பெரிய குக்குறுவான்

பெரிய குக்குறுவான்
Great barbet in Godawari, Lalitpur
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகாலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. வைரன்சு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் வைரன்சு
போத்தாரெட், 1783

பெரிய குக்குறுவான் (Great barbet)(சைலோபோகன் வைரன்சு) என்பது இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு ஆசியக் குக்குறுவான் ஆகும். இது 3,000 m (9,800 அடி) வரை உயரமுள்ள முதன்மையான காடுகளில் வாழ்கிறது. இதன் பரவலான வாழிடம் காரணமாக 2004ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

வகைப்பாட்டியல் தொகு

 
பா பிதேசிய பூங்காவில் பெரிய குக்குறுவான்

புக்கோ வைரன்சு என்பது 1783ஆம் ஆண்டில் பீட்டர் போடார்ட் என்பவரால் முன்மொழியப்பட்ட பெரிய குக்குறுவானின்விலங்கியல் பெயர் ஆகும். சீனாவில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் அடிப்படையில் 1781ஆம் ஆண்டில் ஜார்ஜஸ்-லூயிஸ் லெக்லெர்க், காம்டே டி பபன் ஆகியோர் இதனை விவரித்தனர்.[2][3] இது பிரான்சுவா-நிக்கோலஸ் மார்டினெட்டால் பொறிக்கப்பட்ட கை வண்ணத் தட்டில் விளக்கப்பட்டுள்ளது.[4]

இது 1842ஆம் ஆண்டில் ஜார்ஜ் இராபர்ட் கிரேவால் முன்மொழியப்பட்ட மெகலைமா பேரினத்தில் பின்னர் இது சேர்க்கப்பட்டது. இவர் புக்கோவிற்கு பதிலாக மெகலைமா பெயரைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தார்.[5][6] 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், பின்வரும் பெரிய குக்குறுவான் விலங்கியல் மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன:

  • 1870-ல் இராபர்ட் சுவைகோவால் முன்மொழியப்பட்ட மெகலேமா மார்ஷலோரம் இமயமலை மாதிரியினை அடிப்படையாகக் கொண்டது.[7]
  • 1926-ல் ஈ.சி. இசுடூவர்ட் பேக்கரால் முன்மொழியப்பட்ட மெகாலைமா விரென்சு மேக்னிபெரா என்பது மணிப்பூரின் மச்சியைச் சேர்ந்த ஒரு ஆண் குக்குறுவான் ஆகும்.[8]
  • 1941-ல் எர்ணஸ்ட் மாயரால் முன்மொழியப்பட்ட மெகாலைமா விரென்சு கிளாமேடர் வடக்கு மியான்மரில் சேகரிக்கப்பட்டது[9]

குக்குறுவான்களின் மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆராய்ச்சி, மெகலைமா பேரினத்தில் உள்ள பறவைகள் ஒரு இனகிளையினை உருவாக்குகின்றன எனத் தெரிவிக்கின்றது. இதில் செவ்வால் குக்குறுவான்களும் அடங்கும். இது சைலோபோகன் பேரினத்தில் வைக்கப்பட்ட ஒரே சிற்றினமாகும். இந்த பேரினத்தில் முன்பு வைக்கப்பட்ட குக்குறுவான்கள் சைலோபோகன் பேரினத்தின் கீழ் மறுவகைப்படுத்தப்பட்டன.[10][11]

நான்கு பெரிய குக்குறுவான் துணையினங்கள் 2014-ல் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[11]

கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாமில் நிகழும் செங்குத குக்குறுவானுடன் (சை. லாகிராண்டியேரி ) பெரிய குக்குறுவான் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது என்று ஆசியக் குக்குறுவான்களின் பரிணாம மரபு வழி ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.[12]

விளக்கம் தொகு

 
இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய குக்குறுவான்

பெரிய குக்குறுவான் நீல தலை, பெரிய மஞ்சள் அலகு, பழுப்பு மற்றும் பச்சை-கோடிட்ட உடல், வயிறு மற்றும் சிவப்பு எச்சவாயினைக் கொண்டுள்ளது. இறகுகள் பச்சை நிறத்தில் இருக்கும். இது 32–35 cm (13–14 அங்) உடல் நீளம் கொண்ட மிகப்பெரிய குக்குறுவான் சிற்றினமாகும். இதன் 192–295 g (6.8–10.4 oz) ஆகும்.[11][13]

பரவல் மற்றும் வாழ்விடம் தொகு

 
இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய குக்குறுவான்
 
சரகானில் பெரிய குக்குறுவான்

பெரிய குக்குறுவான் இமயமலையின் கீழ்-மத்திய உயரத்தில் வசித்து இனப்பெருக்கம் செய்யும் பறவையாகும். இது வட இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகள், லாவோஸ் வரை காணப்படுகிறது.[1] [14]

நடத்தை மற்றும் சூழலியல் தொகு

காயெங் கிராசான்தேசிய பூங்காவில் பெரிய குக்குறுவான்

பெரிய குக்குறுவானின் கூடு கட்டும் காலம் ஏப்ரல் முதல் சூலை வரை ஆகும். இது பொதுவாக மரப்பொந்துகளில் கூடுகளை உருவாக்குகிறது. ஆண் மற்றும் பெண் இருபறவைகளும் குஞ்சுகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். இதன் உணவில் முக்கியமாகப் பழங்கள் மற்றும் பூச்சிகள் உள்ளன.[14] ஆணின் ஒலி மிகவும் சத்தமாக கயா-ஒக் எனவும் . எச்சரிக்கை அழைப்பு கடுமையான கியேப் எனவும் மற்றொரு அழைப்பு மீண்டும் மீண்டும் வரும் பியாவு-பியாவு-பியாவு-பியாவு என அமைகின்றது.[11]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 BirdLife International (2018). "Psilopogon virens". IUCN Red List of Threatened Species 2018: e.T22681591A130043742. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22681591A130043742.en. https://www.iucnredlist.org/species/22681591/130043742. பார்த்த நாள்: 20 November 2021.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "iucn status 20 November 2021" defined multiple times with different content
  2. Boddaert, P. (1783). "871. Le grand Barbu, Buff. XIII" (in fr). Table des Planches Enluminées d'histoire naturelle de M. D'Aubenton : avec les denominations de M.M. de Buffon, Brisson, Edwards, Linnaeus et Latham, precedé d'une notice des principaux ouvrages zoologiques enluminés. Utrecht. பக். 53. https://archive.org/details/tabledesplanches00bodd/page/52. 
  3. Buffon, G.-L. L. (1781). "Le grand Barbu" (in fr). Histoire Naturelle des Oiseaux. Paris. பக். 159. https://biodiversitylibrary.org/page/42410640. 
  4. Buffon, G.-L. L. (1765–1783). "Grand barbu, de la Chine". Planches Enluminées D'Histoire Naturelle. Paris. பக். Plate 871. https://biodiversitylibrary.org/page/35224645. 
  5. Gray, G. R. (1842). "Appendix to a List of the Genera of Birds". A List of the Genera of Birds (Second ). London: R. and J. E. Taylor. பக். 12. https://archive.org/details/listofgeneraofbi00gra/page/12. 
  6. "Genus Megalaima G. R. Gray". Check-list of Birds of the World. Cambridge, Massachusetts: Harvard University Press. 1948. https://archive.org/details/checklistofbirds61948pete/page/30. 
  7. Swinhoe. R. (1870). "The large Barbet of the Himalayas in want of a Name!". The Annals and Magazine of Natural History; Zoology, Botany, and Geology. 4 6 (31): 348. doi:10.1080/00222937008696265. https://archive.org/details/mobot31753002133806. 
  8. Baker, E. C. S. (1926). "Mr. E. C. Stuart Baker sent the following remarks on Oriental birds". Bulletin of the British Ornithologists' Club 47 (308): 41–45. https://archive.org/details/bulletinofbritis47tayl. 
  9. Stanford, J. K.; Mayr, E. (1941). "The Vernay‐Cutting Expedition to Northern Burma. Part V". Ibis 83 (4): 479–518. doi:10.1111/j.1474-919X.1941.tb00647.x. 
  10. Moyle, R. G. (2004). "Phylogenetics of barbets (Aves: Piciformes) based on nuclear and mitochondrial DNA sequence data". Molecular Phylogenetics and Evolution 30 (1): 187–200. doi:10.1016/S1055-7903(03)00179-9. பப்மெட்:15022769. 
  11. 11.0 11.1 11.2 11.3 del Hoyo, J. (2020). "Great Barbet Psilopogon virens". Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. Barcelona, Spain and Cambridge, UK. https://www.hbw.com/species/great-barbet-psilopogon-virens.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "HBW2014" defined multiple times with different content
  12. Den Tex, R.-J.; Leonard, J. A. (2013). "A molecular phylogeny of Asian barbets: Speciation and extinction in the tropics". Molecular Phylogenetics and Evolution 68 (1): 1–13. doi:10.1016/j.ympev.2013.03.004. பப்மெட்:23511217. 
  13. Grimmett, R.; Inskipp, T. (2018). "Great Barbet". Birds of Northern India. London, New York: Bloomsbury Publishing. https://books.google.com/books?id=bRttDwAAQBAJ&pg=PT180. 
  14. 14.0 14.1 Ali (1996). The Book of Indian Birds. Oxford: Oxford University Press. https://archive.org/details/bookofindianbird0000alis.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "abc" defined multiple times with different content
  • Robson, C. (2002). A Field Guide to the Birds of Thailand. London, Sydney, Auckland: New Holland. 

வெளி இணைப்புகள் தொகு

  • Birdlife International (2019). "Great Barbet Psilopogon virens".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_குக்குறுவான்&oldid=3794260" இலிருந்து மீள்விக்கப்பட்டது