பென்சைல் ஆல்ககால்

இரசாயன கலவை

பென்சைல் ஆல்ககால் C6H5CH2OH என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு நறுமண ஆல்ககால் ஆகும். இதற்கு பினைல் கார்பினால என்ற பெயரும் உண்டு. IUPAC முறையில் பினைல் மெத்தனால் எனப்பெயரிடப்பட்டுள்ளது. பென்சைல் குழுவை சுருக்கமாக "Bn" என்று சுருக்கி அழைப்பர். ("Bz" என்ற குறியீடு பென்சாயில் குழுவைக் குறிக்கும்) எனவே இக்குறியீட்டு முறையின்படி பென்சைல் ஆல்ககால் BnOH என்று அழைக்கப்படுகிறது. பென்சைல் ஆல்ககால் ஒரு நிறமற்ற திரவம். இலேசான இனிய நறுமணம் கொண்டதாக உள்ளது. இதன் முனைவுத் தன்மை, குறைவான நச்சுத் தன்மை மற்றும் குறைந்த ஆவி அழுத்தம் போன்ற பண்புகளால் இது ஒரு பயனுள்ள கரைப்பானாக விளங்குகிறது. பென்சைல் ஆல்கஹால் தண்ணீரில் (4 கிராம் / 100 மிலி) பகுதியாகவும் கரிமக் கரைப்பான்களான ஆல்ககால், பென்சீன் மற்றும் டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் முழுமையாகவும் கரைகிறது.

பென்சைல் ஆல்ககால்
Benzyl alcohol
Benzyl alcohol
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பினைல் மெத்தனால்
வேறு பெயர்கள்
பினைல் கார்பினால்
இனங்காட்டிகள்
100-51-6 Y
ChEBI CHEBI:17987 Y
ChEMBL ChEMBL720 Y
ChemSpider 13860335 Y
EC number 202-859-9
InChI
  • InChI=1S/C7H8O/c8-6-7-4-2-1-3-5-7/h1-5,8H,6H2 Y
    Key: WVDDGKGOMKODPV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H8O/c8-6-7-4-2-1-3-5-7/h1-5,8H,6H2
    Key: WVDDGKGOMKODPV-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D00077 Y
பப்கெம் 244
வே.ந.வி.ப எண் DN3150000
  • c1ccc(cc1)CO
  • c1ccc(cc1)CO
UNII LKG8494WBH Y
பண்புகள்
C7H8O
வாய்ப்பாட்டு எடை 108.14 g·mol−1
தோற்றம் colorless liquid
மணம் slightly aromatic
அடர்த்தி 1.044 g cm−3
உருகுநிலை −15.2 °C (4.6 °F; 257.9 K)
கொதிநிலை 205.3 °C (401.5 °F; 478.4 K)
3.50 g/100 mL (20 °C)
4.29 g/100 mL (25 °C)
கரைதிறன் பென்சீன், மெத்தனால், குளோரோஃபார்ம், எத்தனால், ஈதர், அசிட்டோன் ஆகியவற்றில் கரைகிறது.
மட. P 1.10
ஆவியமுக்கம் 0.18 kPa (60 °C)
காடித்தன்மை எண் (pKa) 15.40
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5396
பிசுக்குமை 5.474 cP
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.67 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-352 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
217.8 J/K mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 101 °C (214 °F; 374 K)
வெடிபொருள் வரம்புகள் 1.3–13%
Lethal dose or concentration (LD, LC):
1250 mg/kg (rat, oral)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தோற்றம்

தொகு

பென்சைல் ஆல்ககால் பல தாவரங்களால் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக பழங்கள் மற்றும் தேயிலையில் காணப்படுகிறது. இது மல்லிகை , கருங் குவளை, மற்றும் மனோரஞ்சிதம்[1] போன்ற தாவரங்களின் சாறுகளில் பல்வேறு விதங்களில் காணப்படுகிறது. நீர்நாயின் சுரப்பிகளில் காணப்படும் ரசாயனங்களுள் இதுவும் ஒன்றாகும். நீர்நாயின் தாவர உணவிலிருந்து [2] இச்சேர்மம் சேகரிக்கப்படுகிறது.

தயாரிப்பு முறைகள்

தொகு

பென்சைல் குளோரைடை சோடியம் ஐதராக்சைடுடன் சேர்த்து நீரேற்றம் செய்தல் மூலமாக பென்சைல் ஆல்ககால் தயாரிக்கலாம்.

C6H5CH2Cl + NaOH → C6H5CH2OH + NaCl

மேலும் பார்மால்டிகைடுடன் பினைல் மக்னீசியம் புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் பென்சைல் ஆல்ககால் தயாரிக்கலாம்.

C6H5MgBr + HCHO → C6H5CH2OH + MgBrOH

வேதி வினைகள்

தொகு

மற்ற ஆல்ககால்களைப் போலவே பென்சைல் ஆல்ககாலும் [[கார்பாக்சிலிக் அமிலம் | கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினை புரிந்து எஸ்டர்களைக் கொடுக்கிறது.

C6H5CH2OH + CH3COOH → C6H5CH2COOCH3

கரிமத் தொகுப்பு வினைகளில் இந்த பென்சைல் எஸ்டர்கள் மிகவும் பிரபலமான பாதுகாப்புத் தொகுதியாகும். ஏனெனில் இவற்றை ஓர் எளிமையான ஐதரசனேற்றம் வினையின் மூலம் நீக்கமுடியும்[3]

பென்சைல் ஆல்ககால் அக்ரைலோ நைட்ரைலுடன் வினைபுரிந்து N பென்சைல் அக்ரைலமைடை தருகிறது. இவ்வினை ரைட்டர் வினைக்கு ஓர் எடுத்துக்க்காட்டாகும்.[4]

C6H5CH2OH + NCCHCH2 → C6H5CH2N(H)C(O)CHCH2

பயன்கள்

தொகு

மைகள், வர்ணங்கள், புரையோடுவதைத் தடுக்கும் பூச்சுகள், செயற்கைப் பிசின்கள்[5] ஆகியவற்றை கரைக்க உதவும் ஒரு கரைப்பானாக பென்சைல் ஆல்ககால் பயன்படுகிறது. பல்வேறு எஸ்டர்கள் தயாரிக்க ஒர் முன்னோடியாக இருக்கும் இச்சேர்மம் சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்களில் நறுமணமூட்டியாகவும் பயன்படுகிறது. புகைப்படத் துறையில் உருவேற்றியாக பயன் தருகிறது.

நானோ தொழில் நுட்பப் பயன்கள்

தொகு

மீநுண் கம்பிகளின் மின்னூட்டமில்லா மறுசீரமைப்பில் மின்காப்பு கரைப்பானாக பென்சைல் ஆல்ககால் நானோ தொழில் நுட்பத் துறையில் பயன்படுகிறது [6][7]

சுகாதாரப் பயன்கள்

தொகு

குறைந்த செறிவு கொண்ட பென்சைல் ஆல்ககால் நரம்பு வழி மருந்தாகவும், ஒப்பனை மற்றும் மேற்பூச்சு மருந்துகளாகவும், பாக்டீரியா பெருக்கத்தைத் தடுக்கும் பாதுகாப்புப் பொருளாகவும் பென்சைல் ஆல்ககால் பயன்படுத்தப்படுகிறது.

பென்சைல் ஆல்ககாலின் 5 சதவீத செரிவு கரைசல் 6 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தலைப்பேன் சிகிச்சைக்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல்[8] அளித்துள்ளது.

பிற பயன்கள்

தொகு

குவார்ட்சு மற்றும் கம்பளி இழை ஆகியவற்றில் பென்சைல் ஆல்ககாலின் ஒளிவிலகல் குறியீட்டு எண் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. ஒரு தெளிவான குவார்ட்சுப் பொருள் பென்சைல் ஆல்ககாலில் மூழ்கியுள்ளது எனில், அது கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஒரு குவார்ட்சுப் பொருளின் உண்மைத் தன்மையை அங்கீகரிக்க இச்சோதனை முறை பயனாகிறது. இதேபோல் பென்சைல் ஆல்ககாலில் மூழ்கியிருக்கும் வெள்ளைக் கம்பளியும் கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. கருப்பு இழைகள், தாவர இழைகள் மற்றும் மையத்தில் திணிக்கப்பட்டுள்ள பிற இழைகள் போன்ற அசுத்தங்களை பென்சைல் ஆல்ககால் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

முன் பாதுகாப்பு

தொகு

பென்சைல் ஆல்ககாலின் நச்சுத்தன்மை எலிகளிடத்தில் 1.2 கிராம் / கிலோ எல் டி 50 [9] என்ற குறைந்த அளவில் ( உயிர் போக்கும் அளவு ) உள்ளது. ஆரோக்கியமான நபர்களின் கல்லீரலில் உள்ள கிளைசீனுடன் இணைந்து விரைவாக பென்சாயிக் அமிலமாக ஆக்சிகரணமடைந்து இப்யூரிக் அமிலமாக வெளியேறுகிறது. அதிக அடர்த்தியுடன் இப்யூரிக் அமிலம் வெளிப்படுமானால் சுவாசக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், நாளம் மற்றும் தந்துகிக் குழாய் விரிவு வலிப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கேடுகள் நிகழலாம்.

பிறந்த குழந்தைகளிடத்தில் பென்சைல் ஆல்ககால் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது[10][11] .

பென்சைல் ஆல்ககால் தோல் ஒவ்வாமையை[12] உண்டாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்சைல் ஆல்ககால் கண்களுக்கு[9] மிகுந்த எரிச்சலை உண்டாக்கி கடுமையான பாதிப்பை உண்டாக்குகிறது. தூய பென்சைல் ஆல்ககால் கருவிழி நசிவை[13] உருவாக்குகிறது.

பென்சைல் ஆல்ககால் புற்று நோயை உருவாகுமென்றோ இனப்பெருக்க விளைவுகளை உண்டாக்குமென்றோ தகவல்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை[9]

வெளிப்புற இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Merck11th.
  2. The Beaver: Its Life and Impact. Dietland Muller-Schwarze, 2003, page 43 (book at google books)
  3. Furuta, Kyoji; Gao, Qing-Zhi; Yamamoto, Hisashi (1995). "Chiral (Acyloxy)borane Complex-Catalyzed Asymmetric Diels-Alder Reaction: (1R)-1,3,4-Trimethyl-3-Cyclohexene-1-Carboxaldehyde". Organic Syntheses 72: 86. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv9p0722. ; Collective Volume, vol. 9, p. 722.
  4. Parris, Chester L. (1962). "N-benzylacrylamide". Organic Syntheses 42: 16. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0073. ; Collective Volume, vol. 5, p. 73.
  5. Benzyl alcohol, chemicalland21.com.
  6. A. D. Wissner-Gross, "Dielectrophoretic reconfiguration of nanowire interconnects[தொடர்பிழந்த இணைப்பு]", Nanotechnology 17, 4986–4990 (2006).
  7. Nanowires get reconfigured, Nanotechweb.org, 19 October 2006, archived from the original on 28 அக்டோபர் 2010, பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2014.
  8. Prescribing Information for Ulesfia Lotion (PDF), Sciele Pharmaceuticals, Inc., April 2009, archived from the original (PDF) on 2017-08-09, பார்க்கப்பட்ட நாள் 2009-08-29.
  9. 9.0 9.1 9.2 Friedrich Brühne; Elaine Wright (2007), "Benzyl Alcohol", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, pp. 7–8
  10. Carl R. Baum (2008), "Examples of mass exposures involving the pediatric population", in Jerrold B. Leikin; Frank P. Paloucek (eds.), Poisoning and Toxicology Handbook (4th ed.), Informa, p. 726
  11. Juan Gershanik; et al. (1982), "The gasping syndrome and benzyl alcohol poisoning.", N Engl J Med, 307: 1384–8, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1056/nejm198211253072206 {{citation}}: Explicit use of et al. in: |author= (help)
  12. EJ Curry; EM Warshaw (2005), "Benzyl alcohol allergy: importance of patch testing with personal products.", Dermatitis (16): 203–8
  13. Swarupa G Kulkarni; Harihara M Mehendale (2005), "Benzyl Alcohol", Encyclopedia of Toxicology, vol. 1 (2nd ed.), Elsevier, pp. 262–264
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சைல்_ஆல்ககால்&oldid=3330692" இலிருந்து மீள்விக்கப்பட்டது