பெரிய காட்டு ஆந்தை

ஒரு ஆந்தை வகை

பெரிய காட்டு ஆந்தையானது (Forest Eagle Owl, Bubo nipalensis) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைகண்டத்தில் காணப்படும் ஒர் இரவாடி இனமாகும்.

பெரிய காட்டு ஆந்தை
Spot-bellied Eagle-Owl by N.A. Nazeer.jpg
பெரிய காட்டு ஆந்தை
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: இசுடிரிங்கிபார்மிசு
குடும்பம்: இசுடிரிங்கிடே
பேரினம்: Bubo
இனம்: B. nipalensis
இருசொற் பெயரீடு
Bubo nipalensis
Hodgson, 1836

உடலமைப்புதொகு

63 செ.மீ. - குண்டான தோற்றமும் கரும்பு பழுப்பு நிறமான உடலும் கொண்டது. பழுப்பு நிறப்பட்டைக் கோடுகளும் சிறு திட்டான பழுப்புப் புள்ளிகளும் உள்ள மார்பையும் வயிற்றையும் கொண்டது.

 
பெரிய காட்டு ஆந்தையின் ஒவியம்

காணப்படும் பகுதிகள் & உணவுதொகு

மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பசுமைமாறா அடர்காடுகளில் உயர் அடத்தியான கிளைகளில் தூங்கியபடி பொழுதைக்கழிக்கும். இரவில் வெளிப்பட்டு காடை, கௌதாரி, முயல் ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடுவதோடு மலைவாழ் மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கோழி, புறா, பூனை ஆகியவற்றையும் தூக்கிச் செல்லும். காட்டில் இறந்து கிடக்கும் புலி முதலான பெரிய விலங்குகளின் இறைச்சியையும் தின்பதுண்டு. ஆழ்ந்த குரலில் நெடுந்தொலைவு கேட்கும்படியாக ஹீட் ஹீட் எனக் கத்தும்.

இனப்பெருக்கம்தொகு

 
இளம் பெரிய காட்டு ஆந்தை

டிசம்பர் முதல் ஜனவரி முடிய வயதான பெரியமரப் பொந்துகளிலும் கழுகு முதலான பறவைகள் கட்டிய பழைய கூட்டிலும் பாறை இடுக்குளிலும் மலைக்குகைகளில் தரையிலும் ஒரு முட்டை மட்டும் இடும். கூட்டை நெருங்குபவர்களைக் கோபத்தோடு தாக்கும்.

 
தென் இந்தியா -பிலிகிரிரங்கா மலை அருகே காணப்படும்பெரிய காட்டு ஆந்தை

[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Bubo nipalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:76

வெளி இணைப்புகள்தொகு

  • cryptozoology.com: Devil Bird. Retrieved 2006-DEC-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_காட்டு_ஆந்தை&oldid=3181172" இருந்து மீள்விக்கப்பட்டது