பென்சோடிரைகுளோரைடு

ஒளி அல்லது டைபென்சாயில் பெராக்சைடு போன்ற இயங்குறுப்பு தொடக்கி வினையூக்கியாகச் செயல்பட , தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்ற வினைக்கு உட்படுத்தினால் பென்சோடிரைகுளோரைடு உருவாகிறது.

பென்சோடிரைகுளோரைடு (Benzotrichloride) என்பது C6H5CCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சோமுக்குளோரைடு, முக்குளோரோதொலுயீன், டிரைகுளோரோதொலுயீன் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சாயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஒர் இடைநிலைப் பொருளாக பென்சோடிரைகுளோரைடு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது [1][2][3].

பென்சோடிரைகுளோரைடு
Skeletal formula of benzotrichloride
Ball-and-stick model of the benzotrichloride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(டிரைகுளோரோமெத்தில்)பென்சீன்
வேறு பெயர்கள்
தொலுயீன் டிரைகுளோரைடு
பீனைல் குளோரோபார்ம்
ஆல்பா, ஆல்பா, ஆல்பா-டிரைகுளோரோதொலுயீன்
இனங்காட்டிகள்
98-07-7 Yes check.svgY
ChemSpider 7089 N
13882366 N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19166 Yes check.svgY
பப்கெம் 7367
வே.ந.வி.ப எண் XT9275000
UNII U62VHG99AM Yes check.svgY
பண்புகள்
C7H5Cl3
வாய்ப்பாட்டு எடை 195.48
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 1.3756 கி/மி.லி
உருகுநிலை
கொதிநிலை 220.8 °C (429.4 °F; 493.9 K)
0.05 கி/லி
கரைதிறன் கரிமக் கரைப்பான்கள்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R45 R22 R23 R37/38 R41
S-சொற்றொடர்கள் S53 S45
தீப்பற்றும் வெப்பநிலை 97.22 °C (207.00 °F; 370.37 K)
Autoignition
temperature
420 °C (788 °F; 693 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமெரிக்காவில் இச்சேர்மத்தை அதிக தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பென்சோடிரைகுளோரைடு தயாரிப்பது, சேமிப்பது, பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அங்கு கட்டுப்படுத்தப்படுகின்றன [4].

தயாரிப்புதொகு

ஒளி அல்லது டைபென்சாயில் பெராக்சைடு போன்ற இயங்குறுப்பு தொடக்கி வினையூக்கியாகச் செயல்பட , தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்ற வினைக்கு உட்படுத்தினால் பென்சோடிரைகுளோரைடு உருவாகிறது. இவ்வினையில் இரண்டு இடைநிலை வேதிப்பொருட்கள் உருவாவதாக அறியப்படுகின்றன. C6H5CH3 + Cl2 → C6H5CH2Cl + HCl

C6H5CH2Cl + Cl2 → C6H5CHCl2 + HCl

C6H5CHCl2 + Cl2 → C6H5CCl3 + HCl

பயன்கள்தொகு

பென்சோடிரைகுளோரைடு ஒரு பகுதியாக நீராற்பகுக்கப்பட்டு பென்சாயில் குளோரைடு உருவாகிறது :[1]

C6H5CCl3 + H2O → C6H5C(O)Cl + 2 HCl.

பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பதற்கு உதவும் முன்னோடிச் சேர்மமான பென்சோடிரைபுளோரைடாகவும் இச்சேர்மத்தை மாற்றிமுடியும் :[5]

C6H5CCl3 + 3 KF → C6H5CF3 + 3 KCl.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Rossberg, Manfred; Lendle, Wilhelm; Pfleiderer, Gerhard; Tögel, Adolf; Dreher, Eberhard-Ludwig; Langer, Ernst; Rassaerts, Heinz; Kleinschmidt, Peter et al. (2006). "Chlorinated Hydrocarbons". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: 139. doi:10.1002/14356007.a06_233.pub2. 
  2. Merck Index, 11th Edition, 1120.
  3. Benzotrichloride Data page at Inchem.org
  4. 40 C.F.R.: Appendix A to Part 355—The List of Extremely Hazardous Substances and Their Threshold Planning Quantities (July 1, 2008 ). Government Printing Office. http://edocket.access.gpo.gov/cfr_2008/julqtr/pdf/40cfr355AppA.pdf. பார்த்த நாள்: October 29, 2011. 
  5. Bonath, B.; Förtsch, B.; Saemann, R. (1966). "Kinetische Untersuchung einer Seitenkettenchlorierung unter Verwendung eines Analogcomputers". Chemie Ingenieur Technik 38 (7): 739–742. doi:10.1002/cite.330380711. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சோடிரைகுளோரைடு&oldid=2919214" இருந்து மீள்விக்கப்பட்டது