பெர்நால்டியா பாண்ட்டுரேடா
பெர்நால்டியா பாண்ட்டுரேடா (தாவர வகைப்பாட்டியல்: Fernaldia pandurata Echites panduratus)(பொதுவான பெயர்: லோரோக்கோ) என்பது கொடி இரகத்தைச் சேர்ந்த உண்ணத் தகுந்த ஒரு மலரினத்தைச் சேர்ந்ததாகும். இது எல் சால்வடார், குவாத்தமாலா மற்றும் நடு அமெரிக்காவின் பிற நாடுகளிலும், மெக்சிகோவின் சில பகுதிகளிலும் பரவலாக உள்ளது.[1][2][3] "லோரோக்கோ" என்ற பெயர் மெசோ-அமெரிக்கா முழுவதும் இந்த இனத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[4]
Loroco | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. panduratus
|
இருசொற் பெயரீடு | |
Echites panduratus A. DC. (1844) | |
வேறு பெயர்கள் [1] | |
|
பண்புகள்
தொகுகொடி இரகமான குற்றுச்செடி இரகத்தைச் சார்ந்த இதன் இலையின் பரப்பு 4-13 செ.மீ. நீளமாகவும்,1.5-8 செ.மீ அகலமாகவும், இதன் மஞ்சரித் தொகுப்பு இலைப்பகுதியை விட சிறியதாகவும் 8-18 மலர்களை கொண்டதாகவும், மலர்க்காம்பு 4-6மி.மீ. நீளமும், சூலகம் 1-2 மி.மீ, நீளமும், புல்லிவட்டம், அல்லிவட்டம் வெண்மைத்தன்மை கொண்டதாகவும் வெளிப்பகுதியில் பச்சை நிறமாகவும் அமைந்துள்ளது.[4]
பயன்கள்
தொகுகுவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோரில் இத்தாவரம் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். இத்தாவரத்தின் மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவைகளைப் பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரித்து உண்ணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Echites panduratus A.DC. உலகத் தாவரங்கள் இணைநிலை. Retrieved 30 July 2023.
- ↑ Davidse, G. & al. (eds.) (2009). Flora Mesoamericana 4(1): 1-855. Universidad Nacional Autónoma de México, México, D.F.
- ↑ Morales, J.F. (2009). Estudios en las Apocynaceae neotropicales XXXIX: revisión de las Apocynoideae y Rauvolfioideae de Honduras. Anales del Jardin Botanico de Madrid 66: 217–262.
- ↑ 4.0 4.1 Azurdia, César; Loroco (Fernaldia pandurata, Apocynaceae), a Mesoamerican species in the process of domestication
- León, J., H. Goldbach & J. Engels, 1979: Die genetischen Ressourcen der Kulturpflanzen Zentralamerikas., Int. Genbank CATIE/GTZ in Turrialba, Costa Rica, San Juan de Tibás, Costa Rica, 32 pp.
- Morton, J. F., E. Alvarez & C. Quiñonez, 1990: Loroco, Fernaldia pandurata (Apocynaceae): a popular edible flower of Central America. Economic Botany 44, 301–310.
- S. Facciola (1990). Cornucopia. A source book of edible plants. Kampong.