மேரி கார்ட்ரைட்

பிரித்தானிய கணிதவியலாளர்

டேம் மேரி லூசி கார்ட்ரைட் (Mary Cartwright) (திசம்பர் 17, 1900 - ஏப்ரல் 3, 1998) பிரித்தானிய கணிதவியலாளர்.[1] இவர் ஜெ. இ. லிட்டில்வுட்டுடன் சேர்ந்து ஆய்வு செய்த முதல் பெண் கணிதவியலாளர். அந்த தேற்றம் தற்பொழுது ஒழுங்கின்மை கோட்பாடு என அழைக்கப்படுகிறது.[2] இவர் கல்வி கற்கும் பொழுது பல தேற்றங்களுக்கு ஏராளமான தீர்வுகளைக் கண்டுபிடித்துள்ளார். அவற்றில் பட்டாம்பூச்சி விளைவு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

டேம் மேரி கார்ட்ரைட்
பிறப்பு(1900-12-17)17 திசம்பர் 1900
ஐன்ஹொ, நார்தாம்டன்ஷிரெ, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள்
இறப்பு3 ஏப்ரல் 1998(1998-04-03) (அகவை 97)
கேம்பிரிட்சு, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள்
வாழிடம்கேம்பிரிட்சு, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள்
கல்வி கற்ற இடங்கள்செயின்ட். ஹக்ஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு
ஆய்வு நெறியாளர்ஜி. எச். ஹார்டி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • வாட்டர் ஹேமென்
  • எலிசபெத் மெக்கார்ஹ்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஷீலா ஸ்காட் மேக்ன்டைர்
அறியப்படுவதுகார்ட்ரைட் தேற்றம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஜெ. இ. லிட்டில்வுட்
விருதுகள்எஃப்.ஆர்.எஸ்
டி. மார்கன் பதக்கம்(1968)
எடின்பர்க் ராயல் சமூகத்தின் கௌரவ உறுப்பினர்(1968)
சில்வெஸ்ட்டர் பதக்கம் (1964)

இளமைப் பருவம் மற்றும் கல்வி

தொகு

கார்ட்ரைட் ஐன்ஹொ, நார்தாம்டன்ஷிரெ, ஐன்ஹொவில் பிறந்தார். இவரது தந்தை வில்லியம் டிங்பை கார்ட்ரைட் தேவாலயத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். ஜான் (பிறப்பு 1896), நிகெல் (பிறப்பு 1898), ஜேன் (பிறப்பு 1905) மற்றும் வில்லியம் (பிறப்பு 1907).[3][4][5] இவர் லெமிங்டன் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார்.(1912–1915) பிறகு, பாஸ்கொம்பே, கிராவெலி மனார் பள்ளியிலும், கோடோல்பின் பள்ளியிலும் உயர் கல்வி பயின்றார்(1915-1919).[6]

செயின்ட் ஹக்ஸ் கல்லூரி, ஆக்சுபோர்டில் கணிதம் பயின்று 1923இல் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். 1928 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் முனைவர்பட்டம் பெறுவதற்கு முன், அவர் பக்கிங்ஹாம்ஷையரில், வொய்கெம்பே அபே பள்ளியிலும், வோர்செஸ்டரில் ஆலிஸ் ஒட்லி பள்ளியிலும் கற்றுக்கொண்டார்.[4]

ஜி. எச். ஹார்டியின் மேற்பார்வையில் முனைவர் பட்டத்திற்குப் படித்தார். அவர் படித்த 1928-29ம் கல்வி ஆண்டில் ஹார்டி பிரின்ஸ்டன் இல் இருந்தார். அதனால் ஈ. சி. டிச்மார்ஷ் மேரி கார்ட்ரைட்டுக்கு மேற்பார்வையாளராக கடமைகளை ஏற்றுக் கொண்டார். அவரது ஆய்வானது "சிறப்பு வகைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் பூஜ்யங்கள்" 1930 ஆம் ஆண்டு ஜே. ஈ லிட்டில்வுட்டால் சரிபார்க்கப்பட்டது. கார்ட்ரைட் லிட்டில்வுட்டை முனைவர் பட்டத்துக்கான தனது வாய்மொழித்தேர்வின்போது ஒரு வெளிப்புறத் தேர்வாளராக அவரை முதல் முறையாகச் சந்த்தித்தார், பின்னர் அவருடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.[4]

1930இல் கார்ட்ரைட் "யாரோ ஆய்வு ஃபெலோஷிப்" விருதைப் பெற்றார். பிறகு தனது ஆய்விற்காக கிர்ட்டன் கல்லூரி,கேம்பிரிட்சு சென்றார். அங்கு லிட்டில்வுட்டின் விரிவுரையில் கலந்துகொண்டு அவர் முன்வைத்த கணிதக் கேள்விகளில் ஒன்றுக்கு தீர்வு கண்டுபிடித்தார். அவரது கணிதத் தேற்றம், இப்போது கார்ட்ரைட் தேற்றம் என அறியப்படுகிறது, பகுப்பாய்வு செயல்பாடுகளின் அதிகபட்ச தொகுதியின் மதிப்பீடு கொடுக்கிறது, அது அதே மதிப்பை அலகு வட்டுக்காக p முறைக்கு மேல் எடுக்கும். கோட்பாட்டை நிரூபிக்க லார்ஸ் ஆல்ஃபோர்ஸ் அறிமுகப்படுத்திய மாறா வடிவியலின் புதிய அணுகுமுறையைப் பயன்படுத்தினார்..[7]

தொழில்

தொகு

1936இல் கார்ட்ரைட் கிரிட்டன் கல்லூரியில் கணித ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 1938இல் தனது ஆராய்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புதிய திட்டத்தில் பணிபுரிந்தார். அப்போது அறிவியல் மற்றும் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சித் துறையிலிருந்து சில வகையீட்டு சமன்பாடுகளை மாதிரி வானொலி மற்றும் ரேடார் சேவைக்காக குறிப்பாணை அனுப்பியது.[8] அவர்கள் இலண்டனிலுள்ள கணித அமைப்பை அணுகி இச் சமன்பாடுகளைத் தீர்க்கவல்ல கணிதவியலாளர்களின் உதவியை நாடியது. கார்ட்ரைட் இதில் விருப்பங்கொண்டு அச் சமன்பாடுகளைத் தீர்க்க முயன்றார். ஆனால் அதில் மறைந்துள்ள உட்கருத்துகள் தெரியாததால் லிட்டில்வுட்டின் உதவியை நாடினார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு தீர்வுகளை அடைந்தனர்.[9][10]

1945இல் ஹெர்மைடின் விகிதமுறா எண் ¶ (பை) தேற்றத்தை எளிமைப்படுத்தினார். அவருடைய இந்த பங்களிப்பு "சயின்டிபிக் இன்பெரன்ஸ்" என்னும் புத்தகத்தில் அரோல்டு ஜெப்ரீசு' என்பவரால் எழுதப்பட்டது. 1947இல் ராயல் சமூகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] இதனால் அந்த அமைப்பின் முதல் பெண் கணிதவியலாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.[9][10]

கார்ட்ரைட் 1948இல் கிர்ட்டன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1959 முதல் 1968 வரை கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.[4] 1957 முதல் 1960 வரை கேம்பிரிட்சு பெண்கள் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார்.[12]

இறப்பு

தொகு

இவர் 1998இல் 'மிட்ஃபீல்டு லாட்ஜ் மருத்துவமனை, கேம்பிரிட்சுவில் இறந்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Obituary: Mary Cartwright". தி டைம்ஸ். 1998 இம் மூலத்தில் இருந்து 2017-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170512113259/http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Obits/Cartwright.html. 
  2. Freeman J. Dyson, Mary Lucy Cartwright (1900–1998): Chaos theory, pp. 169–177, in Out of the Shadows: Contributions of Twentieth-Century Women to Physics, edited by Nina Byers and Gary Williams, 498 p. (Cambridge University Press, 2006); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-82197-5
  3. கணித மரபியல் திட்டத்தில் மேரி கார்ட்ரைட்
  4. 4.0 4.1 4.2 4.3 O'Connor, John J.; Robertson, Edmund F., "மேரி கார்ட்ரைட்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  5. "Cartwright biography". www-history.mcs.st-and.ac.uk. University of St. Andrews School of Mathematics and Statistics. பார்க்கப்பட்ட நாள் 15 September 2017.
  6. 6.0 6.1 "Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002" (PDF). Royalsoced.org.uk. Archived from the original (PDF) on 24 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. DeFuria, Jack (22 October 2014). "Mary Lucy Cartwright". Prezi. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
  8. "A Point of View: Mary, queen of maths". BBC News Magazine. 8 March 2013. https://www.bbc.co.uk/news/magazine-21713163. 
  9. 9.0 9.1 "Mistress of Girton whose mathematical work formed the basis of chaos theory". Obituaries Electronic Telegraph. 11 April 1998. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.
  10. 10.0 10.1 Walter Hayman (1 November 2000). "Dame Mary (Lucy) Cartwright, D.B.E. 17 December 1900 – 3 April 1998". Biographical Memoirs of Fellows of the Royal Society 46. doi:10.1098/rsbm.1999.0070. http://rsbm.royalsocietypublishing.org/content/46/19. பார்த்த நாள்: 8 March 2017. 
  11. Hayman, Walter K. (2000). "Dame Mary (Lucy) Cartwright, D.B.E. 17 December 1900 – 3 April 1998: Elected F.R.S. 1947". Biographical Memoirs of Fellows of the Royal Society 46: 19. doi:10.1098/rsbm.1999.0070. 
  12. Cartwright, Dame Mary Lucy (1900–1998), mathematician | Oxford Dictionary of National Biography (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/ref:odnb/69671.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_கார்ட்ரைட்&oldid=3568589" இலிருந்து மீள்விக்கப்பட்டது