பெரிலியம் கார்பைடு

பெரிலியம் கார்பைடு (Beryllium carbide) என்பது Be2C,என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒர் உலோக கார்பைடு ஆகும். வைரத்திற்கு நிகரான பண்புகளும் கடினத்தன்மையும் கொண்ட சேர்மமாக இது விளங்குகிறது[1].

பெரிலியம் கார்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் கார்பைடு
இனங்காட்டிகள்
506-66-1 N
ChemSpider 61480 Y
EC number 208-050-7
InChI
  • InChI=1S/C.2Be Y
    Key: UQVOJETYKFAIRZ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 68173
  • [Be][C][Be]
  • [Be]=C=[Be]
பண்புகள்
CBe2
வாய்ப்பாட்டு எடை 30.04 g·mol−1
தோற்றம் மஞ்சள்நிறப் படிகங்கள்
மணம் மணமற்றது
அடர்த்தி 1.90 கி செ.மீ−3 ( 15 °செ யில்)
உருகுநிலை 2,100 °C (3,810 °F; 2,370 K) (சிதைவடையும்)
சிதைவடையும்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பெரிலியம், கார்பன் ஆகிய தனிமங்களை 900 பாகை செல்சியசு என்ற உயர் வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் பெரிலியம் கார்பைடைத் தயாரிக்கலாம். இதுபோலவே எரிலியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1500 பாகை வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் ஒடுக்கவினை நிகழ்ந்தும் பெரிலியம் கார்பைடு உண்டாகிறது.

2BeO + 3C → Be2C + 2CO

தண்ணீரில் பெரிலியம் கார்பைடு மிகவும்மெதுவாகச் சிதைவடைகிறது.

Be2C + 2H2O → 2BeO + CH4

இச்சிதைவடையும் வீதம் கனிம அமிலங்களில் மீத்தேன் வாயுவை வெளியேற்றி வேகமாக நிகழ்கிறது.

Be2C + 4 H+ → 2 Be2+ + CH4

இருந்தாலும் சூடான அடர் காரங்களில் இவ்வீதம் மிகவும் வேகமாக நிகழ்கிறது. இவ்வினையின் இறுதியில் காரவுலோக பெரிலேட்டும் மீத்தேனும் உருவாகின்றன.

Be2C + 4OH → 2 BeO22− + CH4

மேற்கோள்கள்

தொகு
  1. Beryllium Carbide Info American Elements Retrieved June 11, 2009.

இவற்றையும் காண்க

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிலியம்_கார்பைடு&oldid=3222559" இலிருந்து மீள்விக்கப்பட்டது