பென்சிலிக் அமிலம்
பென்சிலிக் அமிலம் (Benzilic acid) என்பது C14H12O3 அல்லது (C6H5)2(HO)C(COOH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமிலமான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. பல முதல்நிலை ஆல்ககால்களில் பென்சிலிக் அமிலம் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Hydroxy(diphenyl)acetic acid
| |
வேறு பெயர்கள்
α,α-டைபீனைல்-α-ஐதராக்சி அசிட்டிக் அமிலம், α,α-டைபீனைல்கிளைக்காலிக் அமிலம், α-ஐதராக்சிபீனைல் அசிட்டிக் அமிலம், 2,2-டைபீனைல்-2-ஐதராக்சி அசிட்டிக் அமிலம், 2-ஐதராக்சி-2,2-டைபீனைல் அசிட்டிக் அமிலம், டைபீனைல் கிளைக்காலிக் அமிலம், ஐதராக்சிடைபீனைல் அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
76-93-7 | |
ChEBI | CHEBI:39414 |
ChEMBL | ChEMBL578171 |
ChemSpider | 6220 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6463 |
| |
பண்புகள் | |
C14H12O3 | |
வாய்ப்பாட்டு எடை | 228.25 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.08 கி/செ.மீ3 |
உருகுநிலை | 150 முதல் 152 °C (302 முதல் 306 °F; 423 முதல் 425 K) |
கொதிநிலை | 180 °C (356 °F; 453 K) (17.3 hPa) |
2 கி/லி (20 °செல்சியசு) | |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R22 |
S-சொற்றொடர்கள் | S23, S24, S25, S28, S36, S37, S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபென்சில், எத்தனால், பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியனவற்றின் கலவையை சூடுபடுத்துவதால் பென்சிலிக் அமிலத்தைத் தயாரிக்க முடியும். பென்சால்டிகைடை இருபடியாக்கல் வினைக்கு உட்படுத்தி பென்சில் தயாரித்த பின்னர், பென்சிலிக் அமில மறுசீரமைப்பு வினையினால் பென்சிலிக் அமிலம் தயாரிக்கும் மற்றொரு முறையை 1838 ஆம் ஆண்டில் இலீபிக் கண்டறிந்தார்[1].
பயன்கள்
தொகுகிளிடினியம், திலான்டின், புளுட்ரோபியம் உள்ளிட்ட கிளைக்கோலேட்டு மருந்துவகைப் பொருட்களை பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. இவை மசுகாரினிக் அசிட்டைல்கோலின் ஏற்பிகளின் எதிர் மருந்துகளாகும்.
திறனழிக்கும் முகவரான 3-குயினுகிளிதினைல் பென்சிலேட்டு பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. மனமருட்சி மருந்துகள் பெருமளவில் தயாரிப்பதற்கு பென்சிலிக் அமிலம் பயன்படுவதால் வேதியியல் ஆயுதங்கள் கூட்டமைப்பில் இதன் பயன்பாடு முறைப்படுத்தப்பட்டது. பல நாடுகளில் கட்டாயச் சட்டத்தின் மூலமாகவும் இதன் பயன்பாடு கண்காணிக்கப்படுகிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Liebig, J. (1838). "Ueber Laurent's Theorie der organischen Verbindungen". Annalen der Chemie 25: 1–31. doi:10.1002/jlac.18380250102.
- ↑ "Nerve Agent Precursors: Benzilic acid and Methyl Benzilate", Factsheets on Chemical and Biological Warfare Agents, Chemical precursors.