியத்தின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்து தற்போதுவரை தொடர்கிறது. பெண்ணியத்தை மூன்று தனித்தனி பிரிவுகளாக பிரிக்கலாம்: முதல் அலை, இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலை.

"வாக்குரிமை" மற்றும் "பெண்ணியவாதி" என்ற சொற்கள் வெவ்வேறு இயக்கங்களைக் குறிக்கின்றன, குறிப்பாக வாக்குரிமை என்பது 1900 களின் முற்பகுதியில். தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதை சாத்தியமாக்குவதை இலக்காகக் கொண்டது, ஆனால் பெண்கள் குடும்பச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை வலுப்படுத்தினர் (வீடு, குடும்பம் மற்றும் சமூகத்தை கவனித்தல்). மறுபுறம், பெண்ணியவாதிகள் வாக்குரிமையை ஆதரிப்பது மட்டுமல்லாமல்,"ஆண்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான பங்களிக்கும் உரிமை, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக, பாலியல் சுதந்திரங்கள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரினர். [1]

முதல் அலை பெண்ணியம் தொகு

முதல் அலை பெண்ணியம் என்பது பெண்ணிய இயக்கத்தின் முதல் காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் சட்ட உரிமைகளை, குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலைப் பெண்ணியமாகக் கருதப்படுகிறது. [2]

இரண்டாவது அலை பெண்ணியம் தொகு

இரண்டாவது அலை பெண்ணியம் என்பது பெண் ஒடுக்குமுறைகளை, குறிப்பாக பாலியல், குடும்பம், வேலை போன்ற தளங்களில் பெண்களுக்கு இருக்கும் தடைகளைத் தகர்ப்பதற்காக 1960 களில் தொடங்கி 1970 களின் இறுதிவரை ஐக்கிய அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைக் குறிப்பிடுவதாகும். இது பின்னர் உலகளாவிய அளவில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, துருக்கி இசுரேல் போன்ற நாடுகளுக்கும் பரவியது.இரண்டாவது அலை 1960 களில் குடிசார் உரிமைகள் இயக்கம் மற்றும் போர் எதிர்ப்பு இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டது, இது தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தது. இருந்த போதிலும் இந்த இயக்கங்கள் பெண்களின் உரிமையினை விட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் வியட்நாம் போருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தாக கருத்துக்கள் நிலவுகின்றது.[சான்று தேவை]

மூன்றாவது அலைப் பெண்ணியம் தொகு

மூன்றாம் அலைப் பெண்ணியம் 1990 களின் தொடக்கத்தில் தொடங்கி தற்போது வரை தொடர்கிறது. இந்த இயக்கம் இரண்டாவது அலைப் பெண்ணியத்தின் தோல்விகள் மற்றும் அதன் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இருந்தது.மேலும், இரண்டாம் அலைப் பெண்ணியத்தினை விட பெண்விழையாள், பால் சமத்துவமின்மை, நேர்மறை பாலியல் கருத்த்க்களைத் தோன்றச் செய்தல் போன்ற பல இலக்குகளை கூடுதலாக உருவாக்கியது.

வெகுஜன ஊடகம் தொகு

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தங்கள் பார்வையை பரப்புவதனை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், பெண்ணியம் நீண்ட காலமாக எதிர்மறையான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. [3] லிண்ட் மற்றும் சாயோ (2006) [4] ஆகியோர் மேற்கொண்ட ஒரு ஆய்வில், பெண்ணியவாதிகள் ஊடகங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அரிதாகவே தோன்றுகிறார்கள் இருந்தபோதிலும் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், மற்ற பெண்களை விட அவர்கள் வேறுபட்டவர்களாகவே சித்தரிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டது." ஊடகங்களில், "பெண்ணியம்" என்ற சொல் பெரும்பாலும் "குடும்பம்" என்ற வார்த்தையை எதிர்க்கிறது, இது பெண்ணியவாதிகள் குடும்பப் பெண்களாக இருக்க முடியாது என்ற எண்ணத்திற்கு வழிவகுக்கிறது. பல தசாப்தங்களாக இந்த எதிர்மறையான சித்தரிப்பு பல இளம் பெண்கள் பெண்ணியத்தின் கருத்தை நிராகரிக்க வழிவகுத்தது.

சான்றுகள் தொகு

  1. Finn, M. (2012). A modern necessity: Feminism, popular culture, and american womanhood, 1920-1948. Retrieved from ProQuest Dissertation Publishing.
  2. DuBois, Ellen (1975). "The Radicalism of the Woman Suffrage Movement: Notes toward the Reconstruction of Nineteenth-Century Feminism". Feminist Studies 3 (1/2): 63–71. doi:10.2307/3518956. 
  3. Baker Beck, Debra (1998). "The "F" Word: How the Media Frame Feminism". NWSA Journal 10 (1): 139–153. doi:10.2979/NWS.1998.10.1.139. 
  4. Lind, R., Saio, C. (2006). The framing of feminists and feminism in news and public affairs programs in U.S. electronic media. Journal of Communication, 52, 211-228. doi: 10.1111/j.1460-2466.2002.tb02540.x
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணியமும்_ஊடகமும்&oldid=3278841" இலிருந்து மீள்விக்கப்பட்டது