பெருக்கல் சார்பு
எண் கோட்பாட்டில் பெருக்கல் சார்பு (multiplicative function) என்பது ஒரு எண்கணிதச் சார்பு ஆகும். n ஒரு நேர்ம முழுஎண் எனில், பெருக்கல் சார்பு f(n) இன் மதிப்பு கீழ்க்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது:
- , (a, b சார்பகா எண்கள்)
- முழுமையான பெருக்கல் சார்பு
பெருக்கல் சார்பின் வரையறையானது சார்பகா எண்களுக்கு மட்டுமல்லாது அனைத்து நேர்ம முழுஎண்களுக்கும் பொருந்துவதாக இருந்தால் அச் சார்பு, முழுமையான பெருக்கல் சார்பு (completely multiplicative அல்லது totally multiplicative) என அழைக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
தொகு- என வரையறுக்கப்படும் மாறிலிச் சார்பு , ஒரு முழுமையான பெருக்கல் சார்பு.
- என வரையறுக்கப்படும் முற்றொருமைச் சார்பு முழுமையான பெருக்கல் சார்பு
- (k ஒரு சிக்கலெண்)
என வரையறுக்கப்படும் அடுக்குச் சார்பு ஒரு முழுமையான பெருக்கல் சார்பு.
இதன் சிறப்பு வகைகள்:
- .
- மீபொவ (n,k):
k ஐ ஒரு நிலையான முழுஎண்ணாகக் கொண்டால்n , k இரண்டின் மீப்பெரு பொது வகுத்தியானது, n மீதான பெருக்கல் சார்பாகும்.
-ஐ விடப் பெரியதல்லாததாகவும், -ஐப் பகாத எண் ணாகவும் (அ-து, -உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது) இருக்கும் நேர்ம முழு எண்களின் எண்ணிக்கையைத் தரும் ஆய்லரின் டோஷண்ட் சார்பு ( (n)) ஒரு பெருக்கல் சார்பு
- வரையறை
- n ஒரு வர்க்கக்காரணியற்ற நேர் முழு எண் மற்றும் அதன் பகாக் காரணிகளின் எண்ணிக்கை இரட்டையெண் எனில்:
- μ(n) = 1
- n ஒரு வர்க்கக்காரணியற்ற நேர் முழு எண் மற்றும் அதன் பகாக் காரணிகளின் எண்ணிக்கை ஒற்றையெண் எனில்:
- μ(n) = −1
- n க்கு ஒரு பகாக்காரணி வர்க்க எண்ணாக இருந்தால்:
- μ(n) = 0
மோபியஸ் சார்பு (n) ஒரு பெருக்கல் சார்பு.
நேர் வகுஎண்களின் கூடுதல் சார்பு, x ஒரு மெய்யெண் அல்லது சிக்கலெண் எனில்,
- ,
என வரையறுக்கப்படும் நேர் வகுஎண்களின் கூடுதல் சார்பு σx(n) ஒரு பெருக்கல் சார்பு.
இதன் சிறப்புவகைகள்:
- , n இன் நேர் வகுஎண்களின் மொத்த எண்ணிக்கை,
- , n இன் நேர் வகுஎண்களின் கூடுதல்.
பண்புகள்
தொகுf(n) ஒரு பெருக்கல் சார்பு மற்றும் n வெவ்வேறான பகா எண்களின் அடுக்குகளின் பெருக்கமாக, n = pa qb ..., எழுதப்பட்டால்:
எடுத்துக்காட்டு:
- எனில்:
இதேபோல:
பொதுவாக, f(n) ஒரு முழுமையான பெருக்கல் சார்பு மற்றும் a, b இரண்டும் ஏதேனும் இரு நேர் முழுஎண்கள் எனில்:
டிரிழ்ச்லெட் தொடர்
தொகுசில பெருக்கல் சார்புகளுக்கான டிரிழ்ச்லெட் தொடர்கள்:
மேற்கோள்கள்
தொகு- Weisstein, Eric W. "Multiplicative Function." From MathWorld--A Wolfram Web Resource. http://mathworld.wolfram.com/MultiplicativeFunction.html