பெபியாலோ ஜியானாட்டி
பெபியோலா கியானோட்டி (Fabiola Gianotti, இத்தாலியன்;அக்டோபர் 29, 1960) ஒரு இத்தாலிய துகள் இயற்பியலாளரும், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குனரும் ஆவார்.மேலும் இந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவராவார்.[2][3] இந்த ஆணையம், 2016, ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு இவருடைய தலைமையில் இயங்கும்.
பெபியாலோ ஜியானாட்டி | |
---|---|
இலண்டன் அரச கழகத்தில் சேர்ந்த நாளில் (ஜூலை, 2018) பெபியாலோ ஜியானாட்டி | |
பிறப்பு | ரோம், இத்தாலி |
தேசியம் | இத்தாலியர் |
துறை | துகள் இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | மிலன் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇளம் வயதிலிருந்தே, ஜியோனி தன்னைச் சுற்றியுள்ள உலகின் மீதும் இயற்கையின் மீது ஆர்வம் காட்டினார். அவரது தந்தை, புகழ்பெற்ற புவியியலாளர் ஆவார். அதனால் அவர் இயற்கையைக் கற்க ஊக்குவித்தார். " இயற்கையின் மீதான எனது அன்பும் பேரார்வவும் எனது தந்தையிடமிருந்து விதைக்கப்பட்டது தான் " என்று அவர் அறிவியல் ஒரு நேர்க்காணலில் கூறியுய்ள்ளார்.[4]
ஜியோனிட்டி. முதலில் அவர் இசை, மனிதநேயம், தத்துவம் ஆகியவற்றின் மீது தனது கவனத்தைச் செலுத்தி ஆய்வு செய்தார்.[5] பின்னர் விஞ்ஞானி மேரி கியூரி பற்றிய ஒரு சுயசரிதைப் படித்த பிறகு, அறிவியல் ஆய்வின்மீது ஆர்வம் கொண்டார்.1989 இல் மிலன் பல்கலைக் கழகத்தில் துகள் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொழில் மற்றும் ஆராய்ச்சி
தொகுஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பிந்தைய முதுகலை முனைவர் பதவிகளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 2013 இல் அவர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயற்பியல் துறையில் ஆய்வியல் வல்லுநராக ஆனார்., அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு, மற்றும் ஆகஸ்ட் 2013 இல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியராகவும் இருந்தார்.[6] இவர் யுனைட்டெட் தேசிய அறிவியல் அகாடமியின் [7] வெளிநாட்டு இணை உறுப்பினராகவும், இத்தாலிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகவும் [6] பிரஞ்சு அறிவியல் அகாடமியின் வெளிநாட்டு இணை உறுப்பினராகவும் உள்ளார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ ATLAS - "The physics dream", Fabiola Gianotti, Oct 2008 (UMich Web Lecture Archive Project)
- ↑ "Fabiola Gianotti signs her contract as CERN's new Director-General". பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
- ↑ Higgs hunter will be CERN's first female director: Italian physicist Fabiola Gianotti will take the reins at the European physics powerhouse in 2016..
- ↑
{{cite web}}
: Empty citation (help) - ↑ "Fabiola Gianotti: woman with the key to the secrets of the universe | Observer profile". பார்க்கப்பட்ட நாள் 2018-07-17.
- ↑ 6.0 6.1 "Honorary Professor: Fabiola Gianotti". Archived from the original on 28 August 2015. பார்க்கப்பட்ட நாள் 28 August 2015.
- ↑ "National Academy of Sciences Members and Foreign Associates Elected". Archived from the original on 31 August 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
- ↑ "Quinze nouveaux associés étrangers à l'Académie des sciences" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.