பெரம்பூர் வேங்கடேச பெருமாள் கோயில்
வேங்கடேச பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் வேங்கடேச பெருமாள் மற்றும் தாயார் பத்மாவதி ஆவர்.[1]
பெரம்பூர் வேங்கடேச பெருமாள் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°06′44″N 80°15′07″E / 13.112135°N 80.252035°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவிடம்: | பெரம்பூர் கிழக்கு |
சட்டமன்றத் தொகுதி: | பெரம்பூர் |
மக்களவைத் தொகுதி: | வட சென்னை |
ஏற்றம்: | 27.73 m (91 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | வேங்கடேச பெருமாள் |
தாயார்: | மகாலட்சுமி |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாணம், பெருமாள் - ஆண்டாள் திருக்கல்யாணம், கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, பகல் பத்து, இராப்பத்து, புரட்டாசி சனிக்கிழமைகள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 27.73 மீ. உயரத்தில், (13°06′44″N 80°15′07″E / 13.112135°N 80.252035°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெரம்பூர் கிழக்குப் பகுதியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
தொகுவைகுண்ட ஏகாதசி, பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாணம், பெருமாள் - ஆண்டாள் திருக்கல்யாணம், கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, பகல் பத்து, இராப்பத்து, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.
இதர தெய்வங்கள்
தொகுஅனுமன், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள், நரசிம்மர், கருடாழ்வார், சுதர்சனவல்லி மற்றும் விசயவல்லி சமேத சக்கரத்தாழ்வார், திருமலை விநாயகர், இராமானுசர், மணவாள மாமுனிகள், கலிவரதன், பரமபதநாதன், வேணுகோபாலன், விஷ்ணு துர்க்கை, சந்தான கிருஷ்ணன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் நிகாமாந்த மகாதேசிகன் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Perumalkovilperambur.org - Chennai". Perumal Kovil Perambur (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-15.