பெர்க்கிலியம்(III) குளோரைடு
பெர்க்கிலியம்(III) குளோரைடு (Berkelium(III) chloride) என்பது BkCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்க்கிலியம் முக்குளோரைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 603 பாகை செல்சியசு வெப்பநிலையில் பெர்க்கிலியம்(III) குளோரைடு உருகும். நீரில் கரையும். பச்சை நிறத்தில் காணப்படும். இச்சேர்மம் அறுநீரேற்றை (BkCl3 6H2O) உருவாக்கும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
20063-16-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21149391 |
| |
பண்புகள் | |
BkCl3 | |
வாய்ப்பாட்டு எடை | 353.36 கி/மோல் |
தோற்றம் | பச்சை நிறத் திண்மம் |
உருகுநிலை | 603 °C (1,117 °F; 876 K)[1] |
கரையும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் |
புறவெளித் தொகுதி | P63/m |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபெர்க்கிலியம்(III) குளோரைடு முதன்முதலில் 1970 ஆம் ஆண்டில் ஐதரசன் குளோரைடு வாயு மற்றும் பெர்க்கிலியம்(IV) ஆக்சைடு அல்லது பெர்க்கிலியம்(III) ஆக்சைடு ஆகியனவற்றைச் சேர்த்து 520° செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது.[2]
- Bk2O3 + 6HCl → 2BkCl3 + 3H2O
வினைகள்
தொகுபெர்க்கிலியம்(III) குளோரைடு பெரிலோசீனுடன் வினைபுரிந்து பெர்க்கிலோசீனை (Bk(C5H5)3) உற்பத்தி செய்கிறது.[3] இது ஆக்சாலிக் அமிலத்துடன் வினைபுரிந்து பெர்க்கிலியம் ஆக்சலேட்டை உருவாக்குகிறது. இந்த ஆக்சலேட்டு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து ஈடுபடும் வினை பெர்க்கிலியம்(III) குளோரைடு சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[4]
கட்டமைப்பு
தொகுநீரிலி வடிவ பெர்க்கிலியம்(III) குளோரைடு ஓர் அறுகோண படிக அமைப்பைக் கொண்டுள்ளது. யுரேனியம் முக்குளோரைடுடன் ஒத்த கட்டமைப்பை பெற்று hP6 என்ற பியர்சன் குறியீட்டை கொண்டுள்ளது. உருகுநிலையை எட்டும் வரை சூடாக்கும்போது, இது நேர்சாய்சதுரக் கட்டமைப்பு கட்டத்திற்கு மாறுகிறது.[2] அறுநீரேற்று வடிவ பெர்க்கிலியம்(III) குளோரைடு ஒற்றைச் சரிவச்சு படிகக் கட்டமைப்பில் a = 966 பைக்கோமீட்டர், b = 654 பைக்கோமீட்டர் மற்றும் c = 797 பைக்கோமீட்டர் என்ற அளவுருக்களுடன் அமெரிசியம் முக்குளோரைடு அறுநீரேற்றின் படிகக் கட்டமைப்பை ஒத்துள்ளது.[5] அறுநீரேற்று வடிவ பெர்க்கிலியம்(III) குளோரைடில் BkCl2(OH2)6+ என்ற நேர் மின்னயனியும், Cl− என்ற எதிர்மின் அயனியும் உள்ளன.
அணைவுச் சேர்மங்கள்
தொகுCs2NaBkCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட அணைவுச் சேர்மமான சீசியம் சோடியம் பெர்க்கிலியம் குளோரைடு அறியப்படுகிறது. பெர்க்கிலியம்(III) ஐதராக்சைடு, ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் சீசியம் குளோரைடு ஆகியவை சேர்ந்து வினைபுரிவதால் இந்த அணைவுச் சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Holleman, Arnold F. and Wiberg, Nils Textbook of Inorganic Chemistry, 102 Edition, de Gruyter, Berlin 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1
- ↑ 2.0 2.1 J. R. Peterson; B. B. Cunningham (1968). "Crystal structures and lattice parameters of the compounds of berkelium—II: Berkelium trichloride" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 3 (3): 823–828. doi:10.1016/S0898-8838(08)60204-4Get.
- ↑ Peter G. Laubereau; John H. Burns (1970). "Microchemical preparation of tricyclopentadienyl compounds of berkelium, californium, and some lanthanide elements" (in en). Inorg. Chem. 9 (5): 1091–1095. doi:10.1021/ic50087a018.
- ↑ J. R. Peterson; J. P. Young; D. D. Ensor; R. G. Haire (1986). "Absorption spectrophotometric and x-ray diffraction studies of the trichlorides of berkelium-249 and californium-249". Inorg. Chem. (en) 25 (21): 3779–3782. doi:10.1021/ic00241a015.
- ↑ John H. Burns; Joseph Richard Peterson (1971). "Crystal structures of americium trichloride hexahydrate and berkelium trichloride hexahydrate" (in en). Inorg. Chem. 10 (1): 147–151. doi:10.1021/ic50095a029.
- ↑ Peterson J. R. and Hobart D. E. "The Chemistry of Berkelium" in Harry Julius Emeléus (Ed.) Advances in inorganic chemistry and radiochemistry, Volume 28, Academic Press, 1984 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-023628-1, pp. 29–64, எஆசு:10.1016/S0898-8838(08)60204-4