இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

(பெரும்பிடுகு முத்தரையர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த தஞ்சாவூரை கி.பி. 705 முதல் 745 வரை ஆட்சி செய்த அரசர் ஆவார்.[1] இவர் மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். இவர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலப்பரப்பை ஆண்ட  மன்னராவார்.[2][3]நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் இவர் கலந்து கொண்டார்.[4] 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், திருச்சி நகரில் இவரது சிலை நிறுவப்பட்டது.[5] பிறகு 2002 ஆம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்படுகிறது[6].

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
ஆட்சிக்காலம்அண். 705 – அண். 745 CE
முன்னையவர்மாறன் பரமேசுவரன்
பின்னையவர்சாத்தன் மாறன்
பிறப்புசுவரன் மாறன்
23 மே 675 CE
இறப்பு745
அரசமரபுமுத்தரையர் வம்சம்
தந்தைஇளங்கோவதிரையர்
மதம்இந்து[சான்று தேவை]

வாழ்க்கை

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மே 23 கி.பி.675 பிறந்தார்.[7] இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்ற இளங்கோவதிராயர். 705 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்துகொண்டு பாண்டிய, சேர படைகளை எதிர்த்து 12 போர்களில் போரிட்டுள்ளார்.[8] நாலடியார் நூலில், இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது.[9] [10]இவர் தமிழ் புலவர்கள் பலரை ஆதரித்து தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன.[11]

போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்கள்[12]

  1. கொடும்பாளுர்
  2. மணலூர்
  3. திங்களூர்
  4. காந்தலூர்
  5. அழுந்தியூர்
  6. காரை
  7. மரங்கூர்
  8. புகழி
  9. அண்ணல்வாயில்
  10. செம்பொன்மாரி
  11. வெண்கோடல்
  12. கண்ணனூர்

சிறப்புப்பெயர்கள்

  1. ஸ்ரீ சத்ரு மல்லன்
  2.  ஸ்ரீ கள்வர் கள்வன்
  3. ஸ்ரீ அதிசாகசன் 
  4. ஸ்ரீ மாறன் 
  5. அபிமான தீரன் 
  6. சத்ரு கேசரி
  7. தமராலயன்
  8. செரு மாறன் 
  9. வேல் மாறன் 
  10. சாத்தன் மாறன் 
  11. தஞ்சைக் கோன்
  12. வல்லக் கோன் 
  13. வான் மாறன்[13]

மேற்கோள்கள்

  1. Subramania, T. S. (2 July 2010). "Chola Splendour". Frontline 27 (13). http://www.frontline.in/static/html/fl2713/stories/20100702271312300.htm. பார்த்த நாள்: 2017-01-26. 
  2. ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை, ed. (1962). சோழர் கோயிற் பணிகள். மெட்ராஸ் ஜீவன் பதிப்பகம். p. 18. செந்தலேக் கல்வெட்டால் முத்தரையர் என்ற குறுநில மன்னர் தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி ஆகிய நிலப் பரப்பை ஆண்டு வந்த செய்தி புலனுகின்றது. {{cite book}}: no-break space character in |editor1-last= at position 20 (help); no-break space character in |quote= at position 103 (help)
  3. கே.கே. பிள்ளை, ed. (2000). தமிழக வரலாறு மக்களும் பண்பாடும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 212. குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியூவர்கள் முத்தரையர்கள். முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும் குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என் பான் ஆவான் {{cite book}}: no-break space character in |quote= at position 8 (help)
  4. N. Subrahmanian. Social and cultural history of Tamilnad, Volume 1. Ennes, 1993 - History. p. 66.
  5. பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை. தினமணி நாளிதழ். 23 மே 2020. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  திருச்சி மாநகரில் உள்ள பாரதிதாசன் சாலையில் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவி திறந்து வைத்தார். {{cite book}}: no-break space character in |quote= at position 66 (help)
  6. "King Mutharaiyar remembered". The Times of India. 24 May 2017. https://timesofindia.indiatimes.com/city/trichy/king-mutharaiyar-remembered/articleshow/58814432.cms. பார்த்த நாள்: 2018-01-14. 
  7. Hindu, The. "King Mutharaiyar remembered". hindu (Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/King-Mutharaiyar-remembered/article14768038.ece. பார்த்த நாள்: 2 April 2017. 
  8. Hudson, D. Dennis (2008). The Body of God: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram. Oxford University Press. p. 721. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19045-140-0.
  9. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
    கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும். 200

  10.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார். 296

  11. டாக்டர். மா. இராசமாணிக்கனார், ed. (1944). பல்லவர் வரலாறு. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  சென்னை-18. p. 307. முத்தரையரும் தமிழும் (கி.பி. 700-800) தஞ்சையை ஆண்ட முத்தரையர்க்குத் தமிழ்ப்பற்று மிக்கிருந்தது. அவருள் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இருந்தவன் பெரும் பிடுகு முத்தரையன் சுவரன் மாறன் என்பவன் இவன் புலவர் பலரை ஆதரித்தவன்; இவனைப் புகழ்ந்து (1) பாச்சில் வேள் நம்பன், (2) ஆசாரியர் அநிருத்தர், (3) கோட்டாற்று இளம்பெருமானார், (4) குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை செந்தலையில் உள்ள சிவன்கோயில் கல்வெட்டுகளில் காண்கின்றன. அவற்றால் இம்மன்னன் அழுந்தியூர், மனலூர், கொடும்பாளுர், காரை, கண்ணனூர், அண்ணல்வாயில் என்ற இடங்களில் நடந்த போர்களில் வெற்றி பெற்றவன் என்பது தெரிகிறது. இனி, ஒவ்வொரு புல்வரையும் அவர் பாடிய பாக்களையும் பற்றிக் காண்போம். {{cite book}}: line feed character in |publisher= at position 14 (help); line feed character in |quote= at position 38 (help)
  12. நடன. காசி நாதன் எம். ஏ, ed. (1981). களப்பிரர். தமிழ் நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை. p. 27. சுவரன் மாறன் பல போர் புரிந்து பல ஊர்களை வென்றி ருக்கிறான். கொடும்பாளுர், மனலூர், திங்களுர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாரி, வெண்கோடை, புகழி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டுப் பகைவர்களை வென்றிருக்கிறான். {{cite book}}: no-break space character in |quote= at position 7 (help)
  13. நடன. காசி நாதன் எம். ஏ, ed. (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம் சென்னை. p. 52.