பெலிக்சு சார்டியாக்சு
பெலிக்சு சார்டியாக்சு (Félix Sartiaux) (1876-1944) பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்த பொறியியலாளர் மற்றும் அமெச்சூர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் போசியா படுகொலையை நேரில் பார்த்தார். [1]
சார்டியாக்சு பாலிடெக்னிக்கில் பட்டம் பெற்றவர் ஆவார். பிரெஞ்சு வடக்கு ரயில்வே நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். 1913 ஆம் ஆண்டில், பண்டைய நகரமான ஓல்ட் போசியாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள பிரெஞ்சு அரசால் நியமிக்கப்பட்ட அன்த்தோலியா தீபகற்பத்திற்கு பயணம் செய்தார். [1] 1914 ஆம் ஆண்டு போசியாவிற்கு இவர் மேற்கொண்ட இரண்டாவது பணியின் போது, இவரும் இவரது அகழ்வாராய்ச்சிக் குழுவும் [1] உதுமானிய மற்றும் துருக்கிய பேரரசு ஒழுங்கற்றவர்களால் நகரத்தின் வன்முறை கொள்ளை மற்றும் படுகொலைகளைக் கண்டனர். சார்டியாக்சு மற்றும் அவரது மூன்று உதவியாளர்கள், தங்கள் வீடுகளில் பிரெஞ்சு கொடிகளை ஏற்றினர். மேலும் தப்பியோடிய கிரேக்கர்களுக்கு தங்குமிடம் வழங்கினர். சுமார் 700 முதல் 800 பேர் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் படகுகள் மூலம் கிரேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டனர். படுகொலைக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளின் வரிசையை விவரிப்பதில் சார்டியாக்ச்சின் ஆவணப்படுத்தப்பட்ட சாட்சியங்களும் புகைப்படங்களும் விலைமதிப்பற்றவை.
1919 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், முதலாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து, சார்டியாக்சு உட்பட பல போகேயர்கள் போசியாவுக்குத் திரும்பினர். ஆனால் சுமிர்னா எரிக்கப்பட்ட பின்னர் 1922 ஆம் ஆண்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர். சார்டியாக்சு பிரெஞ்சு மொழியில் படுகொலை நிகழ்வுகள் உட்பட அவரது தொல்பொருள் பணிகளின் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார். [2] சார்டியாக்சின் புகைப்படங்கள், குறிப்புகள் மற்றும் கடிதங்கள் பல்வேறு காப்பகங்களில் கண்டுபிடிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் கிரேக்க புகைப்பட வரலாற்று ஆசிரியர் காரிசு யாகோமிசு ( கிரேக்கம்: Χάρης Γιακουμής மூலம் வெளியிடப்பட்டது.) [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Emre Erol. The Ottoman Crisis in Western Anatolia: Turkey’s Belle Epoque and the Transition to a Modern Nation State, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0857728814, I.B.Tauris, 2016.
- ↑ Félix Sartiaux, Le sac de Phocée et l'expulsion des Grecs Ottomans d'Asie Mineure en Juin 1914, Revue des deux mondes 24 (1914): 654–86.
- ↑ Haris Yiakoumis. Phocée 1913-1920; le témoignage de Félix Sartiaux பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2915936064, Picard - Kallimages, 2008