பெண் கணிதவியலாளர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது குறிப்பிடத்தக்க பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும்.

கணிதவியலில் பெயர்பெற்றவர்கள் பலர் ஆண்களே என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பெண்களில் பலர் கணிதவியலில் ஈடுபட்டனர் எனலாம். பிறகு பல பெண்கள் கணிதவியலிலும் அணுக்கமான புலமாகிய இயற்பியலிலும் குறிப்பிடத்தக்க அரும்பெருஞ்செயல்களை ஆற்றியுள்ளனர். அமெரிக்கக் கணிதவியல் கழகமும் பிற கணிதவியல் கழகங்களும் பெண் கணிதவியலாளர்களை ஊக்குவிக்க பல பரிசுகளைத் தந்து பெருமைபெறச் செய்து வருகின்றன.

மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகம் வைத்திருக்கும் முனைவானப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியல் கட்டுரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.


மரியா கேதனா அகனேசி 1748இல் ஒரு நுண்கணித நூலை முதன்முதலாக எழுதினார். எனவே தொல்பழங் காலத்துக்குப் பிறகு இவர் முதல் பேராசிரியராக பொலோகுனா அறிவியல் கல்விக்கழகத்தில் பணியில் சேர அழைக்கப்பட்டார். ஆனால் அங்கு இவர் சேர்ந்தாரா என்பது தெரியவில்லை.[1]

தொகு

  • அகதா சுமோக்துனோவிச் (1973– ), போலிழ்சு–சுகாட்டிய ஆய்வாளர். இவர் நுண்ணிலை இயற்கணிதவியலில் ஒருபோகு இன்மை வலயங்களைக் கட்டியமைத்தார். அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கைபெற்றவர்
  • அகனேசு சைம் பாக்சுட்டர் (1870–1917), கணிதவியல் முனைவர் பட்டம்பெற்ற இரண்டாம் கனடியரும் நான்காம் வட அமெரிக்கப் பெண்மணியும் ஆவார்.
  • அகனேசு மேயர் திருசுகோல் (1889–1971), முதல், இரண்டாம் உலகப் போர்களில் அமெரிக்க கரவுக் குறியீட்டுப் பகுப்பாய்வாளராக விளங்கியவர்.]]
 
இலவ்லேசுவின் அரசி அடா முதல் கணினி நிரலை எழுதினார். இந்நிரல் பகுப்பாய்வுப் பொறியில் பெர்னவுலி எண்களைக் கணிக்கும் வழிநிரலாகும்.
  • அடா இலவ்லேசு (1815–1852), பாபேஜ் பகுப்பாய்வுப் பொறிக்காக முதலில் கணினி நிரலை இயற்றியவர்.
  • அடா தீட்சு (1882–1950), வடிவமைப்புத் துகில்களில் இயற்கணிதக் கோவைகளை நெய்த அமெரிக்க நெசவாளர்.
  • அடா மாடிசன் (1869–1950), பிரித்தானியக் கணிதவியலாளர். வகைக்கெழு கணிதச் சமன்பாடுகளில் ஆய்வு செய்து பெயர்பெற்றவர்.
  • அபிகைல் தாம்சன் (1958– ), அமெரிக்க தாழ்பருமான இடத்தியல் (கிடப்பியல்) அறிஞர்; கல்விச் சீர்திருத்தவாதி; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • அமி கோகன் கார்வின், கோர்த்தெவெக்-தெ விரைசுச் சமன்பாடுகளிலும் பருமனியல் சுரோடிஞ்சர் சமன்பாடுகளிலும் புலமையுள்ள அமெரிக்க வல்லுநர்.
  • அயோனா துமித்ரியூ (1976– ), உரொமானிய-அமெரிக்க எண்ணியல் பகுப்பாய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • அலிசன் ஈதரிட்ஜ், ஆங்கிலக் கணிதவியல் ஆய்வாளர்; கோட்பாட்டுமக்கள்தொகை மரபியல், கணிதவியல் சூழலியல் ஆய்வாளர்; அரசு கணிதவியல் கழக ஆய்வு நல்கையாளர்.
  • அலிசியா பூல் சுக்காட் (1860–1940), அய்ரிசு=ஆங்கில நாற்பருமானக் கணிதவியலாளர்.
  • அலீசியா டிக்கென்சுட்டைன் (1955– ), அர்ஜெண்டீன இயற்கணித வடிவியலாளர்; பன்னாட்டு கணிதவியல் ஒன்றியத் துணைத்தலைவர்.
  • அலெக்சாந்திரா பெல்லொ (1935– ), நிகழ்தகவியல்,பகுப்பாய்வு, நிகழ்தகவு இயங்கியல் அமைப்புக் (ergodic) கோட்பாட்டின் உரொமேனிய ஆய்வாளர்.
  • அலைசு இலீ (1858–1939), இலண்டன் பல்கலைக்கழகத்தில் முதன்முதலில் கணிதவியல் பட்டம்பெற்ற பெண்மணி.
  • அலைசு உரோத் (1905–1977), சுவீடன் கணிதவியலாளர்; தோராயக் கோட்பாட்டுக்குக் கணிசமானப் பங்களிப்பு செய்தவர்.
  • அலைசு சில்வர்பர்கு, அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; கரவுக் குறியீட்டாய்வாளர், அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • அலைசு ட்டி, சேஃபெர் (1915–2009), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்;கணிதவியல் மகளிர்க்கழகத்தின் நிறுவன உறுப்பினர்.
  • அவுர்யா சினாசியூர், மொராக்கோ கணிதவியல் வல்லுநர்; கணிதவியல் வரலாறு, கோட்பாட்டு ஆய்வில் ஈடுபட்டவர்.
  • அன்னா யோப்பியா கிறிகோவ்சுகா (1904–1988), கணிதவியல் கல்விப் பணிக்காக பெயர்பெற்ற போலந்து கணிதவியலாளர்
  • அன்னா வியனார்டு (1977– ), செருமானிய வகைக்கலன வடிவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • அன்னா ஜான்சன் பெல் வீலர் (1883–1966), ஈறிலிப் பருமான நேரியல் இயற்கணித அமெரிக்க ஆய்வாளர்.
  • அன்னெத்தி இயூபர்-கிளாவிட்டர் (1967– ), செருமானிய இயற்கணித வடிவியலாளர்; பிளாக்-காட்டொ புனைகோள்களின் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • அன்னேலி காஃன் இலாக்சு (1922–1999), அமெரிக்கக் கணிதவியலாளர்;ஜார்ஜ் போல்யா விருது பெற்றவர்.
  • அனா கரையானி, உரொமேனிய-அமெரிக்கப் பன்னாட்டுக் கணிதவியல் கழகப் பதக்கம் பெற்றவரும் புட்னாம் ஆய்வாளரும் ஆவார். இவர் இயற்கணித எண்கோட்பாட்டிலும் இலாங்லாந்த்சு நிரலிலும் வல்லுநர்.
  • அஜீத் இக்பால் சிங் (1943–), சார்புகள் பகுப்பாய்விலும் கிளையலைப் (இசைவலைப்) பகுப்பாய்விலும் ஈடுபட்ட இந்தியக் கணிதவியலாளர்

தொகு

  • ஆட்ரி தெராசு (1942– ), அமெரிக்க எண்ணியல் கோட்பாட்டாளர்; குவையக் குலைவிலும் சீட்டாச் சார்புகளிலும் வல்லுனர்.
  • ஆந்திரியா ஆர். நகுமது, பூரியர் பகுப்பாய்வு, கிளையலைப் பகுப்பாய்வு, பகுதி வகைக்கலனச் சமன்பாடுகளில் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • ஆந்திரியா பெர்தோழ்சி (1965– ), நகர்ப்புறக் குற்றக் கணிதவியல் ஆய்வுகள், பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளின் ஆய்வுகளில் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்.
  • ஆம்லி வில்கின்சன் (1968– ), வாய்ப்பியல்பு இயங்கியல் கோட்பாட்டிலும் சீரொழுங்கு இயங்கியல் அமைப்புகளிலும் ஈடுபட்ட அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • ஆய்சே சோய்சாl (1948– ), துருக்கிக் கணிதவியலாளர்; பொகாசிகி பல்கலைக்கழகத்தின் தலைவர்.
  • ஆர்சியா பி. சுவார்டு (1939–2008), அமெரிக்க்க் கணிதவியல் கழகத்தின் செயல் இயக்குநர்.
  • ஆல்வனி உரோச்சா, இலை குலங்களிலும் விராசோரோ இயற்கணிதக் கணிப்புப் பான்மைகளிலும் திறமை மிக்க அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • ஆலிசன் மில்லர், IMO பொற்பதக்கம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணி; மும்முறைஎலிசபத் உலோவல் புட்னாம் விருது பெற்றவர்
  • ஆலிவ் ஆழ்லெட் (1890–1974), இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க இயற்கணித வல்லுனர்
  • ஆன்னா நாகர்னி, உக்ரேனிய-அமெரிக்க கணிதவியலாளர்; பொருளியலாளர்; கல்வியாளர்; செயல்முறை ஆய்வு மேலாண்மை நூலாசிரியர்.
  • ஆன்னா முல்லிக்கின் (1893–1975), புள்ளிக் கணக் கோட்பாஇல் முதன்முதலில் ஆய்வு செய்த அமெரிக்கக் கணிதவியலாளர்
  • ஆன்னி ஈசுலி (1933–2011), ஆப்பிரிக்க-அமெரிக்க்க் கணினி அறிவியலாளர்;கணிதவியலாளர்; ஏவூர்தி அறிவியலாளர்.
  • ஆன்னி காழ்சனேவ், பிரெஞ்சு விண்வெளிப் புவியளக்கையாளரும் செயற்கைக்கோள் குத்துயர அளவை முன்னோடியும் ஆவர்.
  • ஆன்னி டேல் பிடில் ஆந்திரூசு (1885–1940), இயற்கணிதவியலாளர். இவர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்டம்பெற்ற பெண்மணியாவார்.

தொகு

 
இங்கிரீடு தவுபெச்சீசு தவுபெச்சீசு சிற்றலைகளின் ஆய்வால் பெயர்பெற்றவர்
  • இசபெல்லா இலாபா (1966– ), கிளையலைப் பகுப்பாய்வு, வடிவவியல் அளமானக் கோட்பாடு, கூட்டல்வகைச் சேர்மானவியல் தலைப்புகளில் ஆய்வு செய்த போலந்து-கனடிய வல்லுனர்
  • இடா உரோடேசு (1900–1986), சமூகப் பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கணினியில் கணினி நிரலாக்கம் செய்த முதல் அமெரிக்கப் பெண்மணி
  • இடா பசுபிரிட்ஜ் (1908–1988) தொகையச் சமன்பாடுகளிலும் அரைவழி இடம்பெயர்ப்பு குறித்தும் கல்விபயின்றார். இவர் ஆக்சுஃபோர்டின் முதல் பெண்கணித ஆய்வாளர் ஆவார்.
  • இடா பர்னே (1886–1982), அமெரிக்கக் கணிதவியல் பேராசிரியரும் வானியலாளரும் ஆவார்.
  • இதுன் இரீட்டன் (1942– ), நார்வேஜிய அறிவியல் உருவகிப்புக் கோட்பாட்டாளர்; நார்வேஜிய அறிவியல், இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.
  • இந்துலதா சுக்ளா (1944– ), பூரிர்யை தொடரின் இந்திய ஆய்வாளர்; என்கோட்பாட்டிலும் கரவுக் குறியீட்டாய்விலும் பாட நூல்களின் எழுதியவர்
  • இயூ- எழ்செங் (1928– ), வகைக் கலன வடிவியலாளர்; சாங்காய் கணிதவியல் கழகத்தலைவர்; சீன அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.
  • இரத்தா பிரீதாகு (1908–2000), ஃபிபனோசி எண்களில் ஆத்திரிய-அமெரிக்க வல்லுனர்.
  • இர்ம்ங்கார்டுபுளூகே-லாட்சு (1903–1974), செருமானிய காற்றியங்கியல் ஆய்வாளர்; சுட்டான்ஃபோர்டில் முதல் பெண்பொறியியல் பேராசிரியர்.
  • இர்ரின் பிசுசர் (1907–2009), அறிவன் (புதன்) அப்பொல்லோ விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஆத்திரிய-அமெரிக்கப் புவியளவையாளர்; தேசியப் பொறியியல் கல்விக் கழக உறுப்பினர்.
  • இராகுனி பியேன் (1947– ), நார்வேஜிய இயற்கணித வடிவியலாளர்; நார்வேஜிய அறிவியல் இலக்கியக் கல்விக் கழக உறுப்பினர்.
  • இராமன் பரிமளா (1948– ), இயற்கணிதவியலுக்குப் பங்களித்த இந்தியப் பெண்கணிதவியலாளர்.
  • இரித் தினூர், வாய்ப்பியல்புமுறையில் சரிபார்க்கும் எண்பிப்புகளிலும்தோராய வன்மையிலும் ஈடுபட்ட இசுரேலிய ஆய்வாளர்.
  • இரினா மித்ரியா, உரொமேனிய-அமெரிக்க ஆய்வாளர்; மகளிர், சிறுபான்மையினர் சார்ந்தபகுதி வகைக்கெழுக் கலன ஆய்வு மேற்கொண்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இரீன் எம். காம்பா, அர்ஜெண்டீன-அமெரிக்கப் பயன்முறைக் கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.
  • இரீன் சுதேகன் (1919–2008), செவ்வியல் கணிதவியல் பட்டியல்களைப் பதிப்பித்த அமெரிக்கக் கணிதவியலாளர்.
  • இரீன் பொன்சேகா (1956– ), கார்னிகி-மெல்லான் பல்கலைக்கழகத்தின் நேரிலா பகுப்பாய்வு மையத்தின் போர்த்துகீசிய-அமெரிக்க இயக்குநர்.
  • இரீனா இலசீக்கா, பகுதி வகைக்கெழுக் கலனச் சமன்பாடுகளின் கட்டுபாட்டுக் கோட்பாட்டில் ஈடுபட்ட போலந்து-அமெரிக்க வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இரீனா பீவா,ஒருபோகு இயற்கணிதத்திலும் அதன் பயன்பாடுகளிலும் ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க கணிதவியலாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இரெபேக்கா ஏ. கெர்பு (1948– ), நுண்ணிலை இயற்கனித்த்திலும் இலை குலங்களிலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.
  • இரெஜினா திழ்சுகேவிச், பைலோருசிய வரைவியல் கோட்பாட்டாளர்; இவர் பிறரோடு இணைந்து பிரிஇலைவரைவுகளைப் புனைந்தவர்.
  • இரேகா ஆர். தாமசு, அமெரிக்க்க் கணிதவியலாளர்; செயல்முறை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இரேச்சல் குசுகே, அமெரிக்க-கனடியக் கணிதவியல் வல்லுனர்; தொழிலகக் கணிதவியல், அணுகுகோட்டு முறைகள், நேரிலா தன்வாய்ப்பியல்பு இயங்கியலில் ஆய்வு மேற்கொண்டவர்.
  • இரேதுன் திவரோக், செருமனியில் பிறந்த கணித உயிரியலாளர்.
  • இரேனு சி. இலசுகார், இந்திய-அமெரிக்க வரைவியல் கோட்பாட்டாளர்; ஓங்குமை எண்களிலும் வட்டவில் வரைவியலிலும் வல்லுனர்.
  • இல்டா கெய்ரிஞ்சர் (1893–1973), பூரியர் தொடர், புள்ளியியல், நிகழ்தகவு, விறைதகவு ஆகிய புலங்களில் ஆய்வு மேற்கொண்ட ஆத்திரியக் கணிதவியலாளர்; நாஜி செருமானிய அகதி.
  • இல்டா போபே அட்சன் (1881–1965),இயற்கணித வடிவியலில் கிரெமோனாஉருமாற்றங்களை ஆய்ந்த ஆங்கிலக் கணிதவியலாளர்.
  • இலவுரா டிமாற்கோ, இயங்கியல் அமைப்புகளிலும் கலப்பெண் பகுப்பாய்விலும் ஈடுபட்ட அமெரிக்க ஆய்வாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்
  • இலவுரே புனித இரேமாண்டு (1975– ), பகுதி வகைக்கெழுக் கலனப் பிரான்சு வல்லுனர்; பிரெஞ்சு அறிவியல் கல்விக் கழக உறுப்பினர்.
  • இலவுலவு வான்புரோக்விட்சு (1986– ), கேலிப்பட வரைவாளராக மாறிய சுவீடன் புள்ளிவரைவுப் (pin-up) படிமக் கணிதவியலாளர்.
  • இலிசா கோல்டுபர்க், நிதிப் புள்ளியியல்சார் அமெரிக்கக் கணிதவியல் அறிஞர்
  • இலிசா சாயெர்மன் (1992– ), பன்னாட்டு கணிதவியல் ஒலிம்பியாடு புகழ்முற்றத்தில் மூன்றாம் இடம்பெற்ற செருமானியக் கணிதவியலாளர்
  • இலிசா ஜெஃப்ரீ, குவையப் புலக் கோட்பாட்டிலும் எளிய வடிவியலிலும் வல்லுனர்; கனடிய அரசு கழக ஆய்வாளர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இலிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • இலிண்டா கீன் (1940– ), அமெரிக்கக் கணிதவியலாளர்; கணினி அறிவியலாளர்; அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்.
  • இலிண்டா பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.
  • இலிண்டா பிரீசு உரோத்சைல்டு (1945– ), அமெரிக்க மகளிர் கணிதவியல் கழகத்தின் தலைவர்; அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் துணைத்தலைவர்; கணித ஆய்வு மடல்கள் இதழின் இணை முதன்மை ஆசிரியர்.
  • இலிண்டா பெட்சோல்டு (1954– ), வகைக்கலன இயற்கணித்ச் சமன்பாடுகளிலும் ஒப்புருவாக்கத்திலும் ஈடுபட்ட ஆய்வாலர்; தேசியப் பொறியியல் கல்விக் கழகத்தின் உறுப்பினர்.
  • இலியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.
  • இலில்லி செர்னா (1986– ), எண்ணும் எழுத்தும் என்ற SBS விளையாட்டுக் காட்சியின் இசுரேலிய-ஆத்திரேலிய எண்ணியல் குரு.
  • இலில்லியன் உரோசனோவ் இலீபர் (1886–1986), அமெரிக்க்க் கணிதவியல் பேராசிரியர்; அறிவியலிலும் கணிதவியலிலும் பல மக்கள் அறிவியல் நூல்களை இயற்றியவர்.
  • இலின்னே எச். வாலிங்கு, பிரித்தானிய எண்கோட்பாட்டாளர்; அமெரிக்க்க் கணிதவியல் கழக ஆய்வு நல்கை பெற்றவர்.
  • இலீகு கெழ்சர், இசுரேலிய-கனடியக் கணித உயிரியலாளர்; கணித உயிரியல் கழகத்தின் முதல் பெண்பால் தலைவர்.
  • இலீலா சினேப்சு (1961– ), அமெரிக்க-பிரான்சு எண்கோட்பாட்டாளர்; எண்கணித வடிவியலாளர்;குரோதெண்டிக் நூல்களின் ஆவணக் காப்பாளர்.
  • இலீனா சுத்ரேன்யூ, உரொமானிய-அமெரிக்கக் கணிப்பியல் வடிவியலாளர்; இயக்கவோட்டவியல், கட்டக விறைப்பியல் வல்லுனர்; அமெரிக்கக் கணிதவியல் கழக நல்கை பெற்றவர்.
  • இலெசுலீ சிப்னர் (1934–2013), அமெரிக்க வகைக்கலன வடிவியலாளர்; ஆட்ஜுக் கோட்பாட்டாளர்; இரீமான்-இராக் தேற்றத்துக்கான ஆக்கநிலை (வரைவுவழி) எண்பிப்பைக் கண்டறிந்தவர்.
  • இலெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.
  • இலேதிய் தங் நிகான் (1970– ), வியட்நாமியக் கணிதவியலாளர்; தாய் நாகூயேன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துணைப் புரவலர்; கோவலெவ்சுகாயா பரிசு பெற்றவர்
  • இலை-சாங் யங் (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்
  • இழ்சரி கோங், பன்னாட்டு கணிதவியல் ஒலிபியாடு போட்டியில் இரண்டாம் அமெரிக்கப் பொற்பதக்கம் வென்றவர்.
  • இழ்சாபி கோல்டு வாசர் (1958– ), அமெரிக்காவில் பிறந்த இசுரேலியக் கரவுக் குறியீட்டாய்வாளர்.

தொகு

  • எம்மா காசுடெல்நியோவோ (1913–2014), இத்தாலியக் கணிதவியல் கல்வியாளரான இவர் பாடநூலாசிரியரும் ஆவார்.
  • எமிலீ து சாதலெட் (1706–1749), பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர். இவர் அய்சக் நியூட்டனின் கணிதவியல் நெறிமுறைகள் (Principia Mathematica) எனும் நூலின் உரையாளரும் ஆவார்.
  • எர்த்தா மார்க்சு அய்ர்ட்டன் (1854–1923), ஆங்கிலேயப் பொறியியலாளர். இவர் கணிதவியலாளரும் இயற்பியலாளரும் புதுமைப்புனைவாளரும் ஃஅக்சு பதக்கம் பெற்றவரும் ஆவார்.
  • எல்லன் காயேசு (1851-1930 ), அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் சமூகப் பணியில் முனைவாகச் செயலாற்றினார்
  • எலிசபெத் எஸ். ஆல்மன்,அமெரிக்கக் கணிதவியல்சார் உயிரியலாளரும் ஓர் அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளரும் ஆவார்.

தொகு

  • ஏவா பாயர்-ஃபிளக்கிகர் (1951– ), சுவீடியக் கணிதவியலாளர். இவர் இயற்கணிதக் குழுக்களின் கலாயிசு அண்டவியல் பற்றிய செர்ரியின் கருதுகோளை நிறுவியவர் ஆவார்.

தொகு

  • கத்லீன் அண்டோனெல்லி (1921–2006), அய்ரிசு–அமெரிக்க ஏனியாக்(ENIAC) கணினி நிரலர். இது முதல் பொதுப்பயன் இலக்கக் (எண்மக் )கணினியாகும்.

கா தொகு

  • காத்ரின் பிரிங்மேன் (1977– ) ஒரு செருமானிய எண் கோட்பாட்டாளரும் மாக் தீட்டாச் சார்புகளின் வல்லுநரும் ஆவார். இவர் சாசுத்திரா (SASTRA) இராமாநுசம் பரிசு பெற்றுள்ளார்.

கி தொகு

கெ தொகு

சா தொகு

  • சாரா பில்லி (1968– ), அமெரிக்க இயற்பியல் சேர்மானவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • சாலட்டி பர்னம் (1860–1934),கணிதவியலாளரும் சமூகச் செயல் முனைவாளரும் ஆவார். மேலும் யேல் பலகலைகழகத்தின் முதல் கணிதவியல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணியும் ஆவார்.

சி தொகு

  • சில்வியா போசுமேன் (1947– ), ஆப்பிரிக்க-அமெரிக்க கணிதவியலாளரும் கல்வியியல் ஆட்சியாளரும் ஆவார். அமெரிக்கக்கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • சிலியா கிரில்லோ பரோமியோ (1684–1777), கிளேலி அரையைக் கண்டுபிடித்த ஜெனோவியக் கணிதவியலாளரும் அறிவியலாளரும் ஆவார்.

சு தொகு

  • சுஃபியா யூசஃப் (1984– ), பிரித்தானியப் பாக்கித்தனியக் கணிதவியலாளர். prodigy. பெண்ணிய வலைப்பூ வல்லுநர்.
  • சுசான் ரோசு பெனெடிக்ட் (1873–1942), மிச்சிகன் பல்கலைக்கழக முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி.
  • சுசான் ஜேன் கன்னிங்காம் (1842–1921), சுவார்த்மோர்க் கல்லூரியில் வானியல், கணிதவியல் துறைகளை நிறுவியவர்.
  • சுசேன் பிரென்னர், வகைக்கலனச் சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வில் வல்லுநர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • சுடெஃபானி பி. அலெக்சாந்தர், அர்பனா-சாம்பைனில் உள்ள இல்லினாயிசுப் பல்கலிக்கழகத்தின் வகைக்கலனக் கணிதவியலாளர். இவர் ஓர் AMS ஆய்வாளர் ஆவார்.
  • சுடெல்லா சுன்லிஃபே (1917–2012), பிரித்தானியப் புள்ளியியலாளர்.அரசுப் புள்ளியியல் கழகத்தின் முதல் பெண் தலைவர்.


  • சுன் யங் அலைசு சாங் (1948– ), சீன-அமெரிக்கக் கணிதவியல் பகுப்பாய்வாளம் தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினரும் ஆவார்.

சூ தொகு

  • சூ சாண்டிலர், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.

செ தொகு

  • செனிஃபெர் தூர் சாயெசு (1956– ), வலைகளின் தறுவாய் மாற்றங்களில் வல்லுநர். மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சியில் குலக்கோட்பாட்டை நிறுவியவர்.

சோ தொகு

  • சோஃபி பிரையாண்ட் (1850–1922) ஓர் ஆங்கில-அய்ரிசு கணிதவியலாளரும் கல்வியியலாளரும் பெண்ணியச் செயல்முனைவாளரும் ஆவார்.
  • சோஃபியா யானோவ்சுகாயா (1896–1966), சோவியத் ஒன்றியத்தில் கணீத அளவையியலை மீட்டெடுத்தவர். மார்க்சின் கணிதவியல் குறிப்பேடுகளைப் பதிப்பித்தவர்.
  • சோயியா செஅவுசெசுகு (1949–2006), பொதுவுடைமைத் தலைவரின் மகளான இவர் உரொமேனியாவைச் சார்ந்த கணிதச்சார்புகள் பகுப்பாய்வாளர்.

டி தொகு

டோ தொகு

தொகு

தா தொகு

  • தாத்தியானா அகனேசி (1876–1964), உருசிய- டச்சுக் கணிதவியலாளர். இவர் புள்ளியியல்சார் இயக்கவியல், தற்போக்கியல், வடிவியல் கல்வி ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தார்.

தெ தொகு

தோ தொகு

தொகு

  • நடாஷா ஆர்தின் பர்ன்சுவிக் (1909–2003), செருமனிய-அமெரிக்கக் கணிதவியலாளரும் இதழ்ப்பதிப்பாசிரியரும் ஒளிப்படக்கலை வல்லுநரும் ஆவார்.
  • நளினி அனந்தராமன் (born 1976), பிரெஞ்சுக் கணிதவியல்சார் இயற்பியலாளரும் பாயின்கேர் பரிசாளரும் ஆவார்.


நி தொகு

  • நிக்கோல் பெர்லின் (1944– ), நீள்வட்ட வகைக்கெழு வினையிகளின் சுட்டிக் கோட்பாட்டுப் பிரெஞ்சு ஆய்வாளர்.
  • நினா பாரி (1901–1961), சோவியத் கணிதவியலாளர். முக்கோணவியல் தொடர் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.

பா தொகு

  • பாட்ரிசியா ஈ. பவுமேன், நீர்மப் படிகங்கள், மீக்கடத்திகளின் கணிதவியலில் ஆய்வுகள் செய்தவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • பார்பாரா எம்.பிரிசுவேலா ஒரு தொடக்கநிலைப் பள்ளிச் சிறுவர் கணிதவியல் கல்வி ஆய்வாளர் ஆவார்.
  • பான்னி பெர்கர், அமெரிக்கக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரும் மூலக்கூற்று உயிரியல் கணிப்பு ஆய்வாளரும் ஆவார்.

பி தொகு

  • பிரான்சிசு கேவ்-பிரவுனி-கேவ் (1876–1965), ஆங்கிலேயக் கணிதவியலாளரும் கணினியியலாள்ரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்களைக்கழக கிர்டன் கல்லூரியில் கல்வி கற்பிக்கிறார்.
  • பில்லிசு சின் (1941– ), அமெரிக்க வரைவியலாளரும் கணித வரலாற்றியலளரும் ஆவார்.
  • பின் யூ, Chnese–அமெரிக்கப் புள்ளியியலாளர். கணிதப் புள்ளியியல் நிறுவனத் தலைவர்.

பீ தொகு

பு தொகு

  • புளோரன்சு எல்தாம் (1877–1945), பிரித்தானியப் பள்ளி ஆசிரியர்.எண்ணியல் வரலாறெழுதியவர்.
  • புளோரன்சு எலிசா ஆலன் (1876–1960), விசுகன்சின் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் கணிதவியலாளரும், நான்காம் முனைவர் பட்டம் பெற்றவரும் ஆவார்.

பே தொகு

  • பேன் சங் (1949– ), தய்வானிய-அமெரிக்கத் தற்போக்கு வரைவியல் ஆய்வாளர்.

போ தொகு

  • போடில் பிரன்னர், ஐரோப்பியப் பென் கணிதவியல் கழகத்தை நிறுவியவர். டேனியக் கணிதவியல் கழகத் தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • மர்யோரீ லீ பிரவுன் (1914–1979) கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி ஆவார்.

தொகு

  • மர்லின் பிரீன் ஓர் அமெரிக்கக் கணிதவியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • மரியன்னா சோர்னியேயி (1975– ), இயற்கணிதப் பகுப்பாய்வு, வடிவியல் அளவைக் கோட்பாடு, சார்புகள் பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வுசெய்யும் அங்கேரியர்.
  • மரியா அந்திரியா காசாமேயர் (1700–1780), 18ஆம் நூற்றாண்டு அறிவியலாளர். இவர் ஆய்வு இன்னமும் த்டர்கிரது.
  • மரியா ஏஞ்சலா அர்டிங்கேலி (1730–1825), கணிதவியலாளரும் இயற்பியலாளரும் நிலக்கிழாரும் சுடீஃபன் ஃஏல்சின் இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.
  • மரியா கார்மெ கால்டெரர், பயன்முறைக் கணிதவியலின் எசுப்பானிய ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • மரியா கேதனா அகனெசி (1718–1799), இத்தாலியக் கணிதவியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். இவர்தான் முதன்முதல் பெண் கணிதவியல் பேராசிரியராவார்.
  • மரியா சுதுனோவ்சுகி (1977– ), இசுரேலிய-அமெரிக்க வரைவிய்லாளர்.மெக் டூட்டர் ஆய்வாளரும் ஆவார்.
  • மரியே குரூசு, பிரான்சில் 17ஆம் நூற்றாண்டில் பதின்மப் பகவு அமைப்பை அறிமுகப்படுத்தியவர்.
  • மரியோன் கோகன் (1943– ), அமெரிக்கக் கவிஞரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் கலை அறிவியல் உறவைப் பற்றிக் கற்பிக்கிறார்.

மா தொகு

  • மார்கரெட் கே. பட்லர் (1924–2013) ஒரு கணினி நிரலர். அர்கான்னி தேசிய ஆற்றல் மென்பொருள் மைய இயக்குநர்.
  • மார்ழ்சா பெர்கர் (1953– ), எண்பகுப்பாய்வு, பாய்ம இயங்கியலின் கணிப்பு, இணைக்கணிப்புமுறை ஆகிய புலங்களின் அமெரிக்க ஆய்வாளர்.

மி தொகு

  • மிரியம் கோகன் (1941– ), இசுரேலிய ஆய்வாளர். இவர் ஃஓப் இயற்கணிதம்,குவையக் குலங்கள், ஊடுபரிமாறா வலயங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்கிறார்.

மே தொகு

  • மேரி எல். போசு (1917–2010),இயற்பியல்சார் அறிவியல் புலங்களில் கணிதவியல் முறைகள் நூலின் ஆசிரியர்.
  • மேரி எவரெசுட்டு பூல் (1832–1916), தானாகவே கற்ற, கணித அறவியல் நூலின் ஆசிரியர்.
  • மேரி கார்ட்ரைட் (1900–1998), முதன்முதலில் இயங்கியல் அமைப்பை குழப்பக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆய்வு செய்த பிரித்தானியக் கணிதவியலாளர்.

மோ தொகு

  • மோனிகா கிளேப், இயற்கணித இடத்தியலிலும் நேரிலா பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளிலும் ஆய்வு செய்த மெக்சிக ஆய்வாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

தொகு

  • யங்யூ சோயீ, கொரிய எண்ணியலாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

யு தொகு

  • யுவான்னெ சோக்கெட்-புரூகத் (1923– ), பிரெஞ்சுக் கல்விக்கழகத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண் கணிதவிய்லாளரும் இயற்பியலாளரும் ஆவார்.

யூ தொகு

  • யூகனியா செங், ஆங்கிலேயக் கருத்தினவகைக் கோட்பாட்டாளர்.பியானோக் கலைஞர். கணிதம் அறியதவர்களுக்கு உணவையும் அடுதலையும் வைத்து ஒப்பிட்டு கணிதப் பாடம் எடுப்பவர்.

யோ தொகு

  • யோ போலர், சமச்சீர் கணித வகுப்பறைகளை உருவாக்கிய, கணிதவியல் கல்வியைச் சீர்திருத்திய பிரித்தானிய-அமெரிக்க கணிதவியலாலர்.
  • யோவான் கிளார்க் (1917–1996), பிளெடிலே பூங்கா குறிமுறையை விடிவித்தவர். நானயவியலளர்.
  • யோவான் பர்மன் (1927– ), அமெரிக்க பின்னலியல், முடிச்சுக் கோட்பாட்டாளர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.

ரூ தொகு

  • ரூத் ஆரன்சன் பாரி (1917–2005), அமெரிக்கக் கணிதவியலாளர். வரவுக் கோட்பாட்டுக்காகவும் ஓருருவியக் கருத்துப்படிமத்துக்காகவும் (homomorphisms) பெயர்பெற்றவர்.
  • ரூத் சார்னி, அமெரிக்கர். வடிவியல் குலக்கோட்பாடு,ஆர்ட்டின் குலங்கள் புலங்களில் வல்லுநர். AWM, AMS அமைப்புகளின் தலைவர்.

ரெ தொகு

  • ரெஜினா எஸ். புராச்சிக் ஓர் அர்ஜெண்டீன-ஆசுத்திரிய ஆய்வாளர் ஆவார்.குழிவுப் பகுப்பாய்வு, சார்புகள் பகுப்பாய்வு, சீரிலாமை பகுப்பாய்வு ஆகிய புலங்களில் ஆய்வு செய்தார்.

ரோ தொகு

  • ரோசுமேரி ஏ.பெய்லீ (1947– ), பிரித்தானியப் புள்ளியியலாளர். இவர் செய்முறைகள் வடிவமைப்பிலும் வேறுபாட்டுப் பகுப்பாய்விலும் வல்லுநர்.

லி தொகு

  • லிடா பாரெட் (1927– ), MAAவின் இரண்டாவது பெருந்தலைவர். அமெரிக்கக் கணிதவியல் கழக ஆய்வாளர்.
  • லிண்ட பாசுடாக், ஆங்கில உயர்நிலைப் பள்ளிக் கணிதவியல் பாடநூல்களின் ஆசிரியர்.
  • லியோனி பர்ட்டன் (1936–2007) ஒரு பிரித்தானிய இனவரைக் கணிதவியல்ஆய்வாளர் ஆவார். இவர் அறிவியலில் மகளிர் எனும் தொடர் கணிதவியலாளர் நூல்களின் வரிசையைத் தோற்றுவித்தார்.

லெ தொகு

  • லெனோர் பிளம் (1942– ), பெயர்பெற்ற கார்னிகி மெல்லான் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர்.

லை தொகு

  • லை-சாங் யங் (1952– ) ஹாங்காங்கில் பிறந்த இயங்கியல் அமைப்புக் கோட்பாட்டாளர்.

தொகு

  • வசந்தி என். பட்நாயக் (1938–2009), மும்பைப் பல்கலைக்கழகக் கணிதவியல் துறைத்தலைவரும் சேர்மானவியல் பேராசிரியரும் ஆவார்.

வா தொகு

  • வாலண்டீனா போரக் (1931–2004), சோவியத்- உக்ரேனியக் கணிதவியளாளர். இவர் பகுதி வகைக்கெழுச் சம்ன்பாடுகளின் ஆய்வாளர்.

வி தொகு

ழீ தொகு

ஜா தொகு


மேற்கோள்கள் தொகு

  1. "Maria Gaetana Agnesi". பார்க்கப்பட்ட நாள் 19 August 2015.

வெளி இணைப்புகள் தொகு

இது மெக் டூட்டர் கணிதவியல் வரலாற்று ஆவணக் காப்பகப் பெண் கணிதவியலாளர்களின் பட்டியலாகும். index of female mathematicians.