பென்சைல் சின்னமேட்டு
பென்சைல் சின்னமேட்டு (Benzyl cinnamate) என்பது C16H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது சின்னமிக் அமிலம் மற்றும் பென்சைல் ஆல்ககாலிலிருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் ஓர் எசுத்தராகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்சைல்3-பீனைல் புரோப்-2-யினோயேட்டு
| |
வேறு பெயர்கள்
பென்சைல் சின்னமேட்டு; சின்னமெயின்; பென்சைல்சின்னமோயேட்டு; பென்சைல் 3-பீனைல்புரோப்பினோயேட்டு; 3-பீனைல்-2-புரோப்பனோயிக் அமில பீனைல்மெத்தில் எசுத்தர்; சின்னமிக் அமில பென்சைல் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
103-41-3 | |
ChemSpider | 4437893 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5273469 |
| |
பண்புகள் | |
C16H14O2 | |
வாய்ப்பாட்டு எடை | 238.29 g·mol−1 |
தோற்றம் | வெண்மை முதல் வெளிர் மஞ்சள் நிறத் திண்மம்[1] |
உருகுநிலை | 34–37 °C (93–99 °F; 307–310 K)[2] |
கொதிநிலை | 195–200 °C (383–392 °F; 468–473 K) 5 மி.மீ பாதரசம் |
கரையாது[1] | |
எத்தனால்-இல் கரைதிறன் | 125 கி/லி |
கிளிசரீன்-இல் கரைதிறன் | கரையாது |
புரோப்பைலீன் கிளைக்கால்-இல் கரைதிறன் | கரையாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்கைத் தோற்றம்
தொகுமைராக்சைலோன் மரத்திலிருந்து கிடைக்கும் பெரு பிசின் மற்றும் தொலு பிசினில் பென்சைல் சின்னமேட்டு தோன்றுகிறது. சுமத்திரா மற்றும் பினாங்கில் பென்சோயின் பிசினிலும் தென் அமெரிக்க மரவகைகளிலிருந்து கிடைக்கும் கோப்பைபா மரப்பிசினின் பகுதிப்பொருளாகவும் இது காணப்படுகிறது [3].
தயாரிப்பு
தொகுபென்சைல் குளோரைடு மற்றும் தண்ணீரில் மிகையளவு சோடியம் சின்னமேட்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 100-115 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது பென்சைல் சின்னமேட்டு உருவாகிறது. ஈரெத்திலமீன் முன்னிலையில் சோடியம் சின்னமேட்டுடன் மிகையளவு பென்சைல் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்கலாம் [3].
பயன்கள்
தொகுபூசுமஞ்சள் போன்ற வாசனைத் திரவியங்களிலும், ஒரு நிலைநிறுத்தியாகவும் [4], நறுமணச்சுவை சேர்க்கும் முகவராகவும் [3] பென்சைல் சின்னமேட்டு பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Specifications for Flavourings". Food and Agriculture Organization. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-04.
- ↑ "Benzyl cinnamate". Sigma-Aldrich.
- ↑ 3.0 3.1 3.2 George A. Burdock (2010), "BENZYL CINNAMATE", Fenaroli's Handbook of Flavor Ingredients (6th ed.), CRC Press, pp. 147–148
- ↑ Karl-Georg Fahlbusch; et al. (2007), "Flavors and Fragrances", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 59
புற இணைப்புகள்
தொகு- Benzyl cinnamate at National Library of Medicine's Toxicology Data Network