பெத்தகட்டு திருவிழா

இந்தியத் திருவிழா

பெத்தகட்டு (Peddagattu jathara) அல்லது கொல்லகட்டு திருவிழா என்பது தெலங்காணா மாநிலத்தின் சூர்யபேட்டை மாவட்டத்தின் துராஜ்பள்ளி கிராமத்தில் (சூர்யபேட்டை நகராட்சியின் புறநகர்) ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் மேலாக இறைவன் இலிங்கமந்துல சுவாமிக்கும் சௌதம்மாவுக்கும் பக்தர்களால் நடத்தப்படும் ஒரு திருவிழாவாகும்.

இங்கு மூலவராக இருக்கும் இலிங்கமந்துல சுவாமி, சிவபெருமானின் அவதாரம் என்று நம்புகின்றனர். மேலும் அவரது சகோதரி - சௌதம்மாவுக்கு ஐந்து நாள் திருவிழாவின் போது பல்வேறு பூஜைகள் வழங்கப்படுகின்றன.

இத்திருவிழாவில் முதன்மையாக யாதவச் சமூகம் பெருமளவில் பங்கேற்கிறது என்றாலும், தெலங்காணா, ஆந்திரப் பிரதேசம், சத்தீசுகர், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, ஒடிசா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து அனைத்து சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் சூர்யபேட்டையிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு வருகிறார்கள். திருவிழா காவல்துறையினரால் ஒழுங்கமைக்கப்படுகிறது. மேலும், தன்னார்வலர்களும் உதவுகின்றனர்.[1] [2]

வரலாற்றின் படி, இந்தத் திருவிழா 16ஆம் நூற்றாண்டிலிருந்து அரசாங்க நிதியுடன் கொண்டாடப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Reddy, T. Karnakar (2015-02-08). "All set for five-day Gollagattu jatara" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/all-set-for-fiveday-gollagattu-jatara/article6870580.ece. 
  2. Reddy, T. Karnakar (2015-02-09). "Divine box holds key to Peddagattu jatara" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/divine-box-holds-key-to-peddagattu-jatara/article6873161.ece. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-06-16. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தகட்டு_திருவிழா&oldid=3564787" இலிருந்து மீள்விக்கப்பட்டது